அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஜனவரி 30, 2012

அதிரையில் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தாவா பயிற்சி முகாம்

அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 21 /1 /2012 அன்று மாலை 4:30 மணியளவில் A.L.M பள்ளியில் வைத்து இஸ்லாமிய தாவா பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பிற மத சகோதர்களுக்கு இஸ்லாத்தை எவ்வாறு எடுத்துக் கூறுவது என்பதை பற்றி பல ஆண்டுகள் தாவா களத்தில் அனுபவம் வாய்ந்த அறிவகம் மதரசா தாயிகள் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தோடு இணைத்து பயிற்சி அளித்தனர். இதில் 100க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
















நெல்லை NWF நடத்திய புற்றுநோய் & மகப்பேறு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 5 லட்சம் பேர் புற்றுநோயினால் இறக்கின்றனர். உலகில் உள்ள மொத்த கர்பப்பை புற்றுநோயாளிகளில் 26 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். தமிழகத்தில் 1990களில் 10 சதவீதமாக இருந்த மார்பக புற்றுநோய் 2011ல் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் பெண்களிடையே அதிகரித்து வரும் புற்றுநோயின் அபாயம் குறித்து அவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவிட்டதனை கருத்தில் கொண்டு NWFன் சார்பாக இப்புற்றுநோய் மருத்துவ விழிப்புணர்வு முகாம் இலவசமாக நடத்தப்பட்டது.


NWFன் நெல்லை மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையேற்று நடத்திய இம்முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi

புற்றுநோய் மற்றும் மகப்பேறு குறித்த விழிப்புணர்வு உரையாற்றுவதற்காக முறையே நெல்லை Peace Health Centre சேர்ந்த Dr.R.அன்பு ராஜன் அவர்களும், நெல்லை ராயல் மருத்துவமனையைச் சேர்ந்த Dr.மங்கையர்க்கரசி அவர்களும் இம்முகாமிற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi
மருத்துவர் அன்புக்கரசி புற்று நோய் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்
விழிப்புணர்வு உரைக்கு பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தில் புற்றுநோய் மற்றும் மகப்பேறு குறித்து பெண்களிடையே நிலவும் சந்தேகங்களுக்கு இரு மருத்துவர்களும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் பதிலளித்தனர்.


முகாமில் கலந்து கொண்ட பெண்களும் எந்தவித தயக்கமுமின்றி பெண்களுக்கே உரிய பல்வேறு நோய்கள் குறித்து தங்களுக்கு இருந்த சந்தேகங்களையும், மேலும் ஆரோக்யமாக வாழ்வதற்கான பல யோசனைகளையும் பல்வேறு கேள்விகளின் மூலம் கேட்டு விளக்கம் பெற்றனர்.




கேள்வி-பதில் நேரத்திற்கு பின்னர் மருத்துவர்களை நேரில் சந்தித்து விளக்கம் பெற விரும்பியவர்களுக்கான தனி-நபர் ஆலோசனை நடைபெற்றது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றனர்




முகாமில் கலந்து கொள்ளும் பெண்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காக அவர்களின் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு போட்டிகளும், நல்ல பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் சில வீடியோ காட்சிகளும் தனி அறைகளில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முகாமின் இறுதியில் மேடைக்கு அழைத்து பரிசு வழங்கப்பட்டது.


முகாமில் கலந்து கொண்ட பெண்களிடையே நிலவும் ஆரோக்யம் குறித்த தேடுதலுக்கு நம்மால் இயன்ற ஒத்துழைப்பு அளிக்கும் வண்ணம் மருத்துவம் மற்றும் ஆரோக்யமாக வாழ்வது குறித்த பல்வேறு அரிய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைவிட ஆர்வமுடன் பல பெண்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தீர்ந்து போன சில குறிப்பிட்ட புத்தகங்களை கூட மீண்டும் தங்களுக்கு கிடைக்க ஆவன செய்யுமாறு ஆர்வத்துடன் கோரினர்.




