அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

ரமழான் - 15

நோன்பு தரும் ஆரோக்கியம் - 2


நோன்பு தரும் ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு சில விஷயங்களை நேற்று நாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இன்று உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.

1796ம் ஆண்டில் ரஷ்ய வைத்திய நிபுணர்கள் மாஸ்கோவில் நடத்திய ஆய்வின் முடிவாக நோயாளிகள் அவகளின் நோயைக் குணப்படுத்த வேண்டுமானால் சில வரையறைகளுடன் உணவை குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஏனெனில் நோன்பானது அஜீரணக் குறைபாட்டை நிவர்த்தி செய்கின்றது.
மேலும் மாஸ்கோ பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ‘ஸிபாஸிகி’ “தொடரான காய்ச்சல் மற்றும் நீண்டகால உடலியல் நோய்களுக்கும் நிவாரணமாக இருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நரம்புத் தொகுதியில் ஏற்படுகின்ற பாதிப்புக்களை நோன்பு குணப்படுத்தி நோயாளிகளின் உடம்புக்கு புத்துணர்வையும் ஆரோக்கியத்தையும் நோன்பு வழங்குகின்றது என்று 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய வைத்திய நிபுணர் ‘சாய்லன்த்’ குறிப்பிடுகின்றார்.
‘இத்வாரிக் தியவி‘ எனும் வைத்தியர் தைபோய்ட் காய்ச்சல்,என்னும் பலவகைப்பட்ட தீக்காயங்கள், வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் (ஜலபீதி) நோய், உடம்பு பொறுத்தல் போன்ற நோய்களுக்கு உணவை மட்டுப் படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வெற்றி கண்டுள்ளனர்.
நோயாளிகள் அதிகமாக உணவை உட்கொள்ளும்போது அவர்கள் மன உளைச்சலையும் களைப்பையும் அடைகின்றனர். நோயுற்றிருக்கும்போது மேலதிகமாக உட்கொள்ளப்படும் உணவு நோயாளிகளுக்கு பெரும் சுமையையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
நோன்பானது உடம்பில் உள்ள இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவுகிறது. நோன்பு நோற்காத வேளையில் குளுகோஸ் உடலுக்கு எவ்வாறான தொழிலை அற்றுகிறதோ அதே பங்களிப்பை நோன்புற்றிரிக்கும் போது அமிலப் பதார்த்தங்கள் உடலுக்கு சக்தியையும் தெம்பையும் வழங்குகின்றது.
நோன்பினால் ஏற்படும் உடலியல் ஆரோக்கியத்தை வைத்தியர்கள் மேலும் குறிப்பிடுகையில்; 
  1. உடம்பில் உள்ள மேலதிக பதார்த்தங்களை, சேர்மானங்களை அகற்றுவதோடு உடம்பில் நச்சு பதார்த்தங்கள் படிவதை தடுக்க வல்லது.  
  2. ஊட்டச்சத்துக்கள் உடம்பிலிருந்து இழைக்கப்படுவதை விட்டும் உடற்கலங்களை பாதுகாக்கிறது.  
  3. நாற்ப்பது வயதை அடைந்த ஒருவர் தொடர்ந்து இரண்டு வாரங்கள் நோன்பு நோர்ப்பாரானால் அவருடைய சுவாசத் தொகுதி 17 வயது இளைஞனுடைய சுவாசத் தொகுதி போன்று புதுப்பிக்கப்படுகிறது. 
என்ற கருத்தை அமெரிக்க வைத்திய நிபுனர்களான ‘கார்லோசோன்’,’ஹோர்ன்ட்‘ ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பல்வேறுபட்ட பயன்பாடுகளை உள்ளடக்கி அல்லாஹ் நோன்பை நமக்கு விதியக்கியுள்ளான். அருட்பாக்கியங்கள் நிறைந்த நோன்பை நோற்று இம்மையிலும் மறுமையிலும் நற்கூலிபெற முயற்சிப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்