வீர பாண்டிய கட்டபொம்மனுடன்
வீர முஸ்லிம்கள்
தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரவாற்று நாயகர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டப்பொம்மன். இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்தித்த கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல். அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை,
மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்…
- என்று பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் புகழ்கிறது. (செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.36)
கட்டபொம்மன் படையில் வீராகளாகவும் ஏராளமான இஸ்லாமியர் இருந்திருக்கின்றனர். அவர்கள் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை வாய்பேச முடியாதவர் என்ற பொருளுடைய MOOKAH என்னும் உருது வார்த்தையால் அழைத்ததைக் கர்னல் வேல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டபொம்மன் ராமநாதபுரத்திற்குச் சென்று (24-08-1798) கலெக்டர் ஜாக்சனிடம் போரிட்டு திரும்பிய வீரப் படையில் (10-09-1798) வீர முஸ்லிம்களான முஹம்மது தம்பி, யூக லப்பை, குப்பை ராவுத்தர், இஸ்மாயில் ராவுத்தர் ஆகிய போர்த்தளபதிகள் கலந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் காணக் கிடைக்கும் அறிய செய்திகளாகும்.
இச்செய்திகள் தென்னகத்தின் முதல் போராளிகளுடனும் இணைந்து இம்மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் புரிந்தவர்கள் இஸ்லாமியர் என்பதை வெளிப்படுத்துகின்றன. (செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.38)
alhamdulillah lot of islamic warriors sacrifice thier soul for our nation.................
பதிலளிநீக்கு