அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

ரமழான் - 2

ரமழானை திட்டமிட்டு அனுபவிப்போம்  !

உலக  முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமழானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். புற ரீதியான வரவேற்பை விட அக ரீதியான வரவேற்பையே ரமழான் வேண்டி நிற்கின்றது.

 

வருடம்  தோறும் நம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் நம் வாசல் வந்திருக்கிறது. ஆனால் அந்த வசந்தத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத துர்பாக்கிய நிலை மாற வேண்டும்.

 

எனவே, நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமாக ரமழானை அணுக வேண்டிய தேவையுள்ளது.

 

இஸ்லாத்தை  கற்ற ஒவ்வொருவரும் ரமழானை உச்ச நிலையில் பயன்படுத்திக் கொள்வதோடு தன்னோடு இருப்பவர்களையும் அவ்வாறே பயிற்றுவிக்க வேண்டும்; ரமழானில் சிறந்ததோர் முன்மாதிரியாய் திகழ வேண்டும். அப்போதுதான் ரமழான் எந்த நோக்கத்திற்காய்நம்மை நோக்கி வருகின்றதோ அதனைப் பூரணமாக நிறைவேற்ற முடியும்.

 

எனவே, தனிநபர், குடும்பம், சமூகம் என அனைத்து சாராரையும் உள்ளடக்கிய ஒரு நேர திட்டத்தை அமைத்து அதன்படி சமூகத்தை வழிகாட்ட முயற்சிக்க வேண்டும். அப்போது ரமழான் புதியதொரு பரிணாமத்தை அடையுமென்பதில் ஐயமில்லை.

 

எனவே, ரமழானை திட்டமிட்டு அனுபவிப்போம் !

 

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்