அயல்வாசிகளை அடக்கிய அஜீமுல்லா
அஞ்சா நெஞ்சம் படைத்த அஜீமுல்லா அவர்கள் பகதூர்ஷா வின் வேண்டுகோளையேற்று ஊர் ஊராகச் சென்று சுதேசி மன்னர்களின் ஆதரவோடு அந்நியர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்.
பிரிட்டிஷ் தளபதி "ஹோப்கிரேன்ட்" டிற்கு இவர் எழுதிய கடிதம் வெள்ளை வர்க்கத்தையே உலுக்கியது.
இவரின் அனல் பறக்கும் பிரச்சாரத்தின் விளைவாக தேசத்தின் பல இடங்களில் புரட்சி வெடிக்க ஆரம்பித்தது.
பல இடங்களில் நடந்த விடுதலை போராட்டத்தின் ஆணிவேராக இருந்து எத்தனையோ கிரமங்களுக்கு மத்தியில் வெள்ளையனை எதிர்த்து போராடி வெற்றி கண்டார்.
இந்தியா இங்கிலாந்தின் அடிமை நாடல்ல என்ற உணர்வுடன் ஆங்கிலேயே தளபதி வெல்சுடன் 12 நாட்கள் அறப்போர் புரிதார். கடைசியாக, வெல்ஸ் இவரிடம் பணிந்து சமாதானம் செய்து கொண்டார். "பேலிகரா" ஊரிலும் நம் நாட்டு விடுதலைக்காக போரிட்டு வெற்றி வாகைச் சூடினார்.
அப்படிப்பட்ட வீரரை நாம் நினைவு கூற வேண்டாமா? நம் சமுதாயத்தின் பெரியவர்கள் செய்த தியாகங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்து சொல்ல வேண்டாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக