இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான
முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of
muslims’ திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து
வருகிறது. இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும்
உலகிற்கு புதியதல்ல. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த சாம் பாசிலி என்ற
யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட
இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவர் அரபு மொழியில்
மொழிமாற்றம் செய்து யூ ட்யூப் சமூக வீடியோ இணையதளத்தில் தர ஏற்றம்
செய்ததைத் தொடர்ந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.
இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் ‘innocence of muslims’ என்ற இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதரின் உருவம் போல் கற்பனையில் அவதூறாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. யூ ட்யூபில் வெளியான 13 நிமிட டிரைலரிலும் இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2010-ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் பிரதியை எரிக்க அழைப்பு விடுத்த கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸின் அவதூறான கருத்துக்களை நியாயப்படுத்தும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கும் வேளையிலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான யூதன் சாம் பாசிலி மீண்டும் இஸ்லாத்தை மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளான். இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்று கருத்து தெரிவித்த பாசிலி தனது திரைப்படம் ஒரு அரசியல் சினிமா என்று கூறியுள்ளான். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த அவதூறான அவமதிக்கத்தக்க தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறான். இதைக் கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் "இத்திரைப்படத்தில் நடித்த 14 பேரை உலக நீதிபதிக்கு முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அனைத்து முஸ்லிம்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், இந்திய அரசு அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடனான துதரக உறவை துண்டிக்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15/09/2012 மாலை 7 மணியளவில் மாவட்ட தலைவர் கே.ராஜா உசேன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் முஹம்மத் அன்சாரி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு படக் குழுவினரையும், அமெரிக்காவையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக