ரியாத் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் (IFF) – ரியாத் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்து ( நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) கடந்த 05 ஆகஸ்ட் 2011 வெள்ளிக்கிழமை ரியாதில், அல்ஹைர் அல்உவைதா தோட்டத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கியது.
மகத்துவமிக்க ரமலானின் சிறப்புகள் குறித்து தமிழ், மலையாளம், கண்னடம் மற்றும் உருதுவில் சொற்பொழிவாற்றப்பட்டது.
மேலும் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரத்தின் சமூகசேவைகள் குறித்த புகைப்பட தொகுப்புகளும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சார்ந்த சுமார் 3000 மக்கள் ஆண்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியினை இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரத்தின் ரியாத் மண்டல ஒருங்கிணைப்புக்கமிட்டி உறுப்பினர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக