அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஜனவரி 27, 2012

கோவை மாவட்ட NWF நடத்திய குடியரசு தின விளையாட்டுப் போட்டி

கோவை மாவட்ட நேஷனல் விமன்ஸ் பிரண்ட் சார்பாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாபெரும் அறிவுத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. மாலை 5 மணியளவில் GM நகர் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வளாகத்தில் சகோதரி S.அலீமா பேகம் அவர்கள் வரவேற்புரையாற்ற, சகோதரி M.பெனாசிர், மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.


சகோதரி K.I.சர்மிளாபானு அவர்கள் சிறப்புரையாற்றினார். நேஷனல் விமன்ஸ் பிரண்ட் பெண்களின் முன்னேற்றத்திற்காக செய்துவரும் பணிகளை விளக்கிப் பேசினார். இளம் பெண்களுக்கும், குடும்பப் பெண்களுக்குமான ஆலோசனைகள், வரதட்சணை எதிர்ப்புப் பிரசாரங்கள், ஆபாச எதிர்ப்பு பிரசாரங்கள், சுய வேலை வாய்ப்பு, பெண் சிசுக்கொலை எதிர்ப்புப் பிரசாரங்கள், பெண் கல்வி விழிப்புணர்வு போன்ற பல பணிகளைப் பற்றி விளக்கிப் பேசினார். சிறுமிகளுக்காக செயல்பட்டு வரும் ஜூனியர் பிரண்ட்-இன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். வளரும் பருவம் முதலே ஒழுக்க விழுமியங்களோடு சிறுமிகள் வார்த்தெடுக்கப் படவேண்டியதின் அவசியம் குறித்து விளக்கினார். 





பிறகு, சிறுவர், சிறுமியருக்கான அறிவுத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மிகுந்த ஆரவாரத்துடன் நடைபெற்றது. அறிவுத்திறன் போட்டிகள், மாறக்க சொற்பொழிவு, கிராஅத், இஸ்லாமியப் பாடல், கவிதை, துஆ, வினாடி-வினா, பட்டி மன்றம், விளையாட்டுப் போட்டிகள், கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக் சேர், ஸ்பூன் லெமன், சாக்குப் போட்டி போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன.
 
பயானில் இறுதிப்பயணம், பர்தா, கலாச்சார சீரழிவு, இன்பமும்-துன்பமும், பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் சிறுவர், சிறுமியர் சிறப்பாக பேசினர். தொலைகாட்சி அதிகம் பார்ப்பது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது பெண்களின் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.


சகோதரி N.அஸ்மா நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்