அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

இந்திய சுதந்திரப் போராட்டமும், முஸ்லிம்களும் - 12

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில்
முதல் மக்கள் இயக்கம்

ஹாஜி ஷரியத்துல்லா
காந்திஜியின் வருகைக்குப் பின்னர்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு வெகுஜன இயக்கமாக – மக்கள் இயக்கமாக மாறியது. இதற்கு முன்னோடியாக 19-ஆம் நூற்றாண்டில் சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பெரய்ஸி இயக்கம் (Farizis Movement) என்ற மக்கள் இயக்கததைக் கூட்டியவர் கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்த ஹாஜி ஷரியத்துல்லா (Haji.Shariathullah) ஆவார்.

வங்காளத்தின் வடக்கு மாவட்டங்களில் 1820-களில் கரம்ஷா (Karam Shah) வும் அவர் மகன் திப்பு (Thipu) வும் நடத்திய ஆன்மிக – அரசியல் இயக்கம்தான் இந்த பெரய்ஸி இயக்கத்துக்கு முன்னோடி. 
ஜமீன்தார்களின் கொடுமைக்கு ஆளாகும் விவசாயிகளின் குடி உரிமைகளுக்காகப போராடிய திப்பு, 1825 -இல் செராபூர் பகுதியைக் கைப்பற்றி ஆட்சிஅமைத்தார். ஆங்கில எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டி கோரா மலைப் பகுதிவரை தன் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தினார். 
1830 – களிலும் 1840 – களிலும் இப்பகுதிகள் ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்த – பிரச்சனைக்குரிய பகுதிகளாகத் திகழ்ந்தன. இவ்வியக்கத்தின் தாக்கம்தான் கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லாவைப் போராடத்தூண்டியது.

பிரிட்டீஷாருக்கு வரிவசூல் செய்து கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஜமீன் அமைப்பில், ஆளுவோரின் பிரதிநிதிகளான ஜமீன்தார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலகட்டம், கிழக்கு வங்காளத்தில் ஜமீன்தார்களின் அடக்குமுறைகளுக்கு ஆளான விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் தங்கள் முதலீடுகளையும் உழைப்பையும் வரி என்ற பெயரில் பறி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

உரிமை இழந்து வந்த இம்மக்களை ஒன்று திரட்டி, பரிதாபூரை மையப்படுத்தி ஹாஜி ஷரியத்துல்லாவும் அவர் மகன் தத்தோமியானும் நடத்திய மக்கள் இயக்கம்தான் பெரய்ஸி இயக்கம். இவர்களின் ஜமீன் எதிர்ப்பு நாளடைவில் ஜமீன் எஜமானர்களான பிரிட்டீஷாருக்கு எதிரான கிளர்ச்சியாக வெடித்தது. 
1839 முதல் 1857 வரை 18 ஆண்டுகள் இவ்வியக்கம் ஆங்கிலேயருக்குப் பல சிக்கல்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தத்தோமியான், புரட்சியைத் தூண்டியவர் என குற்றம் சுமத்தப்பட்டு 1860 – இல் தூக்கிலிடப்பட்டார்.

சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பிரிட்டீஷாருக்கு எதிராக நடைபெற்ற பெரய்ஸி இயக்கம்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் மக்கள் இயக்கம் என்பதை புதிய வரலாறு பதிவு செய்யட்டும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்