அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், செப்டம்பர் 24, 2012

ஒரே இரவில் ஐ.எஸ்.ஐ உளவாளியாக்கப்பட்டேன்: தமீம் அன்சாரி

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட தமிழக இளைஞர் தமீம் அன்சாரி தம்மீது பயங்கரவாதி முத்திரை குத்தப்பட்டமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மரக்கறி இறக்குமதியாளரான சாஜி என்பவருடன் தொடர்பு உள்ளதாக கூறியே தமிழக காவல்துறை தம்மை கைது செய்தது.


தாம் தமிழக விஞ்ஞான அரங்கின் உறுப்பினராக உள்ளதாக குறிப்பிட்டுள்ள தமீம், அதற்காகவே தாம் விசாகப்பட்டிணம் கடற்படைத்தளம் உட்பட பல்வேறு இடங்களை தமது கையடக்க தொலைபேசியில் படம் எடுத்து வைத்திருந்ததாக தமீம் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வர்த்தக நோக்கில் தாம் சென்று வருகின்ற போதும் அங்கு தாம் சந்திப்பவர்கள் பயங்கரவாதிகளா? இல்லையா என்பதை தம்மால் ஊகிக்கமுடியவில்லை என்றும் தமீம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் ஒரே இரவில் தம்மை பயங்கரவாதியாக்கி விட்டன என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் தமீமை கடந்த 6 மாதங்களாக கண்காணித்து வந்தநிலையிலேயே அவரை கைதுசெய்ததாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கர்நாடக காவல்துறை நன்கு படித்த முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து 14 பேரை சமீபத்தில் கைது செய்தது. அதில் டாக்டர் நயீம் சித்தீக்கி என்ற மருத்துவரின் மீதும் தீவிரவாதக் குற்றம் சுமத்தப்பட்டது. பாஸிச பாஜக ஆளும் மாநிலத்தில் இது நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த முஸ்லிம்கள் அதிலிருந்து மீள்வதற்குள் தமிழக காவல் துறையும் அதே பாணியில் தமீம் அன்சாரியை கைது செய்திருப்பது காவல் துறையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்