அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கோவை அரசு மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து SDPI ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) சார்பில் கோவை அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அதன் தரத்தை உயர்த்தக் கோரியும் ஜூலை 28-ந்தேதி மாலை 5 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் கோவை மாவட்டத் தலைவர் V.M.அபுதாகிர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். ஏழை மக்கள் தங்களது சுகாதாரத் தேவைகளை அரசு மருத்துவமனைக்கு சென்று தான் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நோயிலிருந்து மீள வேண்டும் என்ற நோக்கோடு மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தால் நோயின் தாக்கம் அதிகமாகிவிடுமோ என்ற அச்சமே மிஞ்சுகிறது.

மருத்துவக் காப்பீடுகளுக்காக அரசு ஒதுக்கும் பல கோடி ரூபாய்களால் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. அதனால் பயன் பெரும் ஏழைகள் மிகவும் குறைவே.

மாறாக, அதே தொகையை அரசு மருத்துவமனைகளின் தரத்தை தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக உயர்த்துவதற்கும், காலியாக உள்ள இடங்களுக்கு தேவையான பணியாளர்களை நியமிப்பதற்கும், தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும் ஒதுக்கி, எந்த ஒரு நோயாளியையும் அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்காதவாறு பார்த்துக் கொண்டால் மருத்துவக் காப்பீட்டால் பலனடையும் ஏழைகளை விட மிக அதிகமானோர் பலனடைய முடியும்.

எனவே அரசாங்கமும், அரசு மருத்துவமனை நிர்வாகமும் இது விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மருத்துவமனையின் சுகாதார சீர்கேட்டை களைந்து, அதன் தரத்தை தனியார் மருத்துவமனைக்கு நிகராக உயர்த்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வார்ப்பாட்டத்தில் கேட்டுக் கொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI செயல் வீரர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்