KM ஷரீப், தேசிய பொதுச் செயலாளர், PFI |
புது டெல்லி, 21/4/2012: சட்ட நடவடிக்கைக்கு தேவையான முதல் பணியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசியச் செயலாளர் K.M.ஷரீப் அவர்கள் டைனிக் ஜாக்ரன் ஹிந்தி நாளிதழ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ், தி ஆசியன் ஏஜ் ஆங்கில நாளிதழ், IBN-7 ஹிந்தி காட்சி ஊடகம், டெக்கான் குரோனிகள் ஆங்கில நாளிதழ், டைம்ஸ் நவ் ஆங்கில காட்சி ஊடகம், நவ் பாரத் டைம்ஸ் ஹிந்தி நாளிதழ், தி இன்குலாப் உர்து நாளிதழ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ், தி சண்டே கார்டியன் ஆங்கில வார இதழ் மற்றும் CNN-IBN ஆங்கில காட்சி ஊடகம் ஆகியவற்றிற்கு எதிராக சட்ட அறிக்கையை அனுப்பியுள்ளார். இந்த பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அடிப்படையற்ற மற்றும் பங்கம் விளைவிக்கும் செய்திகளை பிரசுரிக்கவும்/ஒளிபரப்பவும் செய்துள்ளன.
இந்த சட்ட அறிக்கையை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான பகர் U. பர்கி மற்றும் மரூப் அஹமத் ஆகியோர் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் தொடர்பு அதிகாரி M.K.ஷர்புதீன் அவர்கள் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்து புளுதி வாரித் தூற்றும் தி சண்டே பயனீர்-க்கு எதிராக இந்திய பத்திரிக்கை மன்றத்தில் (PRESS COUNCIL OF INDIA) புகார் அளித்துள்ளார்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களின் தொடர் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் இயக்கத்திற்கு எதிராக செய்திகளும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டு நம் பார்வைக்கு வருவது ஒன்றும் பொதுவானதல்ல. ஊடகத்தின் இது போன்ற தாக்குதல்கள் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் நடக்கிறது என்று வரையறுக்க முடியாது. சமீபத்தில் வெளியான ஒரு குறிப்பிட்ட செய்தி பல்வேறு மாநிலங்களிலுள்ள பத்திரிக்கைகளில் பல மொழிகளிலும் பிரசுரமானது. இது போன்ற செய்திகள் பாப்புலர் பிரண்ட் காலூன்றாத மாநிலங்களிலும், மிக சொற்பமாக உள்ள மாநிலங்களிலும் உள்ள பத்திரிக்கைகளால் பிரசுரிக்கப்படுகிறது என்பது ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது. பிரசுரமாகும் இது போன்ற கட்டுரைகள் பெரும்பாலும் அபத்தமானதாக இருக்கிறது. மேலும் விவேகமுள்ள வாசகர்களை ஊடகத்தின் மீதான நம்பிக்கை குறித்து ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்கத் தூண்டுகிறது.
இது போன்ற கட்டுரைகளை வெளியிடும்போது ஊடகத்தின் நெறிமுறைகள் அடிக்கடி காசைக்கொண்டு சுண்டிப் பார்க்கப்படுகிறது. செய்தியின் நம்பகத் தன்மை குறித்து எந்த விதமான சரிபார்ப்பு பணிகளும் பத்திரிக்கையாளர்களால் பார்க்கப்படுவது இல்லை. கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைகளைப் பார்க்கும் போது நம்மால் ஏராளமான ஊடக அறிவிற்குப் பொருந்தாத மற்றும் அப்பட்டமான பாரபட்சங்களை சுட்டிக்காட்ட முடியும்.
