அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஆகஸ்ட் 17, 2011

கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நெல்லையில் நடத்த திட்டமிட்டிருந்தது. சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்ந்திடவும்,பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்திடவும் சுதந்திர அன்வகுப்பு மற்றும் சுதந்திர தின கொண்டாடங்களை பல ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆகிய  மாநிலங்களில் பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது.  

அதனடிப்படையில் இவருடம் மேலப்பாளையத்தில் சுதந்திர அணிவகுப்பை சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் இவ்வருடம் காவல்துறை வேண்டுமென்றே காலதாமதம் செய்து, நீதிமன்றத்தை அணுகக்கூட வாய்ப்பு கொடுக்காமல் அனுமதிமறுத்துள்ளது.

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை அதை எவர் தடுத்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்ற  செய்தியை நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம். காவல்துறை மற்றும் அரசின் இந்த உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் இன்று மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு இன்று மாலை 4.45 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.  இவ்வார்ப்பாட்டத்தில் கே.ராஜா உசேன் (மாவட்டத் தலைவர், பாப்புலர் ஃப்ரன்ட்) அவர்கள் தலைமை தாங்கினார், எ.ஃபக்ருதீன் (மாநில செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரன்ட்) அவர்கள்  கண்டன உரை நிகழ்த்தினார், கு.இராம கிருட்டினன் (மாநில பொதுச் செயலாளர், திராவிட கழகம்), சுசி.கலையரசன் (மாவட்டச் செயலார், விடுதலைசிறுத்தைகள் கட்சி), ம.பாலசிங்கம் (மாநகர செயலாளர், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை), ரா.ஆனந்தராஜ், வழக்கறிஞர் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், எ.முஸ்தபா (மாவட்ட செயலாளர், பாப்புலர் ஃப்ரன்ட்) அவர்கள் நன்றியுரையாற்ற இவ்வார்ப்பாட்டம் நிறைவுற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  பாப்புலர் ஃப்ரன்ட் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்து  கொண்டு தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரிக்கும் சில காட்சிகள்

மாநில செயற்குழு உறுப்பினர் ஃபக்ருதீன் அவர்களின் கண்டன உரை












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்