அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

இந்திய சுதந்திரப் போராட்டமும், முஸ்லிம்களும் - 1

இந்தியாவில் 65 வது சுதந்திரத்தைக் கொண்டாடப்போகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!
இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்ட வர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

"இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்" என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாலுகின்ற அவலம் இங்குமட்டுமே! சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே!.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூலித்து தந்தவர்கள் நினைக்கலாம், ஆதவனை கரங் கொண்டு மறைத்துவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது. 
(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்