NWF Medical Awareness Camp at Nellai Eruvadi


Book Stall on NWF medical awareness camp Eruvadi




Children's playing section during Women's Medical Camp, Eruvadi

சனி, ஜனவரி 28, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இடஒதுக்கீட்டிற்கான கலந்தாலோசனை கூட்டம்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகப் பிரமுகர்கள் மற்றும் சகோதர இயக்கங்களின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
 
"முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு" பல ஆண்டுகளாக இதற்காக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் தங்களால் இயன்ற அளவும் போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர். இதனால் வரை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஒரு கனவாக இருந்தாலும் தற்போது மத்திய அரசு முஸ்லிம்களுக்கு மத்தியில் இடஒதுக்கீட்டை வழங்குவது என முடிவெடுத்துள்ளது. இத்துனை நாள் அமைதி காத்துக்கொண்டு தற்போது பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதையொட்டி இத்தகைய அறிக்கையை அரசியல் லாபத்திற்காக மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற நிலைக்காவது வந்திருப்பதை பாராட்டுவதில் தவறில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 3.5% இடஒதுக்கிடு அமலில் இருந்தாலும் வழங்கப்பட்ட இந்த சதவீதம் போதுமானதல்ல என்றும் தற்போது ஆட்சி செய்து வரும் மாநில அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கின்ற வேலையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டினை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கோவை, சென்னை, மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய ஐந்து மாவட்டங்களில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.

அதற்கும் முன்பு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எத்துனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றினைந்து தீர்மானித்து மாநில அரசை வலியுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முஹம்மது காலித் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இடஒதுக்கீடு தொடர்பான விரிவான தொகுப்பை தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் வழங்கினார். சமூக தலைவர்கள் அனைவரும் ஆலோசனை செய்து ஒத்த கருத்து ஏற்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஒன்று கூடிய இந்நிகழ்ச்சி சிறப்பானதாக அமைந்தது.
இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி நன்றியுரை கூறினார்.  

அம்பேத்கர் சிலை தகர்ப்பு: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

Ambedkar Statue
சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை
அமலபுரம், ஆந்திரப் பிரதேசம்: கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள அமலபுரம் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை சேதப் படுத்தப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநிலப் பொதுச் செயலாளர்  D.S.ஹபீபுல்லாஹ் அவர்கள் வன்மையாகக் கண்டிதுள்ளர்கள். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக் கொண்டார். Dr.பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் தலித் சமூகத்திற்கு மட்டும் பிரதிநிதி இல்லை. இந்திய குடியுரிமைச் சட்டத்தை வகுத்துத்தந்த அந்த மேதையை அனைத்து சமூக மக்களும் மதிக்க வேண்டும்.

ஜனவரி 23 அன்று அடையாளம் தெரியாத சில விசமிகளால் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்ட செய்தி பரவ ஆரம்பித்ததும் அமலபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பதட்டம் நிலவ ஆரம்பித்தது. கபூ சமூகத்தினரால் நடத்தப்பட்டு வரும் வியாபார நிறுவனங்களை தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மூடச் சொன்னதால், இரு சமூக மக்களும் எதிரெதிராக கல்வீசத் துவங்கினர். இது அமலபுரம் நகரை கலவர பூமியாக்கியது. காவல் துறை தலையிட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவலர்களை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

Amalapuram protest by dalits
எதிர்ப்புக் குரல் கொடுத்த மக்கள்
அன்று காலையில்,  நகரின் பல பகுதிகளிலும் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு சிதறிக் கிடப்பதை மக்கள் அறியத் துவங்கியதும் பிரச்சினை வெடித்தது. சுமார் 2 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திலுள்ள எல்லா அம்பேத்கர் சிலைகளும் உடைக்கப்பட்டோ, தகர்க்கப்பட்டோ மண்ணில் வீழ்த்தப்பட்டு இருந்தது. பந்தவீதி பகுதியிலுள்ள சிலை சாக்கடையில் வீசப்பட்டு இருந்தது. ஆனால், ரல்லபலம் பகுதியிலுள்ள சிலையைக் காணவில்லை. 

