தமிழர்களின் உணர்வுக்கு எதிராக இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி
அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை
இந்தியாவிற்கு அழைத்து வரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா
ஷ்வராஜை கண்டித்தும் கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ரயில்
மறியல்இன்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் வி.எம். அபுதாகிர், தமிழர்களுக்கு எதிராக பாரதீய ஜனதா
கட்சி செயல்பட்டதை கண்டித்தும், பயிற்சி அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும்
பேசினார். இதனை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு
ரயில் மறியல் செய்ய முயன்ற மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 200 க்கும்
மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக