அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

உரிமை மீறல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உரிமை மீறல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 01, 2013

சென்னையில் மார்ச் 7-இல் தர்ணா போராட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் அறிவிப்பு

நேற்று திருச்சி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மாநில தலைவர் இஸ்மாயில் பத்திரிக்கை நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 22/01/2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும்மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். 

திங்கள், செப்டம்பர் 10, 2012

சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய சாலை மறியல் போராட்டம்

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும், இடிந்த கரை பகுதியில் இருந்து காவல்துறையினர் உடனடியாக வெளியேற வலியுறுத்தியும், போராட்டக் குழுவினரோடு முதல்வர் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியும், கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி இன்று (10-09-2012) மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது. 

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

ஈரானில் நடக்கும் அணி சேரா மாநாட்டில் பங்கேற்க பான் கி மூனுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

வாஷிங்டன்: ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில், ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் பங்கேற்பதை, அமெரிக்கா  எதிர்த்துள்ளது. ஈரான் நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குறைகூறி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

கோவையில் துவக்க நிகழ்ச்சி: சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!

சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டு காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இட ஒதுக்கீடு வழங்க மறுத்தல், போலி என்கவுண்டர், பொய் வழக்கு போன்றவற்றை குறிப்பிடலாம். 1990க்கு பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வெளியே விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த TISS (டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி மகாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும்.

சனி, ஆகஸ்ட் 04, 2012

அரசு அதிகாரிகள், மாணவர்கள் நோன்பு நோற்கத் தடை!

முஸ்லிம்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் வழிபாடுகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பு நோற்பதை அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கடைப்பிடிக்கக் கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.  
 
ரமலான் மாதத்தில் முஸ்லிம்களின் மத நடவடிக்கைகளான நோன்பு நோற்றல், மசூதிகளுக்குச் செல்லுதல் போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு சீன அரசு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களைக் கேட்டுக் கொள்ளும் வாசகங்கள் சீன அரசின் பல இணையங்களிலும் இடம் பெற்றுள்ளன.

புதன், ஜூலை 18, 2012

கர்நாடகா : கல்லூரி மாணவிகள் “ஸ்கார்ப்” அணிய தடை!

மங்களூர் மாவட்டத்தின் சித்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ ராமா கன்ஜெஷ்வர் முதல் தர கல்லூரி.

பி.ஏ, பி.காம், பி.பி.எம். போன்ற பாடங்கள் பயிற்றுவிக்கப்படும், இந்தக்கல்லூரியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 250. இதில், முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 104.

'கோட்டா'-வில் சேர்ந்த ஏழை மாணவர்களை அவமானப்படுத்தும் பெங்களூர் பள்ளி!


 

அனைவருக்கும் கல்வியுரிமை அவசியம் என்ற அடிப்படையில் மத்திய அரசு கல்வியுரிமைச் சட்டத்தை இயற்ற உயர் மத்தியதர வர்க்க, மற்றும் பணக்காரப் பிள்ளைகளைச் சேர்த்து கொள்ளை அடித்து வந்த பல பள்ளிகளுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி போராட்டத்தில் குதித்தன.
இந்தச் சட்டத்தின் படி 25% கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கும் இடமளித்தாகவேண்டும். இது பல கல்வி நிறுவனங்களுக்கு கடும் ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் உச்சகட்ட விளைவுதான் இந்த சம்பவம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்து போராட்டம்


(புகைப்படத்தில்..... SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லன் பாகவி அவர்களும் மற்றும் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்திய தமிழ் மாநில தலைவர் A,S, இஸ்மாயில் சாஹிப் மற்றும் இந்திய தொவ்ஹித் ஜமாத்தின் தேசிய தலைவர் S.M. பக்கர், அ ச உமர் பாரூக், மற்றும் மேலை நாசர் அவர்களும்)

புதன், ஜூன் 27, 2012

இராமநாதபுரம் காவல்துறையின் சூழ்ச்சி முறியடிப்பு – கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் விடுதலை!

PFI மாநிலச் செயலாளர் ஜனாப்.காலித் முஹம்மத் 
பெரியப்பட்டிணம்: இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செவ்வாய், ஜூன் 26, 2012

ஸ்பெயினைப் போல் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்...

[உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் பெயர்களில் எத்தனையோ வீதிகள்! சாலைகள்!! நகரங்கள்!!!
வரலாற்றைத் திருத்தி - திரித்து - எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.


இராணுவம், காவல் துறை, அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இத்தனைக்கும் இலக்காக்கி நிற்கும் முஸ்லிம்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.
இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன.
இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!
இஸ்லாமும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பாமர முஸ்லிம்களால் தான் வரலாறு நெடுகிலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் முஸ்லிம் மக்கள் தொகையில் 95 சதவிகித்தினர். வசதியான முஸ்லிம்கள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் பாமர முஸ்லிம்களைக் குறை காண்பதிலும் உயர்ஜாதி இந்துக்களுக்கு துதிபாடுவதிலும்தான் தங்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.]
 ஸ்பெயினைப் போல் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்...
   வி.டி. இராஜசேகர்  
கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.
இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.

திங்கள், ஜூன் 25, 2012

கோவையில் NWF நடத்திய 7 ஆண்டு கழித்த ஆயுள்சிறைவசிகளை விடுதலை செய்ய கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

கோவையில் நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்ட்  ஜூன் 24, மாலை 3.00  மணிக்கு  7 ஆண்டு கழித்த ஆயுள்சிறைவசிகளை விடுதலை செய்ய கோரி நடத்திய மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் எழுச்சி உடன் துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர்  A.S.இஸ்மாயில் .அவர்கள் உரை நிகழ்த்தி துவங்கி வைத்தார். அதை தொடர்ந்து பேரணி NWF -ன் மாநில தலைவர் பாத்திமா ஆலிமா அவர்கள் தலைமையில்  1000 கணக்கான பெண்கள்  பேரணியாக  செஞ்சிலுவை சங்கம்   நோக்கி எழுச்சி பயணமாக ஆர்ப்பாட்ட  திடலை அடைந்தனர். 

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை M .பெனாசிர் .- மாவட்ட தலைவர்
தலைமையுரை : M .ஹபீப் நிஷா.- மாநில செயலாளர் .
சிறப்புரை : பவானி ப .மோகன் . NCHRO மாநில தலைவர்
                     பாத்திமா ஆலிமா.  NWF  மாநில தலைவர்
நன்றிஉரை : ஷர்மிலா- மாவட்ட செயலாளர்

வியாழன், ஜூன் 21, 2012

கத்தீல் சித்தீகி கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

கதீல் சித்தீகி 
புதுடெல்லி:குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீல் சித்தீகி கொலைச் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கு பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா-சவூதி புலனாய்வு ஏஜன்சிகள் இணைந்து கைது செய்த ஃபஸீஹ் அஹ்மதின் விவகாரத்தில் நிலவும் மர்மத்தை விலக்க மத்திய அரசு தயாராக வேண்டும் என்றும் செயற்குழு கோரிக்கை விடுத்தது.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படையால் கைது செய்யப்பட்ட கத்தீல் சித்தீகி தீவிர பாதுகாப்பு மிகுந்த சிறையில் வைத்துக் கொலைச் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தீல் மெளனம் பாலிக்கவேண்டும் என விரும்பிய சிறை-போலீஸ்-புலனாய்வு ஏஜன்சிகளுக்கு தெரியாமல் இந்த கொலை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அரசு இவ்விவகாரத்தில் காட்டும் மெளனத்தை கலைக்கவேண்டும்.

வியாழன், மே 24, 2012

நமது மீடியாக்களின் நிலைமை இன்று எப்படி இருக்கிறது நீதிபதி மார்கண்டேய கட்ஜு விளக்கம் !!!

ஊடகங்களை விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார் உண்மை வார்த்தைகள் மூலம்..! நீதிபதி மார்கண்டேய கட்ஜு. நமது மீடியா மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை செய்கிறது. பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது. மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. 
முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.

வியாழன், மே 17, 2012

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் புகார்

K M சரீப் 
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய பதிமூன்று பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் புகார் செய்தது என்பதை பாப்புலர் ஃபிரண்டின் தேசிய பொது செயலாளர் இன்று பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பின்பும் அவதூறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் தான் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக ஒழுங்கு முறை ஆணையத்தை பாப்புலர் ஃபிரண்ட் அணுக நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.

வியாழன், மே 03, 2012

நாளிதழ் செய்திகள்

உயிருக்குப் போராடும் உண்ணாவிரதப் போராளிகள்

மதுரை : மதுரையில் கோவில் மற்றும் ஆடிட்டோரியம் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் இருந்த டிபன் பாக்ஸில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அச்சைக்கிள் முழுமையாய் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

அவதூறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

KM ஷரீப், தேசிய பொதுச் செயலாளர், PFI
புது டெல்லி, 21/4/2012: சட்ட நடவடிக்கைக்கு தேவையான முதல் பணியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசியச் செயலாளர் K.M.ஷரீப் அவர்கள் டைனிக் ஜாக்ரன் ஹிந்தி நாளிதழ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ், தி ஆசியன் ஏஜ் ஆங்கில நாளிதழ், IBN-7 ஹிந்தி காட்சி ஊடகம், டெக்கான் குரோனிகள் ஆங்கில நாளிதழ், டைம்ஸ் நவ் ஆங்கில காட்சி ஊடகம், நவ் பாரத் டைம்ஸ் ஹிந்தி நாளிதழ், தி இன்குலாப்

திங்கள், ஏப்ரல் 23, 2012

இலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

இலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே

புதன், ஏப்ரல் 18, 2012

காஸ்மி விவகாரம்:பிரதமர் தலையிட உ.பி முதல்வர் அகிலேஷ் கோரிக்கை!


உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் 
லக்னோ:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பில் அநியாயமாக பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது காஸ்மியின் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பிரதமரை அவரது

வியாழன், ஏப்ரல் 12, 2012

பாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு யாத்திரை

புதுடெல்லி, ஏப்ரல் 12: இன்று தீவிரவாத தாக்குதல்களும், சட்டவிரோத கைதுகளும் தேசத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அதேசமயம் தேசத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் உருமாறி வருகின்றது என்பதை நாம் அறிவோம். தீவிரவாத தாக்குதல்களினாலும், சட்ட விரோத கைதுகளாலும்

புதன், மார்ச் 14, 2012

இஸ்ரேலின் தூண்டுதலால்தான் காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளார் - பாப்புலர் ஃப்ரண்ட்

செய்யத் முஹம்மத் காஜ்மியை அழைத்துச் செல்லும் அதிகாரிகள்
புதுடெல்லி:  மூத்த பத்திரிக்கையாளரான செய்யது முஹம்மது காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூண்டுதலினால் தான் இந்திய அரசு காஜ்மியை கைது செய்துள்ளது என்பதற்கான வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

 சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்தின் காரில் குண்டுவெடித்தது. இதற்கு ஈரான் தான் காரணம் என எந்த ஆதாரமுமில்லாமல் இஸ்ரேலும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டின. இஸ்ரேலிய உளவுத்துறையினர் கொடுத்த செய்தியின் அடிப்படையில் காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்த அரசு கூறுகிறது. இது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக திகழும் இஸ்ரேலிய உளவு நிருவனமான மொஸாத்தின் உள‌வாளிகளே நேரடியாக இந்தியா வந்து காஜ்மியை விசாரிக்க இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முன்னர் இஸ்ரேலிய தூதரின் கார் குண்டுவெடிப்பில் ஈரானிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வந்த இந்தியா தற்போது தன்னுடைய கருத்தை மாற்றியிருக்கிறது. இதிலிருந்தே இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்திலும், பாதுகாப்புத்துறையிலும் இஸ்ரேலின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை நன்றாக உணரலாம்.

பத்திரிக்கையாளர் காஜ்மி ஈரான் நாட்டு உளவு நிறுவனத்தின் உளவாளி என்று நம்பப்பட்டுவருகிறது. தன்னுடைய எழுத்தின் மூலமாக இஸ்ரேலை விமர்சனம் செய்த ஒரே காரணத்திற்காக இக்குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார். இக்கைது சம்பவத்தின் மூலம் இஸ்ரேல் தனக்கு எதிராக செயல்படும் பத்திரிக்கைகளையும், நிருபர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பலஸ்தீனத்தில் அத்துமீறி அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் செயல்களை பல பத்திரிக்கைகளுக்கும் இவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

இதே போன்று இஸ்ரேலுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது தேசிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே காரணத்திற்காக இதே குண்டு வெடிப்பு வழக்கில் பாப்புலர் ஃப்ரண்டை இணைக்க உளவுத்துறையினரும், ஊடகங்களும் முயற்ச்சி செய்து வருகின்றது. நமது உள்நாட்டு விவகாரங்களிலும், வெளியுறவுக்கொள்கைகளிலும் இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது நம் நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்ககூடியது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

காஜ்மியை கைது செய்தது ஒட்டுமொத்த பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதாகும். காஜ்மியை கைதுசெய்த அதிகாரிகள் அதற்கான காரணத்தை முறையாக தெரிவிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. மேலும் மத்திய அரசு எந்த வெளிநாட்டு உளவு நிறுவனங்களையும் இந்திய மண்ணில் விசாரணைக்கு அனுமதிக்ககூடாது என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. காஜ்மி கைது செய்யப்பட்டதை கண்டித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாராட்டுகிறது.

இவ்வாறு தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

தேடுதல்