சமீபத்தில் வெளியான ஒரு சில செய்திகளைப் பார்க்கும் போது நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். அதாவது, இது போன்ற ஊடகத் தாக்குதல் தற்செயலாக நடப்பதல்ல. மாறாக, பாப்புலர் பிரண்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டு வரும் மிகப்பெரிய சதியின் ஒரு பகுதியாகும். ஒட்டுமொத்த ஊடகங்களும் இதுபோன்ற பக்கச்சார்பு நிலையைக் கடைபிடிக்கின்றன என்று குற்றம் சாற்றமுடியாது. உண்மையில் ஊடகத் துறையிலுள்ள ஒரு சில பிரிவைச் சார்ந்தவர்கள் மட்டும் சங்க பரிவார சித்தாந்தமான வெறுப்பை உமிழும் போக்கின் பக்கம் சாய்ந்துள்ளனர். இது போன்ற ஊடகத்தை சார்ந்தவர்களால், முஸ்லிம் சமூகத்தைப் பற்றியும், முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் முஸ்லிம் அமைப்புகளைப் பற்றியும் வெறுக்கும் போக்கு அவர்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. தீவிரவாதம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஊடகங்கள் எவ்வாறு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தின என்று கடந்த காலங்களில் பார்த்தோம். உதாரணத்திற்கு, பெங்களூரைச் சேர்ந்த Dr. ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட போது, ஆஸ்திரேலியப் பத்திரிக்கைகள் ஹனீப் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முக்கியப் பங்காற்றியது. அதே நேரத்தில் இந்திய ஊடகங்கள் அவர் ஒரு தீவிரவாதி என்று மக்கள் மனதில் பதிக்க முனைப்போடு செயல்பட்டதை கூறலாம். முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த தொழில் சார்ந்த நிபுணர்களும் இதே போன்ற அளவுகோலால் பார்க்கப்பட்டனர். முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறினால் பயங்கரவாத அமைப்பில் சேர அதிகமான வாய்ப்புள்ளதா என்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இது போன்ற சிறிய பிரச்சினையை வைத்துக் கொண்டு கருத்துக் கணிப்புகள் நடத்தின. மாணவர்கள் கொல்லப்பட்ட பாட்லா ஹவுஸ் போலி மோதல் கொலையைக்கூட (FAKE ENCOUNTER KILLING) ஊடகங்கள் நியாயப்படுத்தின. இதைக் கொண்டு முஸ்லிம் மாணவர்களின் மீது அவப்பெயரை ஏற்படுத்த முனைந்தன. குறிப்பாக, அஜம்கரிலிருந்து வரும் எல்லா மாணவர்களையும் குற்றப் பார்வை பார்க்க வைத்தது. இந்த உதாரணங்களைக் கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும். முஸ்லிம்களையும், முஸ்லிம் அமைப்புகளையும் இலக்காகக் கொண்டு செய்திகளை திரித்து வெளியிடுவது அவ்வபோது ஓய்வு நேரத்தில் ஊடகத்தின் ஒரு சிறிய பிரிவைச் சேர்ந்தவர்களால் நடத்தப் படுவது இல்லை.
- பயங்கரவாத அமைப்பு PFI தடை செய்யப்பட்டது - டைனிக் ஜாக்ரன்
- உ.பி.காவல் துறை இன்னும் வாரணாசி வழக்கை முடிவுக்குக் கொண்டுவரவில்லை: PC - ஹிந்துஸ்தான் டைம்ஸ்
- PFI தேசிய தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டது - தி ஆசியன் ஏஜ்
- உளவுத் துறை தகவல்: PFI-க்கும் SIMI-க்கும் தொடர்பு உள்ளது - IBN 7
- PFI ஆலோசனைக் கூட்டம்: இருட்டில் தடுமாறும் உளவுத்துறை - டெக்கான் குரோனிகள்
- கேள்வி கேட்க தொண்டர்களைப் பயிற்றுவிக்கும் PFI: டைம்ஸ் நவ்
- குண்டு வெடிப்பு: உளவுத்துறை கண்காணிப்பின் கீழ் 3 அமைப்புகள்: நவ் பாரத் டைம்ஸ்
- அயல் நாட்டுத் தூதர் மீதான தாக்குதல், PFI மீது சந்தேகம் - டைனிக் ஜாக்ரன்
- டெல்லி கார் குண்டு வெடிப்பு: PFI-இன் பங்கு துப்பு துலங்கியது: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் & CNN - IBN
- உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் PFI - தி இன்குலாப்
- புலனாய்வு அமைவனம் (IB) அறிக்கை: தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றிய பயங்கரவாத PFI - தி சண்டே கார்டியன்
- ஒட்டு அரசியலின் துயரங்களுக்கு எதிராக முஸ்லிம்களை தூண்டும் SIMI & SIMI ஆதரவுக் கட்சி எச்சரிக்கை NIA - சண்டே பயனீர்
பெரும்பாலான மீடியாக்கள் குற்றஞ்சாட்டி வருகின்ற ஒரு விஷயம் என்னவெனில்
பாப்புலர் ஃப்ரண்டிற்கும் தடைசெய்யப்பட்ட இயக்கமான "சிமி"க்கும் தொடர்பு
உண்டு என்ற செய்திதான். இவ்வாறு செய்தி குறிப்பிட்ட பத்திரிகைகளை தொடர்பு
கொண்டு கேட்டதற்கு யாருக்குமே தெரியாத இரகசிய பாதுகாப்பு துறை அதிகாரிகள்
தான் இதனை தெரிவித்தனர் என கூறுகிறார்கள். பாப்புலர் ஃப்ரண்டிற்கு சிமி
இயக்கத்தோடும், இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தோடும் தொடர்பு உண்டு என கற்பனை
கதைகள் பல்வற்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கான எந்தவொரு ஆதாரத்தையும்
அவர்கள் வெளியிட்டதாக தெரியவில்லை. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் வேறு எந்த இயக்கத்திற்கும்
தொடர்பு இல்லை. இத்தகைய செய்திகள் எப்பொழுதுமே தங்களுக்கு கிடைத்த
செய்தியின் பின்னனியை வெளியிடுவதில்லை. "உளவுத்துறை" என பெயர்
வைத்துக்கொண்டு இதுபோன்ற முட்டாள்தனமாக செய்திகளை பத்திரிகைகளுக்கு
கொடுப்பது என்பது உளவுத்துறையினரின் தொடர்கதையாகிவிட்டது.
இப்பேற்பட்ட ஊடகங்கள் நடத்துவது கபட நாடகம் என்பது தெளிவாகிறது. காரணம்
இத்தகைய குற்றச்சாட்டிற்கான மறுப்புகளை நாம் வெளியிடும்போது அதனை
பிரசுரிப்பதே இல்லை. இத்தகைய செய்திகளுக்கான ஆதாரங்கள் என்ன என்பதை
அப்பதிரிகைகளிடம் கேட்டபின்பும் இது வரை எந்த பதிலும் வரவில்லை. இத்தகைய
செய்திகள் அவர்களுக்கு கிடைக்கும்போதும் கூட இது தொடர்பான உண்மையை அறிந்து
கொள்வதற்கு ஒரு முறை கூட இந்த ஊடகங்கள் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்பு
கொண்டதில்லை. எல்லாவிதமான தீவிரவாத செயல்களுக்கு எதிராகவும், தேசிய
பாதுக்காப்பிற்கு எதிராக செயல்படும் அனைத்து சக்திகளுக்கு எதிராகவும்
பாப்புலர் ஃப்ரண்ட் தீவிரமாக போராடி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.
இருந்தபோதிலும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தீவிரவாத செயல்களுக்கும்,
தேசவிரோத செயல்களிலும் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்பு படுத்த முயற்சிகள்
நடந்து கொண்டிருக்கிறது.
மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் "தயினிக் ஜக்ரன்" என்ற
பத்திரிகை மத்திய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் தடை
செய்யப்பட்டுவிட்டதாகவும், அதன் தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டதாக
செய்தி வெளியிட்டிருந்தது. இத்தகைய செய்திகள் இந்தியர்கள் உண்மையை புரிந்து
கொள்வதற்கு போதுமானதாக இருக்கும் என கருதுகிறோம். பதிவு செய்யப்பட்ட
இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் தடைசெய்யப்பட்டுவிட்டதாக வெளியிட்ட
பத்திரிகையின் செய்தியை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?
இந்தியாவிலேயே மிகப்பெரிய சமூக நல இயக்கமாக செயல்பட்டு வரும்
பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கம் என்று செய்தி
வெளியிடுவது என்பது ஏதோ ஏதேர்ச்சையாகவோ அல்லது தவறுதலாக நடந்த ஒன்றோ அல்ல,
மாறாக அதன் வளர்ச்சியை தடுக்கவும், மக்களிடம் இருக்கும் ஆதரவை தடுக்கவும்
இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுகிறது. சென்ற காலங்களில் பாப்புலர்
ஃபர்ண்ட் ஆஃப் இந்தியா தென் இந்தியாவில் மட்டுமே இயங்கக்கூடிய இயக்கமாக
இருந்து வந்தது. ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக வட இந்தியாவில் பல்வேறு
மாநிலங்களில் கால்பதித்து வேகமாக வளந்து வருகிறது. கடந்த வருடம் நவம்பர்
மாதம் புது டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற "சமூக நீதி மாநாட்டில்"
திரண்ட மக்கள் வெள்ளமே இதற்கு சாட்சியாகும். வட இந்தியாவில் வேகமாக வளந்து
வரும் வேளையில் சங்கப்பரிவார்களின் தூண்டுதலின் பேரிலேயெ இத்தகைய
செய்திகள் வெளியிடப்படுகிறது.
இதனையெடுத்து இவ்வாறான அவதூறு செய்திகளுக்கு சட்டப்பூர்வமாக நடவடிக்கை
எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து
அப்பத்திரிகைகளுக்கு எதிராகவும், செய்தி நிறுவனங்களுக்கு எதிராகவும்
நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் மேலும் பத்திரிகை சங்கத்திற்கு இந்த
செய்தியினை கொண்டு சென்று அவதூறுகளை வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை
எடுக்க வலியுறுத்தப்படும்.
இவ்வாறு கே.எம்.ஷரீஃப் செய்தி வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு கே.எம்.ஷரீஃப் செய்தி வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக