அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

கேரளாவில் சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை : நீதிமன்றம் சென்றது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கேரளாவில் பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். 

 

சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிப்பது நாட்டுமக்களின் உரிமைகளை தடுப்பதாக இருக்கிறது என பாப்புலர் ஃப்ரண்டின் கேரள மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி கருத்து தெரிவித்துள்ளார். கேரள காவல்துறையினர் விதித்த தடையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.


கேரள மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக புனலூர், சவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரசேரி ஆகிய நான்கு இடங்களில் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பை நடத்த இருப்பதாக இருந்தது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று கூறி காவல்துறையினர் 4 இடங்களிலும் அணிவகுப்பை நடத்துவதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. கேரளத்தில் சுதந்திர தின அணிவகுப்பு கடந்த 2004 முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் காவல் துறையினர் கூறுவது போல் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. கேரளாவில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்யின் காரணமாகவே சுதந்திர தின கொண்டாட்டம் மக்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டது. மேலும் சுதந்திர தின அணிவகுப்பை காண மக்கள கூட்டம் அதிகம் வருவதன் காரணமாகவே காவல்துறையினர் இந்நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளனர்.

இதிலிருந்து காவல்துறையினரின் அர்த்தமற்ற செயலையே விளக்குகிறது. எத்தனையோ அமைப்புகள் சுதந்திர தின கொண்டாடத்தை நடத்தி வரும் வேளையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி மறுப்பது என்பது நீதிக்கு புறம்பான செயலாகும். இது கேரள அரசாங்கத்தின் சிறுபான்மை விரோத போக்கையே காட்டுகிறது. மக்களிடம் சுதந்திர வேட்கை உருவாவதும், நாட்டுப்பற்றுமிக்கவர்களாக மாறுவது ஆளம் அரசாங்கத்திற்கு பெருத்த கவலையாக இருக்கிறது. அவர்கள் மக்கள் எழுச்சி பெற்வதை விரும்பவில்லை என்றே கூறலாம்.

மாநிலக்குழு இத்தடையை எதிர்த்து சட்டபூர்வமாகவும், ஜனநாயக ரீதியிலும் போராடும் என அஷ்ரஃப் மெளலவி தெரிவித்தார்.

கேரள காவல்துறையினர் விதித்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மனு ஒன்றை அளித்துள்ளது. இதன் விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்படுகிறது.

புனலூர், தமரசேரி, மஞ்சேரி மற்றும் சவக்காடு ஆகிய ஊர்களில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடக்கவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்தனர். இதனை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் கே. ராம் குமார் மூலம் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை பாப்புலர் ஃப்ரண்ட் அளித்துள்ளது.

freedom parade2
மழையாளத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
ஆர்.எஸ்.எஸ், மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எத்தனையோ அணிவகுப்புகள் நடத்திக்கொண்டிருக்க பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் அணிவகுப்பிற்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்க வேண்டும் என்ற ரீதியில் மனுதாரர் 4 மாவட்ட ஆட்சியரிடமும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு மட்டுமல்லாம் இன்னும் எத்தனையோ இயக்கங்களுக்கும், கட்சிகளுக்கும் அதே நாளில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அப்படி இருக்க பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தடைவிதிப்பது சட்டத்திற்கு புறம்பானதாகும். முஸ்லிம்கள் தங்களது தேச உணர்வை வெளிப்படுத்துவதற்கும், தங்களது தேசத்தின் சுதந்திரத்தை கொண்டாடுவதற்கும் தடை விதித்துள்ளனர் இந்த மாவட்ட ஆட்சியர்கள். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பிற்கும் காவல்துறையின தடை விதித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பிற்கு உயர் நீதி மன்றம் சென்று அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்