அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், செப்டம்பர் 24, 2012

ஈரானைத் தாக்கினால் மூன்றாம் உலகப்போர் தான்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

ஈரானை இஸ்ரேல் தாக்கினால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார தடை விதித்து ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்காவுக்கோ அதன் ஆதரவு நாடுகளுக்கோ அச்சப்படாமல் ஈரான் தன்னுடைய செயற்பாடுகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் ஈரானின் இஸ்லாமிக் ரெவலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெளிப் பிரிவு கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில், இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் செயலாகும் என்றார்.

அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஸ்ரேல் தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால் நிச்சயம் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும்.

ஈரான் தனது அணு உலை திட்டத்தை மேம்படுத்துவது இஸ்ரேலுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அதனால் ஈரானில் உள்ள அணு உலைகளை அழித்து விடுவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது.

ஆனால் ஈரானில் அணு உலை திட்டம் நல்ல நோக்கங்களுடன் தான் செயற்படுத்தப்படுகிறது என ஈரான் கூறியுள்ளது.

இதற்கிடையில் ஈரானின் இஸ்லாமிக் ரெவலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் கமாண்டர் மேஜர் ஜெனரல் முகமது அலி ஜபாரி கூறுகையில், ஈரான் மீது போர் தொடுப்பது தான் ஒரே வழி என்று இஸ்ரேல் அதிகாரிகள் நினைக்கின்றனர்.

அவர்கள் மட்டும் போர் தொடுத்தால் அவர்களின் அழிவுக்கு அது வழி வகை செய்துவிடும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்