அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

ரமழான் - 12

பொறுமையின் மாதம் 


ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு    அவன் இறைவழியில் உறுதியுடன் நிலைத்திருக்கவும், மன இச்சைகளைக் கட்டுப்படுத்திடவும் நோன்புகளின் வாயிலாக இம்மாதத்தில் பயிற்சியளிகப்படுகின்றது.

மனிதன் குறிப்பிட்ட ஒரு நேரத்திலிருந்து குறிப்பிட்ட  மற்றொரு  நேரம்  வரை   அல்லாஹ்வின் கட்டளைப்படி, உண்ணுவதில்லை, பருகுவதில்லை;  மனைவியிடம் செல்லுவதில்லை.

இதன் காரணத்தால் இறைவனுக்குக் கீழ் படிந்திட வேண்டும். எனும் உணர்வு அவனுள் தோன்றுகிறது.

இதன்   வாயிலாக மனிதன் தன உணர்வுகளையும், இச்சைகளையும், பசி, தாகத்தையும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது தன் வசத்திற்க்குள் வைத்திர்ப்பதர்க்கான பயிற்சி கிட்டுகின்றது. 

உலகில் ஓர் இறைநம்பிக்கையாளனுக்குரிய  உவமை போர்க்காலத்தில்
இருக்கும் படை வீரனைப் போன்றதாகும். அவன் சாத்தானிய விருப்பங்களையும் தீமையின் சக்திகளையும் எதிர்த்து போரிட வேண்டியுள்ளது.

அவனுக்குள்பொறுமையெனும் பண்பு இல்லாவிட்டால்,
 அவன் தன் மீது தாக்குதல்  தொடங்கிய உடனேயே தன்னை பகைவனிடம் ஒப்படைத்து விடுவான்.

எனவே நமக்கு கிடைத்த இந்த பொறுமையின் மாதத்தை சிறப்பாக பயன்படுத்துவோம்! அதற்கு அல்லாஹுத் தஹாலா நமக்கு நல்லருள் புரிவானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்