அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

கூடங்குளம் போலீஸ் அடக்குமுறை: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின்நிலையத்தில் அணு உலைகளில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்தக்கோரி சுற்றுவட்டார மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் வன்மையாக கண்டித்துள்ளார். அணுமின் சக்தி ஆபத்தானது என்ற கொள்கையில் தமது இயக்கம் உறுதியாக இருப்பதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

கூடங்குளம் போலீஸ் அடக்குமுறையக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதை எதிர்த்து அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மற்றும் கூடங்குளம் மக்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கினர். ஒன்றரை ஆண்டுகாலமாக அந்த பகுதி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கான காரண காரியங்களை ஆய்வு செய்யாமல் அந்த மக்களின் போராட்டத்தை முடக்குவதற்கான எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொண்ட அரசு இறுதியில் அந்த மக்களின் மீது தடியடி நடத்தியிருப்பதையும், தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகி இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.


ஜனநாயகரீதியான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்க வேண்டும். ஆனால், போராடும் மக்களின் உயிர்களுக்கு உத்திரவாதமளிப்பதை விடுத்துவிட்டு இதுபோன்ற அடக்குமுறைகளில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது. கூடங்குளம் மக்கள் அமைதியாகவும், ஜனநாயகரீதியிலும் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். மேலும் இடிந்தகரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் மேற்கொண்டுவரும் நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பொறுத்தவரையில் அணுமின் சக்தி ஆபத்தானது என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது.


இவ்வாறு ஏ.எஸ்.இஸ்மாயீல் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்