அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், செப்டம்பர் 24, 2012

2014ல் வெளியேறுகிறது அமெரிக்கா: சீனாவுடன் கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் அல்காய்தா, தலிபான் போராளிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன.

இவர்கள் புதிதாக தெரிவு செய்யப்படும் இராணுவ வீரர், போலிசாருக்கு பயிற்சிகளும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் 2014ஆம் ஆண்டுடன் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு முழுமையாக வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து தங்கள் இராணுவம், போலிஸ் துறைக்கு நிதியுதவி பெறும் முயற்சியில் ஆப்கான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே சீனாவின் உள்நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரியும், கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினருமான ஹோவ் யாங்காங் திடீரென்று ஆப்கானிஸ்தான் சென்றார்.

அங்கு காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாயை, சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின்னர் பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பான ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர். ஆனால் இந்த ஒப்பந்தங்கள் குறித்து விரிவான தகவல் வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 1 லட்சம் போலிசாருக்கு தற்போது நேட்டோ படையினர் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். நேட்டோ படைகள் வாபஸ் ஆன பிறகு இந்த புதிய ஒப்பந்தம் மூலம் சீனா உதவி வழங்கும் என தெரிகிறது.

கடந்த 1966ஆம் ஆண்டிற்கு பிறகு சீன உயர் அதிகாரி ஒருவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்