செய்தி காட்டுத் தீயைப் போல பரவத் துவங்கியதும், பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்களும், ஆர்வலர்களும் பெருமளவில் குவியத் துவங்கி சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, கடைகளை அடைக்கச் சொல்லி முழுஅடைப்பு நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால், கபூ சமூக மக்கள் முழு அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தனர். இதனால் கோபமடைந்த சில தலித் இளைஞர்கள் சவுக்குக் கட்டைகளை கடைகளை நோக்கி வீசினர். பதிலுக்கு இவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் கல்மாரி பொழியத் துவங்கினர். அருகிலிருந்த காவலர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தனர்.

பெரும்பாலான கடைகள் கபூ சமூகத்தவர்களுக்கு உரியது. தங்களின் கடைகள் மட்டுமே குறிவைத்து தாக்கப்படுவதை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை என்று நல்ல வண்டென பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் குறிப்பிடுகிறார். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே, அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும், காக்கிநாடாவிலிருந்தும் கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட SP திரிவிக்ரம் ஷர்மா கூறினார். சிலை தகர்ப்பு சம்பந்தமாக புலனாய்வு செய்ய கூடுதல் DG கிருஷ்ணா ராஜு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Police controling the situation
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் காவலர்கள்
காங்கிரசுக்கு பெரும் வாக்கு வங்கியாக இருக்கும் தலித்துகளின் உரிமைகள் மீறப்படுவதை கண்டு கொள்ளாமல் இருக்கும் குலாம் நபி ஆசாத் அவர்களுக்கு எதிராக அமலபுரம் MP ஹர்ஷா குமார் குற்றம் சாட்டியதை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு பிறகு அமைதி திரும்பியது.

வெள்ளி, ஜனவரி 27, 2012

கோவை மாவட்ட NWF நடத்திய குடியரசு தின விளையாட்டுப் போட்டி

கோவை மாவட்ட நேஷனல் விமன்ஸ் பிரண்ட் சார்பாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாபெரும் அறிவுத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. மாலை 5 மணியளவில் GM நகர் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வளாகத்தில் சகோதரி S.அலீமா பேகம் அவர்கள் வரவேற்புரையாற்ற, சகோதரி M.பெனாசிர், மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.


சகோதரி K.I.சர்மிளாபானு அவர்கள் சிறப்புரையாற்றினார். நேஷனல் விமன்ஸ் பிரண்ட் பெண்களின் முன்னேற்றத்திற்காக செய்துவரும் பணிகளை விளக்கிப் பேசினார். இளம் பெண்களுக்கும், குடும்பப் பெண்களுக்குமான ஆலோசனைகள், வரதட்சணை எதிர்ப்புப் பிரசாரங்கள், ஆபாச எதிர்ப்பு பிரசாரங்கள், சுய வேலை வாய்ப்பு, பெண் சிசுக்கொலை எதிர்ப்புப் பிரசாரங்கள், பெண் கல்வி விழிப்புணர்வு போன்ற பல பணிகளைப் பற்றி விளக்கிப் பேசினார். சிறுமிகளுக்காக செயல்பட்டு வரும் ஜூனியர் பிரண்ட்-இன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். வளரும் பருவம் முதலே ஒழுக்க விழுமியங்களோடு சிறுமிகள் வார்த்தெடுக்கப் படவேண்டியதின் அவசியம் குறித்து விளக்கினார். 





பிறகு, சிறுவர், சிறுமியருக்கான அறிவுத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மிகுந்த ஆரவாரத்துடன் நடைபெற்றது. அறிவுத்திறன் போட்டிகள், மாறக்க சொற்பொழிவு, கிராஅத், இஸ்லாமியப் பாடல், கவிதை, துஆ, வினாடி-வினா, பட்டி மன்றம், விளையாட்டுப் போட்டிகள், கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக் சேர், ஸ்பூன் லெமன், சாக்குப் போட்டி போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன.
 
பயானில் இறுதிப்பயணம், பர்தா, கலாச்சார சீரழிவு, இன்பமும்-துன்பமும், பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் சிறுவர், சிறுமியர் சிறப்பாக பேசினர். தொலைகாட்சி அதிகம் பார்ப்பது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது பெண்களின் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.


சகோதரி N.அஸ்மா நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

புதன், ஜனவரி 25, 2012

ஓட்டு வங்கி அரசியலை ஒழிப்போம்; வலிமைப்படுத்த வாக்களிப்போம்: முஸ்லிம்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வேண்டுகோள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு கூட்டம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள மலபார் இல்லத்தில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய இருதினங்களுக்கு நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

தேசிய அளவிலும் இன்னும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் சமூக அரசியல் நிலைமை பற்றி விரிவான கருத்து பரிமாற்றமும், நாடு முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் தலித் சமூகத்தவருக்காகவும் பாடுபடுவோம் என்று கூறிக்கொண்டு அவர்களுடைய வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதது வேதனை அளிப்பதாக இருக்கிறது. ஜாதியின் பெயரால் அரசியல் நடத்தி ஆட்சியை பிடித்திருக்கும் இவர்கள் அம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் தோல்வியையே சந்தித்துள்ளன. பாரம்பரிய கட்சிகள் பின்பற்றும் அதே வழிமுறையைத்தான் இவர்களும் பின்பற்றி வருகிறார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் உண்மையான அதுவும் வீரியமான அரசியல் சக்தி உருவெடுப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
 

உத்திரபிரதேசத்தை ஆண்டு வந்த பகுஜன் சமாஜ் பார்ட்டி இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். தலித் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி என்று கூறிவிட்டு தலித்களுக்கு எதிராகவும், இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராகவும் அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. காவல்துறையினர் மூலமாகவும், உளவுத்துறையினர் மூலமாகவும் பதட்டத்தை ஏற்படுத்துவதிலும், பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதிலும் மற்ற கட்சிகளை காட்டிலும் தாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றனர். முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராகவும் கடுமையான போக்கினை மாயாவதி அரசு மேற்கொண்டு வருகிறது.

புதிதாக உருவெடுத்துள்ள அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ மற்றும் அதனோடு ஒத்த கருத்துடைய இன்ன பிற கட்சிகளால் மட்டுமே வறுமை, வேலையில்லா திண்டாட்டம், கல்வியறிவின்மை போன்றவற்ற களைய முடியும். மேலும் முஸ்லிம் சமூகம் சிக்கித்தவிக்கும் பிரச்சனைகளான‌ பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை பெற்றுத்தர இயலும் என இப்பொதுக்குழு கருதுகிறது. எனவே உத்திரபிரதேச மக்கள் வாக்கு வங்கியாக செயல்பட்டு இதுநாள் வரை அவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்காமல், மக்களுக்காக போராடக்கூடிய எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


இந்திய அரசு இஸ்ரேலுடனான நட்புறவை வளர்த்து வருவது இந்திய நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.
 

பாதுகாப்பு, உளவுத்துறை, விவசாயம் போன்றவற்றிற்காக இஸ்ரேலிடம் இருந்து பொருட்களை வாங்குவதில் இந்தியா மற்ற நாடுகளை காட்டிலும் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளராக உருவெடுத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் உள்நாட்டு பாதுகாப்பிற்காக இஸ்ரேலையே நாடுவது வேடிக்கையாக இருக்கிறது. என்று இஸ்ரேலுடனான தொடர்பு ஏற்பட்டதோ அன்றிலிருந்து தான் இந்தியாவில் குண்டுவெடிப்புகள் நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் தூதரகத்தை பெங்களூரில் ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்தானது. இதனால் யூத பயங்கரவாதம் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே மத்திய அரசு இஸ்ரேலுடனான எல்லா உடன்படிக்கைகளையும் உடனே ரத்து செய்ய வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

சமீபத்தில் மத்திய அரசு முஸ்லிம்களுக்காக 4.5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இருந்த போதிலும் இதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உடனே அக்குறைகளை சரிசெய்ய முன்வரவேண்டும். மத்திய அரசு வழங்க இருக்கின்ற இந்த 4.5% இடஒதுக்கீட்டில் அனைத்து முஸ்லிம்களையும் அடக்கிவிட முடியாது. மேலும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய 6% இடஒதுக்கீட்டிலும் பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு தேர்தலை முன்வைத்து மீண்டும் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இது போன்ற வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. முஸ்லிம்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி வாக்குகளை பெறுவதினால் அரசியல் எழுச்சி பெறுவதிலிருந்து அவர்களை ஒரு போதும் தடுத்துவிட முடியாது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் படி முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பாட்லா ஹவுஸ் எண்கவுண்டர் வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரிடத்தில் ஒத்த கருத்து இருப்பதாக தெரியவில்லை. புதுடெல்லி காவல்துறை அதிகாரிகளால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் போலி எண்கவுண்டர் மூலம் பாட்லா ஹவுஸில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். எந்த ஒரு அரசியல் கட்சியினருக்கும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும் என்ற அக்கறை இருந்ததாக தெரியவில்லை. மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கிடவேண்டும் அதே சமயம் இக்குற்றத்தை செய்த காவல்துறையினருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


முஸ்லிம்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தேசவிரோத சக்திகளை உடனே தடுத்து நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேரள அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக இந்துத்துவ தீவிரவாதிகள் "லவ் ஜிஹாத்" என்ற செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் கிறிஸ்தவ மற்றும் இந்து பெண்களை மயக்கி இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்வதாகவும் எந்த ஒரு ஆதாரமுமில்லாத பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். லவ் ஜிஹாத் என்பதே இந்துத்துவ வெறியர்களால் பரப்பப்பட்ட ஒரு பொய்யான விஷயமாகும் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்று. இதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரியிலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்ற துவேஷ எண்ணத்திலேயே இத்தகையை பொய் பிரச்சாரங்களை இந்துத்துவ வெறியர்கள் பரப்பி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பிஜாபூரில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை ஏற்றியதற்காக காவல்துறையினர் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். இத்தகைய தேச விரோத‌ செயல்களை ஆர்.எஸ்.எஸ்தான் செய்து வருகிறது என்பதை பல முறை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்து வருகிறது. 



தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமையில் இப்பொதுக்குழு நடைபெற்றது. தேசிய தலைவர் உரையாற்றும்போது சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுடெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் சமூக நீதி மாநாட்டை நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வட இந்தியாவிலிருந்து பங்கேற்றனர். அவர்களுடைய வேகத்தையும் தாக்கத்தையும் உணர்ந்த போது தங்களுக்காக போராட ஒரு இயக்கம் வராதா? என்ற அவர்களுடைய கனவு நனவாகியதாகவே உணர்ந்துள்ளனர். இதனை நாம் சவாலாக எடுத்துக்கொண்டு இன்னும் எண்ணற்ற இடங்களில் கால் பதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் ஆண்டறிக்கையை சமர்பித்தார். அதில் கடந்த காலங்களில் இந்தியா முழுவதிலும் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், ஆதரவாளர்கள் நாடு முழுவதும் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாநிலத்தலைவர்களான கரமணா அஷ்ரஃப் மெளலவி (கேரளா), முஹம்மது இலியாஸ் தும்பே (கர்நாடகா), ஏ.எஸ். இஸ்மாயில் (தமிழ் நாடு), முஹம்மது ஆரிஃப் அஹமது (ஆந்திரா), முஹம்மது கலீமுல்லாஹ் சித்தீகி (டெல்லி), முஹம்மது ஷாஃபி (ராஜஸ்தான்), முஹம்மது ஷஹாபுதீன் (மேற்கு வங்காளம்), முஃப்தி அர்ஷத் காசிமி (மணிப்பூர்) ஆகியோர் தலைமை தாங்க கலந்துரையாடல் நடைபெற்றது.


பொதுக்குழுவின் இரண்டாம் நாள் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹமது பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் மூலம் சமூக பணியை விளக்கி கூறினார். சமூக நீதி மாநாட்டிற்கான வீடியோ புகைப்படக் காட்சி பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. இறுதியாக தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா உரை நிகழ்த்தியதோடு இப்பொதுக்குழு நிறைவுபெற்றது.

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்