2013 மற்றும் 2014 ம் ஆண்டுக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தமிழ் மாநில பொதுக்குழு தேனியில் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடந்து வருகிறது. மாநில பொதுக் குழுவின் முதல் நாளான 4.01.2013 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை தாங்கி துவக்கவுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது தமிழ் மாநில பணிகளைக் குறித்த ஆண்டறிக்கையையும் தேசிய செயலாளர் முஹம்மது அலி ஜின்னா தேசிய அளவில் நடந்த பணிகளைக் குறித்த ஆண்டறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
அதன் பின் இரண்டாம்
நாளான 5.01.2013 இன்று அடுத்த இரண்டாண்டிற்கான (2013 மற்றும் 2014) தமிழ்
மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேசிய தலைவர் கே.எம்.ஷரீப்
மற்றும் தேசிய செயலாளர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தேர்தலில் கீழ் கண்டவாறு மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் - ஏ.எஸ். இஸ்மாயில் (கோவை)
துணைத்தலைவர் - முஹம்மது ஷேக் அன்சாரி (சென்னை)
பொதுச்செயலாளர் - ஏ. காலித் முஹம்மது (மதுரை)
செயலாளர்-1 - முஹம்மது ரஸீன் (ராமநாதபுரம்)
செயலாளர்-2 - முஹம்மது இலியாஸ் (மதுரை)
பொருளாளர் - ஃபைஜல் அஹமது (கன்னியாகுமரி)
மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் உரையாற்றுகிறார் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக