அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், செப்டம்பர் 26, 2012

தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது: உண்மை அறியும் குழு அறிக்கை

செப்டம்பர் 24, 2012
திருச்சி

சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

திங்கள், செப்டம்பர் 24, 2012

2014ல் வெளியேறுகிறது அமெரிக்கா: சீனாவுடன் கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் அல்காய்தா, தலிபான் போராளிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன.

இவர்கள் புதிதாக தெரிவு செய்யப்படும் இராணுவ வீரர், போலிசாருக்கு பயிற்சிகளும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் 2014ஆம் ஆண்டுடன் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு முழுமையாக வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானைத் தாக்கினால் மூன்றாம் உலகப்போர் தான்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

ஈரானை இஸ்ரேல் தாக்கினால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார தடை விதித்து ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்காவுக்கோ அதன் ஆதரவு நாடுகளுக்கோ அச்சப்படாமல் ஈரான் தன்னுடைய செயற்பாடுகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஒரே இரவில் ஐ.எஸ்.ஐ உளவாளியாக்கப்பட்டேன்: தமீம் அன்சாரி

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட தமிழக இளைஞர் தமீம் அன்சாரி தம்மீது பயங்கரவாதி முத்திரை குத்தப்பட்டமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மரக்கறி இறக்குமதியாளரான சாஜி என்பவருடன் தொடர்பு உள்ளதாக கூறியே தமிழக காவல்துறை தம்மை கைது செய்தது.

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

காவிரியை திறந்து விடாமல் தமிழர்களை கலங்கடிக்கும் பாஜக

மீண்டும் கொதிக்கிறது காவிரி. கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் எனக் கர்நாடகாவின் மைசூர், மண்டியா, பெங்களூரில் வசிக்கும் தமிழர்களிடையே பீதி.

 ''தமிழர்கள் அச்சப்படத் தேவை இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். தமிழகத்துக்குத் தண்ணீர் தர எதிர்ப்பவர்களை அமைதியான வழியில் மட்டுமே போராட அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழக அரசுடனும் தமிழர்களுடனும் சகோதரத்துவம், நட்புறவு பேணுவதே எங்கள் கர்நாடக அரசின் நோக்கம்!'' என்று கேள்விக்கு முன்னரே பேசத் தொடங்குகிறார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.

திங்கள், செப்டம்பர் 17, 2012

பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் வேட்டை அதிகரித்துவிட்டது – அருந்ததி ராய் ! ! !

புதுடெல்லி:- பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்குகளில் கைது செய்வது பெருமளவில் அதிகரித்துவிட்டது என்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு சிறைகளில் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஒரு மாத கால ‘சட்டப்படி பிணையில் விடு! நிரபராதிகளை விடுதலைச் செய்!’ என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அப்பிரச்சாரத்தின் இறுதி நிகழ்ச்சியாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று(செப்.15) நடத்திய மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் அருந்ததி ராய் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து கோவையில் பாப்புலர் ப்ரண்டின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of muslims’ திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும் உலகிற்கு புதியதல்ல. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த சாம் பாசிலி என்ற யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவர் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூப் சமூக வீடியோ இணையதளத்தில் தர ஏற்றம் செய்ததைத் தொடர்ந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.

கோவை பாப்புலர் ஃபிரண்ட் நடத்திய மனித சங்கிலி போராட்டம்


சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டு காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இட ஒதுக்கீடு வழங்க மறுத்தல், போலி என்கவுண்டர், பொய் வழக்கு போன்றவற்றை குறிப்பிடலாம். 1990க்கு பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வெளியே விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த TISS (டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி மகாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும். 

சனி, செப்டம்பர் 15, 2012

கோவையில் மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டம்

சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டு காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இட ஒதுக்கீடு வழங்க மறுத்தல், போலி என்கவுண்டர், பொய் வழக்கு போன்றவற்றை குறிப்பிடலாம். 1990க்கு பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வெளியே விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த TISS (டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி மகாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும். 

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக அருந்ததி ராயின் அறிக்கை

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை எதிர்த்துப் போராடும் இடிந்தகரை மக்களோடு நான் முழு நல்லாதரவோடு நிற்கிறேன். ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்ட போது நான் அங்கு இருந்தேன். அந்த பேரழிவுக்கு பிறகு அணு சக்தியை பயன்படுத்தும் எல்லா நாடுகளும் தங்களது கொள்கையை மாற்றிக் கொள்ள போவதாக அறிவித்தன. இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் அறிவித்திருந்தன.

வியாழன், செப்டம்பர் 13, 2012

கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்!


கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களையும், உதயகுமார் உள்ளிட்ட வழிநடத்தும் மக்கள் போராளிகளையும் தேசத்துரோகிகளாகவும், தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்தடைக்கு இவர்கள்தான் காரணம் எனவும், இவர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும், அதன்பிறகு கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப்பட்டு தமிழகமே மின்வெட்டு இருளிலிருந்து மீண்டுவிடும் என்பதுபோலவும் ஒரு "மூட நம்பிக்கை' நிலவிக் கொண்டிருக்கிறது.

ஆபியா சித்தீக்கியை விடுதலை செய்யுங்கள்: ஜவாஹிரி காணொளியில் வேண்டுகோள்

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட அமெரிக்கரான வாரன் வெயின்ஸ்டீன் தங்களிடம் இன்னும் பிணையக் கைதியாக உயிருடன் இருப்பதாக அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு ஜவாஹிரியிடமிருந்து வீடியோக்கள் வெளியாவது குறைந்திருந்த நிலையில், இப்போது அவரது புதிய வீடியோவை அல்காய்தா வெளியிட்டுள்ளது. சில அல்காய்தா இணையத்தளங்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

புதன், செப்டம்பர் 12, 2012

இஸ்லாத்திற்கெதிராக அமெரிக்க படம்: லிபியாவில் மக்கள் கொந்தளிப்பு

அமெரிக்காவின் சாம் பேசிலி என்பவரும், குர்ஆனை எரித்து சர்ச்சைக்குள்ளான பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் இஸ்லாத்தையும் முகம்மது நபியும் விமர்சித்துள்ளதால் படத்தைப் பார்த்த அரேபிய வளைகுடா நாடுகள் கடும் கொந்தளிப்பில் உள்ளது.

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

நிலக்கரி சுரங்க ஊழல்:பா.ஜ.க முதல்வர்கள் தமது பதவியை ராஜினாமாச் செய்து முன்மாதிரியாக மாறவேண்டும்! – எஸ்.டி.பி.ஐ!

நிலக்கரி சுரங்க ஊழல்:பா.ஜ.க முதல்வர்கள் தமது பதவியை ராஜினாமாச் செய்து முன்மாதிரியாக மாறவேண்டும்! – எஸ்.டி.பி.ஐ! 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளியால் முடங்கியதில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பிரதமரின் ராஜினாமாவைக் கோரி அமளியில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சி தாம் ஆளும் மாநில முதல்வர்களை ராஜினாமாச் செய்யவைத்து முன்மாதிரியாக மாறவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “பாரதீய ஜனதா கட்சியின் அமளியால் பாராளுமன்றத்தின் மதிப்புமிக்க 13 தினங்களும், 29 கோடி ரூபாயும் தேசத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை முடக்குவதும் ஜனநாயக நடைமுறை என்ற பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது. மழைக்கால கூட்டத் தொடரால் எவ்வித பலனும் இல்லை. 30 மசோதாக்கள் நிறைவேற்றவேண்டிய சூழலில் மக்களவையில் நான்கும், மாநிலங்களவையில் 3 மசோதக்களும் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவையை முடக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதும், நிராகரிப்பதும் ஆகும் என்ற பிரதமரின் கருத்து சரியானது. பாராளுமன்றத்தை நடைபெற விடாமல் முடக்குவது ஜனநாயகத்தை கடுமையாக மீறுவதாகும் என்ற பிரதமரின் எச்சரிக்கை முற்றிலும் சரியே. தமது கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பங்கு இருப்பது தெளிவான பிறகும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ள காங்கிரஸ் மற்றும் ஐ.மு அரசை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தும் முயற்சிகளை பாரதீய ஜனதா கட்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளியால் முடங்கியதில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பிரதமரின் ராஜினாமாவைக் கோரி அமளியில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சி தாம் ஆளும் மாநில முதல்வர்களை ராஜினாமாச் செய்யவைத்து முன்மாதிரியாக மாறவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூடங்குளம் போலீஸ் அடக்குமுறை: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின்நிலையத்தில் அணு உலைகளில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்தக்கோரி சுற்றுவட்டார மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் வன்மையாக கண்டித்துள்ளார். அணுமின் சக்தி ஆபத்தானது என்ற கொள்கையில் தமது இயக்கம் உறுதியாக இருப்பதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

திங்கள், செப்டம்பர் 10, 2012

சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய சாலை மறியல் போராட்டம்

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும், இடிந்த கரை பகுதியில் இருந்து காவல்துறையினர் உடனடியாக வெளியேற வலியுறுத்தியும், போராட்டக் குழுவினரோடு முதல்வர் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியும், கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி இன்று (10-09-2012) மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது. 

வெள்ளி, செப்டம்பர் 07, 2012

ஈரான் மீது எந்தவொரு நாடும் தாக்குதல் நடத்தக்கூடாது: ரஷ்யா எச்சரிக்கை

ஈரான் இரகசியமாக அணு உலைகளை தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான் அணு சக்தியை மின்சார உற்பத்தி போன்ற ஆக்கப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

வியாழன், செப்டம்பர் 06, 2012

கிங் பிஷர் விஜய் மல்லையாவிடம் கோடிக்கணக்கில் கடனை கொடுத்துவிட்டு கெஞ்சிக்கொண்டிருக்கும் இந்திய வங்கிகள்

கோடிகளை ஏப்பம் விடும் பண முதலைகள்
கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ. 7,000 கோடி வரை கடன் கொடுத்துள்ள நிறுவனங்கள் அதைத் திரும்ப வசூலிப்பது குறித்து நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.

புதன், செப்டம்பர் 05, 2012

கோவையில் ரயில் மறியல்: 200க்கும் மேற்பட்ட SDPI கட்சியினர் கைது

தமிழர்களின் உணர்வுக்கு எதிராக இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து வரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஷ்வராஜை கண்டித்தும் கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ரயில் மறியல்இன்று நடைபெற்றது.

செவ்வாய், செப்டம்பர் 04, 2012

நரோடாபாட்டியா தீர்ப்பு : வகுப்புவாத அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை! - பாப்புலர் ஃப்ரண்ட்

நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பதாக தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

திங்கள், செப்டம்பர் 03, 2012

ஈராக் மீது போர் தொடுத்த டோனி பிளேயர், ஜார்ஜ் புஷ் இருவரும் போர்க்குற்றவாளிகள்

இராக் மீது போரைத் தொடுத்ததற்காக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளயரையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் த ஹேக்கில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பேராயர் டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளார்.

சனி, செப்டம்பர் 01, 2012

குஜராத் நரோடா பாட்டியா கூட்டுக்கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அமைச்சர் உள்பட 31 பேருக்கு ஆயுள் தண்டனை

2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-6 பெட்டி தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கோரத்தாண்டவம் ஆடிய இந்திய வரலாறு காணாத குஜராத் இனப் படுகொலையின் போது மிகப்பெரிய கூட்டுப்படுகொலை நரோடா பாட்டியாவில் நிகழ்ந்தது.

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்