இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில்
முதல் சுதந்திரப் பிரகடனம்
முதல் சுதந்திரப் பிரகடனம்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனம் 2.7.1943 - இல் சிங்கப்பூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸால் செய்யப்பட்டது. ஜப்பானியரின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government) - என்ற தற்காலிக சுதந்திர அரசை அறிவித்தார். அவ்வரசுக்கு ஆசாத் ஹிந்த் பவுச் (Azad Hind Fauj) - என்ற இந்திய தேசிய ராணுவத்தையும் தனி ரிசர்வ் பேங்க் ஒன்றையும் ஏற்படுத்தினார். அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய சுதந்திரக் கொடியை முதன்முதலாக அந்தமானில் 30.12.1943-இல் ஏற்றி ஆங்கிலேயரை அச்சம் கொள்ள வைத்தார்.
நேதாஜியின் இந்த இமாலய முயற்சிக்கு முன்னோடியாக, இந்திய மண்ணிலேயே ஆங்கிலேயருக்கெதிரான தனி சுதந்திர அரசுகளைப் பிரகடனப் படுத்தியவர்கள் இஸ்லாமியர்களாவர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனம் செய்த இஸ்லாமிய இயக்கம் வஹாபி இயக்கம் ஆகும்.
வஹாபி இயக்கம் :
சமய - சமுதாய சீர்திருத்த இயக்கமான வஹாபி இயக்கம் பின்னர் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட இயக்கமாக மாறியது.
ஹாஜி சரியத்துல்லா, தத்தோ மியான் ஆகியோரது வீழ்ச்சிக்குப் பின்னர் பெரய்ஸி இயக்கத்தைச் சார்ந்த தொண்டர்கள் இந்த வஹாபி இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
பாட்னாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட ஸையத் அஹ்மத் ரெய்பரேலி இந்திய தேசத்தைத் தாருல் இஸ்லாம் (Darul Islam) அதாவது 'இஸ்லாமியர்களின் உலகம்' என்ற சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தினார்.
இச்சுதந்திர அரசுக்கென மேற்குப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் தன் ராணுவத்தளம் அமைக்ப்பட்டது. இச்சுதந்திர அரசின் நோக்கம், 'இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காக ஜிஹாத் (புனிதப்பேர்) புரிவதாகும்'.
ஸையத் அஹ்மத் ரெய்பரேலியின் இச்சுதந்திர அரசம் அதன் முன்னணித் தலைவர்களும் ஆங்கிலேயரின் அடக்கு முறைகளால் சந்தித்த கொடுமைகள் ஏராளம்.
பாட்னாவில் விலாயத் அலி, ஹிமாயத் அலி ஆகியோர் தலைமையில் ஆங்கிலேயருக்கெதிரான புரட்சிகள் தொடர்ந்தன.
ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப் பிரதேச மாநிலம் ரெய்பரேலியில் 1786 ல் பிறந்த விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர்.
1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது.
மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர்.
மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார்.
உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள்.
ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர்.
அது பல ஆண்டுகள் நீடித்தது.
பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.
1852 ல் ஸையத் அஹ்மத் ஷஹீத் இரத்த வெள்ளத்தில் ஷஹீதாக்கப்பட்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை.
பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப் புத்தகங்ளில் காணப்படுகிறது.
இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.
இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார்.
1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிரமடைந்தது.
1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் பத்வா வழங்கினர்.
மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம் போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர்.
இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.

முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிர வைக்கும் உண்மையாகும்.
சிறந்த உருதுக் கவிஞரான மிர்ஸா காஃப் எழுதுகிறார்:
இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிர வைக்கும் உண்மையாகும்.
சிறந்த உருதுக் கவிஞரான மிர்ஸா காஃப் எழுதுகிறார்:
என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன்.
ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை நான் பார்த்தேன்.
ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை நான் பார்த்தேன்.
ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதைப் பார்த்தேன்''
என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.
ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப்பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர்.
இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்.
இவ்வாறு இந்த மண்ணில் சுதந்திரத்திற்காய் சிந்தப்பட்ட முதல் ரத்தம் - முதல் போராட்ட உத்வேகம் - முதல் மக்கள் இயக்கம் - முதல் சுதந்திரப் பிரகடனம் என பல முதல்களுக்குச் சொந்தக்காரர்களாக, அம்முதல்களுக்கு மட்டுமே சொந்தம் உடையவர்களாக இஸ்லாமிய பரம்பரை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக