அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

இந்திய சுதந்திரப் போராட்டமும், முஸ்லிம்களும் - 22

தூக்குக் கயிற்றை முத்தமிட்ட புலிகள் (அலி)


1867 ம் ஆண்டு ஜூன் மாதம் அலகாபாத் நகரிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டு கம்பீரத்துடன் பிறை சுதந்திரக் கொடியை பறக்க விட்டு, தாய்த்திரு நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் "லியாகத் அலி " ஆவார்.

இவர் அந்நியரிடமிருந்து தேச உடமைகளான 1600 மாடுகளைக் கைப்பற்றினார். இம்மண்ணின் மைந்தர்களை அலங்கோலப்படுத்திய ஆங்கிலேய காட்டு மிராண்டிகளுக்கு உண்ண உணவு கிடைக்காத படி செய்து தக்க பாடம் புகட்டினார்.

யோத்தி மாகாணத்தை சார்ந்த "புதிதம்" நகர ஆங்கிலேய படைத் தலைவன் வேறுபடையின் துணை கொண்டு அந்நகரின் நவாப், நாதிர் கானை சிறைபிடிக்க முயன்றான். சுதந்திர வீரர்கள் போர்க்களத்தின் சிதைந்து, தளர்ந்து, சிதறி ஓடியதைக் கண்டு சற்றும் அஞ்சாமல், கடைசி வரைப் போராடி இறுதியில் வெள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

இறக்கும் தருவாயிலும் தலைக்குமேல் தூக்கு கயிறு தொங்கிக்கொண்டிருக்கும் நேரத்திலுங் கூட இந்திய விடுதலை வேட்கையுடன் இந்தியர்களைப் பார்த்து,

"இந்திய சகோதரர்களே! ஒவ்வொருவரும் தவறாமல் வாளேந்திப் போர்க்களத்தில் குதியுங்கள், இந்திய சுதந்திரத்தை நிலைநாட்டுங்கள், வெள்ளை வெறியர்களை விரட்டியுங்கள்" என்று கர்ஜித்தார். அவர் ஆங்கிலேயர்களைப் பார்த்து "நீங்கள் அழிந்து போவது நிச்சயம் "என்று வீர முழக்கமிட்டார். அவரின் கூற்றுப்படியே ஆங்கிலேயர்கள் மடிந்தனர்.

ஷேர் அலி

அந்தமான் சிறையில் தீவினை சுற்றிப் பார்த்து வரும்போது, இந்தியாவின் அரசப் பிரதிநிதியான லார்டு மேயோவை ஹோப்டவுண் படகுத்துறையில் புலியைப் போல பாய்ந்து 8-2-1872 ல் கொன்று தனது சுதந்திர தாகத்தை தீர்த்துக் கொண்ட வீரன் ஷேர்அலி. .

வெள்ளையர் இந்த வேங்கையை 11-3-1872 ல் தூக்கிலிட்டது. சிரித்த முகத்துடன் சிங்கம் சாய்ந்த்தது, சரித்திரத்தில் ஜொலித்து நிற்கிறது இந்த மாவீரனின் வீரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்