அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

ரமழான் - 11

செயல் வீரர்களை உருவாக்கும் பயிற்சி பாசறை 


ஒரு மனிதன் சுவனப் பாதையில் பிரவேசிப்பதர்க்கான அனைத்து ஏற்பாடுகளையும்  அல்லாஹ் மிக்க கச்சிதமாகச் செய்து பொறுப்பாளர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றான். அந்த அறைக்கூவலுக்கு செவிசாய்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

எனவே, பருவ வயதை அடைந்த ஒவ்வொரு ஆணும  பெண்ணும் தன்னை நரக நெருப்பிலிருந்து மீட்டெடுத்து சுவனப்பாட்டையில் பிரேவிசிப்பதர்க்கான   முயற்சியை மேற்கொள்வதோடு தனது பொறுப்பில் உள்ளவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது கடமையாகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்ற உறுதிபூணும் நமக்கு சில ஆலோசனைகள்.

1. "இந்த ரமழானின் முடிவில் நான் முத்தகீயாக மாறுவதோடு என் குடும்பத்தையும் அந்த நிலைக்கு உயர்த்தியே தீருவேன்" என்ற தீர்மானத்தை எடுப்போம்.

2. எடுத்த இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதர்க்கு உதவிசெய்து தருமாறு அல்லாஹ்விடம் உருக்கமாய் மன்றாடி வேண்டுவோம். 

3. தொழ, குர்ஆன் ஓத, துஆ செய்ய நேரத்தை ஒதுக்குவோம். எல்லாத் தரத்தில் உள்ளவர்களும் அவர்களது கடமைகள், பொறுப்புகள், உடல்நிலை, அறிவு, வயது, ஆற்றல் என்பவற்றுக்கேற்ப ரமழான் நேரதிட்டத்தை தயாரித்துக் கொள்வோம்.  

4. காலையிலும் மாலையிலும் சுய விசாரணை செய்து, நான் தக்வாவை அடைந்து கொள்ள எவ்வளவு தூரம் முயற்சிக்கின்றேன்; எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றேன் என்று மதிப்பீடு செய்து கொள்வோம். 

5. சோர்வும் அயர்வும் ஏற்படும்போது சுன்னத்தான வழிமுறைகளைப் பேணி சற்றுத் தூங்கி ஓய்வெடுப்போம். அதுவும் இபாதத் ஆகும்.

6. மற்றவர்களால் உணர்வுகள் தூண்டப்பட்டு கோபம் ஏற்ப்பட்டால் "நான் நோன்பாளி" என்று நமக்கு நாமே நினைவூட்டி பொறுமை காப்போம் .

இதோ அல்லாஹுத் தஆலா அழைப்பு விடுக்கின்றான். 

"உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சுவர்க்கத்துக்கும் விரைந்து வாருங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. இறையச்சமுடயவர்களுக்காகவே   அது  தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எத்தகையவர்களென்றால், மகிழ்ச்சியான நிலையிலும் துன்பம் நிறைந்த வேளையிலும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். 
அல்குர்ஆன் (3:133,134)

ரமழான் உண்டு, குடித்து, தூங்கி மகிழும் சோம்பேறிகளை உருவாக்கும் மாதமல்ல. உலகிலே அமைதியையும் சமாதானத்தையும் ஏற்ப்படுத்தி சுபிட்சமானதோர் உலகைக் கட்டியெழுப்பக் களமிறங்கிப் பணிபுரியும் செயல்வீரர்களை உருவாக்கும் பயிற்சிப் பாசறை என்பதை சதாவும் நினைபடுத்தி செயல்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்