தலைமையுரையாற்றும் இப்ராகிம் பாதுஷா அவர்கள் |
கோவை: முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த
சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக
முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக
உயர்த்தக்கோரியும், தேசிய அளவில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்
பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில்
மத்தியில் 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து
கடந்த நான்கு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெருமுனை
கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள்
மூலம் பிரச்சாரம், வாகனப் பேரணி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக்
கூட்டங்கள், கண்காட்சிகள் ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தில் தொடர்
பிரச்சாரத்தை நடத்தி வந்தது.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 22
அன்று சென்னை, தஞ்சை, கோவை, மதுரை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில்
மாபெரும் கோரிக்கை பேரணி மற்றும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
கோவையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராகிம் பாதுஷா அவர்களின் தலைமையில், கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து துவங்கிய மாபெரும் கோரிக்கைப் பேரணியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் எ.காலித் முஹம்மத், கோவை மாவட்டத் தலைவர் கே.ராஜா உசேன், கோவை மாவட்டச் செயலாளர் எ.முஸ்தபா, கோவை வடக்கு மாவட்டத் தலைவர் ஜே.முஹம்மத் ரசூல், சேலம் மாவட்டத் தலைவர் எ.முஹம்மத் ஃபயாஸ், திருப்பூர் மாவட்டத் தலைவர் பி.முபாரக் பாஷா ஆகியோர்களுடன் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இப்பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணி பால சுந்தரம் சாலை வழியாக அவினாசி சாலையைக் கடந்து செஞ்சிலுவை சங்கத்தை அடைந்தது.
அங்கு நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத் தலைவர் பிலால் ஹாஜியார் அவர்கள் முன்னிலையில் கோவை மாவட்டத் தலைவர் கே.ராஜா உசேன் அவர்கள் வரவேற்புரையாற்ற, மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராகிம் பாதுஷா அவர்கள் தலைமையுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் KKSM தெஹ்லான் பாகவி அவர்களும், பாப்புலர் ஃபிரண்டின் மாநிலச் செயலாளர் காலித் முஹம்மது அவர்களும் சிறப்புரையாற்றினர்.
கோவை வடக்கு மாவட்டத் தலைவர் ஜே.முஹம்மது ரசூல், சேலம் மாவட்டத் தலைவர் எ.முஹம்மது ஃபயாஸ், திருப்பூர் மாவட்டத் தலைவர் பி.முபாரக் பாஷா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீன்மானங்களை வாசித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். கோவை மாவட்ட செயலாளர் எ.முஸ்தபா அவர்கள் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
நாளை 23/4/2012 அன்று மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம் பாதுஷா அவர்களின் தலைமையில், மாவட்டத் தலைவர் கே.ராஜா உசேன் அவர்களும், மாவட்டச் செயலாளர் எ.முஸ்தபா அவர்களும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்கவிருக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்
தலைவர்கள் கோசமிடும்போது எடுத்த படம் |
மாநிலப் பொதுச் செயலாளர் எ.காலித் முஹம்மத் சிறப்புரையாற்றுகிறார் |
SDPI மாநிலத் தலைவர் KKSM தெஹ்லான் பாகவி சிறப்புரையாற்றுகிறார் |
பேரணியில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக