அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

இந்திய சுதந்திரப் போராட்டமும், முஸ்லிம்களும் - 14

முதல் இந்திய சுதந்திரப் போர் - 
 "சிப்பாய் புரட்சி" 


இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது 1857 -இல் நடந்த சிப்பாய் கலகம் ஆகும். 

கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது.

கிழக்கிந்திய கம்பெனியிடம். அக்கினிக் குஞ்சுகள் போல் மக்களிடம் இருந்துவந்த வெறுப்பு ஒன்றுகூடி பறங்கியரை எதிர்த்த ஆண்டு அது.

ஆங்கிலேயர் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அவர்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய சிப்பாய்களுக்குப் பிறந்த ஆண்டு அது.

சிப்பாய்  புரட்சி உருவாக்கம் :
1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப் பிரிட்டீஷார் அறிமுகம் செய்தனர். ஆத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எளிதாக வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக்கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்தோட்டாக்களைப் பொதிந்திருந்த மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில் தடவப்பட்டிருந்த பன்றி - பசுக் கொழுப்பு வாயில்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட (ஹராம்) உணவு ஆகும். பிராமணர்களும் பிற சைவர்களும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். எனவே தங்கள் வாயில் பன்றி - பசுக்கொழுப்பு படுவதை இருசாரரும் வெறுத்தனர். கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட என்ஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது. 

அந்த நேரத்தில் வங்காளம் பராக்பூரில் முகாமிட்டிருந்த 34-வது படைப்பிரிவு புரட்சியை ஆரம்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது இப்படைப் பிரிவிலுள்ள இந்திய சிப்பாய்களுக்கு கல்கத்தாவின் அருகில் தங்கியிருந்த அலி நத்ஹிகான் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்தான் ஆதரவும் தூண்டுதலும் அளித்து வந்தார்.

பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன் இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர்.

அவ்வாறு எதிர்த்தவர்கள் விலங்கிடப்பட்டு, ராணுவ உடைகள் கிழித்தெறியப் பட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அவமாப்பட்ட குதிரைப்படை வீரர்கள் சிறைகளை உடைத்துக் கைதிகளை விடுவித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது கர்னல் பின்னஸ் போன்ற அதிகாரிகளையும், ஏராளமான பிரிட்டீஷாரையும் கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு தீயிட்டனர்.

பகதூர்ஷா
அந்நிய ஆட்சி வீழ்க! 

பேரரசர் பகதுர்ஷா வாழ்க! 

- என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.

இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார். நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.

கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.

பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது. அதில் கைதான - கொல்லப்பட்ட - தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

ஆங்காங்கு இருந்த படைப்பிரிவுகளிலிருந்து மேலும் மேலும் சிப்பாய்கள் டெல்லியைக் கைப்பற்றும் இந்த எழுச்சிமிக்க பயணத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

அவத்தும் பைரேலியும் மீட்கப்பட்டன. மே மாதம் 11ம் தேதி டெல்லி நமது சிப்பாய்களின் வசமானது. 

இரண்டாம் பகதூர்ஷாவை மன்னராக்கி, கிராம பஞ்சாயத்து மாதிரியில் ‘ஜல்ஜா’ கமிட்டி அமைத்தனர். ஒவ்வொரு படைப்பிரிவிலும் இருந்து அதற்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. அந்தக் கமிட்டிக்கே முழு அதிகாரமும்.

“உழுபவர்களுக்கே நுலம் சொந்தம்”
“கந்துவட்டிக்காரர்களை விசாரணையின்றி நடுவீதியில் தண்டிப்பது”
“இந்தியருக்கு மட்டுமே வாணிபம் செய்யும் உரிமை”
“அரசு அலுவலகங்களில் இந்தியருக்கே பணீ”
“சிப்பாய்களுக்கு நியாயமான ஊதியம்”
போன்ற புரட்சிகரமான, முற்போக்கான பனிரெண்டு கட்டளைகள் அறிவிக்கப்பட்டன.

வெகு சீக்கிரத்தில் ஆங்கிலேயர்களுக்கு இருந்த தகவல் தொடர்பு சாதன வசதிகள் மூலம் இந்தப் புரட்சியை ஒடுக்கினர். மெட்ராஸ், கூர்க்கா, பஞ்சாப் படைப்பிரிவுகளால் ஆங்கிலேயர் இந்த முறியடிப்பை செய்ய முடிந்தது. 
கடுமையான போரில் இறுதியில் 1857 செப்டம்பர் 20ம் தேதி ஆங்கிலேயர் மீண்டும் டெல்லியை கைப்பற்றினர்.


வட இந்தியாவில் அப்புரட்சியின் பாலமாக முஸ்லிம்கள் இருந்ததால், முஸ்லிம்களை விடக்கூடாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர், கலகத்தை ஒடுக்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை சகல நிலைகளிலும் இழப்புக்குரியவர்களாக்கினர். முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 

1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.

சிப்பாய் புரட்சியில் முஸ்லிம் பக்கீர்கள்:

1857 ல் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய வீரர்களிடம் பிரிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள் ஏற்படுத்தினார்கள்.  

ஆயிரக்கணக்கான பக்கீர்கள் பல இடங்களுக்கும் சென்று சிப்பாய்கள் மனதில் விடுதலைத்தீயை மூட்டினர். ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.


சிப்பாய் புரட்சியில் உலமாக்கள்:

அந்தப் போதகர்கள் (மௌல்விகள்) ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள் பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவரப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் ஹிருதயத்தில் சுதந்திர உணர்ச்சியையும் தேச பக்தியையும் குமுறி எழும்படி செய்தார்கள்.
 
2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் ஃபத்வா வழங்கினர். என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

ஆனால் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெரு மக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.

இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை. 

கான்களின் சிப்பாய் புரட்சி :

இந்திய விடுதலை வீரர் சுபேதார் கான் என்பவர் கிபி.1857 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வங்காள சேனையிளிருந்து கும்பேனி  ஆட்சிக்கு எதிராக  புரட்சி செய்தமைக்காக தன் தலையை இழந்தார்.  தன் உயிரை விட  இந்திய விடுதலையே தலையாய கடமை என்ற உணர்வோடு வாழ்ந்த அவரின் சரித்திரத்தை மறைக்கப்பட்டு,வெளி உலகிற்கு தெரியாமலே மறைத்து விட்டார்கள். 

1857 ஆம் ஆண்டு மே மாதம்௧31 ந்தேதி திடீரென புரட்சி செய்ய திட்டமிட்டு தேசத்தின் பல பாகங்களிலும் அதனை பரவச் செய்து வெள்ளையர்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கி வெற்றி வாகை சூடியவர் "அலி நாஹிகான்" ஆவார். இவரைத் தொடர்ந்து பகதூர் கான் என்ற மாவீரரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டார். 


நிறைவாக...

முதல் இந்திய சுதந்திரப் போர் - சிப்பாய் புரட்சியில் ஈடுபட்டவர்களில் - கொல்லப்பட்டவர்களில் - நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மை முஸ்லிம்கள் தான். 

இதை நம் நாடு மறந்துவிட்டது, 

நம் நாட்டு மக்கள் மறந்துவிட்டனர், 

ஏன்? நாமே மறந்துவிட்டோம்!

அப்படி நாம் மறந்த, வரலாற்றில் மறக்கப்பட்ட, முதல் இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட முஸ்லிம் மாவீரர்களை (குறிப்பாக - பகதூர்ஷா ஜாபர், பேகம் மஹல், அஹமதுல்லாஹ் ஷா, Etc...) பற்றிய வரலாறுகளை பின் வரும் நாட்களில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்