அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஏப்ரல் 30, 2012

ஹைதராபாத் கலவரம்:அரசியல் ஆதாயம் தேட ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் – உண்மை கண்டறியும் குழு!


ஹைதராபாத் பழைய நகரத்தில் நடந்த வகுப்பு கலவரம் இரு சமூகங்கள் இடையே வகுப்பு பிரிவினையை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் என்று உண்மைக் கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.

வகுப்புக் கலவரத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவை பொதுத் தேர்தலிலும் ஆதாயம் தேடுவதே ஹிந்துத்துவா சக்திகளின் நோக்கம் என்றும், கலவரத்திற்கான சதித்திட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என்று அறிக்கை கூறுகிறது.

ஹெச்.ஆர்.எஃப், ஐ.சி.எ.என், என்.எ.பி.எம், எ.ஐ.சி.யு.டி ஆகிய சிவில் உரிமை அமைப்புகளும், வழக்கறிஞர்களும் அடங்கிய உண்மைக் கண்டறியும் குழு

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்!

பள்ளி ஜும்-ஆவில் அறிவிப்பு செய்து நம் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஜமாத்தின் அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்றது. 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முஸ்லீம்கள் 13.4 சதவிகிதமும், தமிழகத்தில் முஸ்லீம்கள் 5.6 சதவிகிதமும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஆனால் அப்போதே பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களின் எண்ணிக்கையை இக்கணக்கெடுப்பில் சேர்க்காமல் விட்டுவிட்டனர்.

எனவே தற்போது நடைபெறும் ஜாதிவாரியான

புதன், ஏப்ரல் 25, 2012

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை விட பௌத்தர்களின் செயல் அபாயகரமானது

கைரிய்யா ஜும்ஆ மஸ்ஜிதை இடிக்கும் பௌத்த வெறியர்கள்
விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றிய சம்பவம் பலருக்கும் நினைவிருக்கலாம். யாழில் முஸ்லீம் நபர் ஒருவரின் வீட்டில் இருந்து சிங்களர்கள் கொடுத்த ஆயுதங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், புலிகள் அனைத்து முஸ்லீம்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இச்செயல் பல காலமாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால் விடுதலைப் புலிகள்

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

அவதூறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

KM ஷரீப், தேசிய பொதுச் செயலாளர், PFI
புது டெல்லி, 21/4/2012: சட்ட நடவடிக்கைக்கு தேவையான முதல் பணியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசியச் செயலாளர் K.M.ஷரீப் அவர்கள் டைனிக் ஜாக்ரன் ஹிந்தி நாளிதழ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ், தி ஆசியன் ஏஜ் ஆங்கில நாளிதழ், IBN-7 ஹிந்தி காட்சி ஊடகம், டெக்கான் குரோனிகள் ஆங்கில நாளிதழ், டைம்ஸ் நவ் ஆங்கில காட்சி ஊடகம், நவ் பாரத் டைம்ஸ் ஹிந்தி நாளிதழ், தி இன்குலாப்

திங்கள், ஏப்ரல் 23, 2012

இலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

இலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே

ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

கோவையில் பாப்புலர் ஃபிரண்ட் நடத்திய இட ஒதுக்கீட்டுக்கான மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

தலைமையுரையாற்றும் இப்ராகிம் பாதுஷா அவர்கள்
கோவை: முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக உயர்த்தக்கோரியும், தேசிய அளவில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்தியில் 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த நான்கு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம், வாகனப் பேரணி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள், கண்காட்சிகள் ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்தை நடத்தி வந்தது.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 22 அன்று சென்னை, தஞ்சை, கோவை, மதுரை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் மாபெரும் கோரிக்கை பேரணி மற்றும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

கோவையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராகிம் பாதுஷா அவர்களின் தலைமையில்

காணொளி:கோவையில் இட ஒதுக்கீடுக்கான பேரணி, ஆர்ப்பாட்டம்



 

22/4/2012 கோவையில் இட ஒதுக்கீடுக்கான பேரணி, ஆர்ப்பாட்டம்-நேரலை காண...

பாப்புலர் ஃபிரண்ட்  ஆப் இந்தியா நடத்தும் இட ஒதுக்கீடுக்கான போராட்டம், கோவை, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேரலை காண கீழே

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

இப்ராஹீம் பாதுசா, அன்சாரி, ராஜா உசேன்
 முஸ்லீம்களின் இட ஒதுக்கீடுக்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சை ஆகிய இடங்களில் ஏப்ரல் 22 அன்று நடத்த தீர்மானித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட விளக்கப் பொதுக் கூட்டங்களும், தெரு முனைப் பிரசாரங்களும், வாகனப் பேரணிகளும் நடந்து வருகின்றன. 

நேற்று 19/4/2012 அன்று கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

வியாழன், ஏப்ரல் 19, 2012

மைசூரில் N.W.F. நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்

NWF ANTI DOWRY CAMPAIGN IN MYSORE
மைசூர் 18 ஏப்ரல் 2012: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக மைசூர் பேகம் ரஜியா சுல்தான் மேடை (மெஸ்கோ ஐ.டி.ஐ வளாகம்) யில் வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

வரதட்சனை என்பது

புதன், ஏப்ரல் 18, 2012

காஸ்மி விவகாரம்:பிரதமர் தலையிட உ.பி முதல்வர் அகிலேஷ் கோரிக்கை!


உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் 
லக்னோ:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பில் அநியாயமாக பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது காஸ்மியின் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பிரதமரை அவரது

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

நாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறைய தூண்ட முயற்சி

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்குள் நான்கு மஸ்ஜிதுகள் வன்முறையாளர்களால் அசுத்தமாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அமைதிகாத்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக காவல்துறையினர் கூடுதலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நகரத்திலுள்ள 4 மஸ்ஜிதுகள் அசுத்தப்படுத்தப்படுத்தியுள்ளனர். முதலில் நாராயணகுடா பகுதியிலுள்ள மஸ்ஜிதே அஜீமியாவில்

KIFF நடத்திய "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை"


குவைத்:குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF) ஒரு மாத காலம் நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (13/04/2012) ஜம்மியத்துல் இஸ்லாஹி ரவ்தா ஆடிட்டோரியத்தில் வைத்து கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.சரியாக மாலை 6:45 மணிக்கு சகோதரர் அப்துல் பாரி அவர்கள் திருமறை குர்ஆன் வசனங்கள் ஓத

திங்கள், ஏப்ரல் 16, 2012

பயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட்


உலகம் காலணி ஆதிக்கத்தின் பிடியில் சிக்கித்தவித்த காலம் தான் மனிதனின் வரலாற்றில் ஒரு மோசமான கால கட்டம் என்று கூறலாம். காலனி ஆதிக்கம் லட்சக்கணக்கான மக்கலை பலிகொண்டதோடு மட்டுமல்லாமல் பல நாடுகளின் கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் சீரழித்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகள் காலனி ஆதிக்கத்தை விரட்டியடிப்பதற்காக லட்சக்கணக்கான உயிர்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. மனிதனின் வரலாற்றில் மோசமான காலகட்டத்தின் அத்தியாயம் இத்தோடு முடிந்துவிட்டது என்று கருதினோம். ஆனால் நம்முடைய எண்ணம் தவறானதாகும் என்பது தற்போது புரிகிறது, காரணம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏகாதிபத்திய சக்திகள் இன்றும் நேரடி படையெடுப்பின் மூலமாகவும், ஆயுத பரிமாறுதல் மூலமாகவும், பயங்கரவாத நாடுகளை உருவாக்குவதின் மூலமாகவும் இன்றளவிலும் உலகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது.



"இஸ்ரேல்" - பல்லாயிரக்கணக்கான ஃபல்ஸ்தீனர்களை கொன்று குவித்து

ஹைதராபாத் : கோவிலில் மாட்டுக்கறியை வீசி கலவரத்துக்கு வித்திட்டவன் கைது!


நாட்டில், ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களுடைய ஃபாசிஸஅஜண்டாவை நடைமுறை படுத்துவதற்காக‌, சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம், பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. 

ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதி ஒருவன், ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், யாரோ கோவிலில் மாட்டுகறியை போட்டுள்ளனர், என மக்களிடம் விஷமம் செய்து, கடும் கலவரத்தை ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அந்த கயவனின் பெயர்,

வியாழன், ஏப்ரல் 12, 2012

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்டது - பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு!


ஹைதராபாத்: ஆந்த்ராவில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் அரசாங்கம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது என்பதை கடந்த சில மாதகாலமாக நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகள் சுட்டிக்காட்டுகின்றன என ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸ் அரசாங்கம் காவல்துறையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து செயல்படுத்துவதற்கு தவறிவிட்டது. சமீப காலங்களில் நடைபெற்ற அனைத்து வகுப்புவாத வன்முறை சம்பங்களின் போது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வேடிக்கை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்திருக்கின்றனர்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்

பாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு யாத்திரை

புதுடெல்லி, ஏப்ரல் 12: இன்று தீவிரவாத தாக்குதல்களும், சட்டவிரோத கைதுகளும் தேசத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அதேசமயம் தேசத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் உருமாறி வருகின்றது என்பதை நாம் அறிவோம். தீவிரவாத தாக்குதல்களினாலும், சட்ட விரோத கைதுகளாலும்

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

கொலை வெறி கும்பலுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய காவல்துறை!

ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 
ஹைதராபாத் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்வா தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் ராஜா சிங் என்ற ஹிந்துத்வா வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரிடம் இருந்து காவல்துறை பல முக்கிய தகவல்களை

ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!

ஹைதராபாத்: வகுப்புவாத கலவரத்தை தொடர்ந்து ஹைதராபாதில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஏராளமானோருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது. 

குர்மகுடா பகுதியில் ஹனுமான் கோயிலுக்கு அருகே சந்தேகத்திற்குரிய நிலையில் மாமிசம் காணப்பட்டதை தொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் தீவிரவாதிகள்

திங்கள், ஏப்ரல் 09, 2012

வி களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


பாப்புலர்  ஃபிரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சை ஆகிய ஐந்து இடங்களில் ஏப்ரல் 22 அன்று நடத்த உள்ளது. 
அது சமயம் தமிழகம் முழுவதும் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்த விளக்கப் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், இரு சக்கர வாகனப் பேரணி மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 
அதன் தொடர்ச்சியாக V.களத்தூரில்

செவ்வாய், ஏப்ரல் 03, 2012

கோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் பொதுக்கூட்டம்

கோவை: முஸ்லிம் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை உறுதி செய்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சட்ட வரைவை நிறைவேற்றிட வேண்டி ஜனநாயக ரீதியிலும் மற்றும் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் தேசிய அளவில் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி பேரணி, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கவர்னம் மாளிகை நோக்கி பேரணி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதை தொடர்ந்து...

எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி மத்தியில் தனி இடஒதுக்கீடு, மாநிலத்தில் உரிய இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கோவை, சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய 5 இடங்களில் நடத்த இருக்கின்றது. இப்போராடத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் விதமாக ஏப்ரல் 1 ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கரும்புகடை, சாரமேடு பகுதியில் மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை சி.எம். நாசர் (மாவட்ட செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட், கோவை) வழங்கினார். இக்கூட்டத்திற்கு கே.ராஜா உசேன் (மாவட்ட தலைவர் கோவை) அவர்கள் தலைமை தாங்கினார். எம். முஹம்மது அலி ஜின்னா (தேசிய துணைத்தலைவர்) அவர்களும் ஏ.எஸ். இஸ்மாயில் (மாநில தலைவர்) அவர்களும் மற்றும் பி.அப்துல் ஹமீது (மாநில பொதுச்செயலாளர், எஸ்.டி.பி.ஐ) அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். எ. ஷானவாஸ் (தெற்கு பகுதி தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்) அவர்கள் நன்றியுரை கூற இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.





திங்கள், ஏப்ரல் 02, 2012

பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாடு பணிகள் - மார்ச் மாத ரிப்போர்ட்

சென்னை:

1. சென்னையில் எம்.டி. படிப்பிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 40,000 கடனாக வழங்கப்பட்டது.

2. நான்காம் வகுப்பு படிக்கும் அல்லாஹ் பக்ஷ் என்ற மாணவனுக்கு ரூபாய்  3460/- வழங்கப்பட்டது. மற்றொரு மாணவனுக்கு ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

3. இராயபுரத்தில் கேன்சர் சிகிசைக்காக ஒரு நபருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது.

4. உனைஸ் ரஹ்மான் என்ற 13 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.

5. டயாலிஸிஸ் செய்வதற்காக ஒருவருக்கு ரூபாய் 1300/- உதவித்தொகை வழங்கப்பட்டது.

6. வியாபாரம் செய்ய ஒருவருக்கு ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

7. சென்னை துறைமுகம் தொகுதியிலிருந்து ஏழை பெண்ணின் திருமணத்திற்காக‌ ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

இராமநாதபுரம்:

1. இராமநாதபுரத்தில் அப்பென்டிக்ஸ் சிகிச்சை செய்வதற்கு உதவியாக ஹாலித் என்பவருக்கு ரூபாய் 10,600/- வழங்கப்பட்டது.

2. இளையான்குடியில் திருமண உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

கோவை:

1. கோவையில் சுண்ணாம்பு கால்வாயில் கூலி வேலை செய்துவரும்  எஸ். அபுதாஹிர் என்பவரின் இரண்டரை வயது மகன் முஹம்மது சவ்ஹானுக்கு பிறவிலேயே கேட்கும் திற‌னும், பேசும் திறனும் இல்லை. அந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 10200/- கொடுக்கப்பட்டது. (அறுவை சிகிச்சைக்கு சுமார் 6 லட்ச ரூபாய் செலவாகும். மேற்கொண்டு உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.)

2. மருத்துவ உதவியாக 4 நபர்களுக்கு மொத்தம் 5800/- வழங்கப்பட்டுள்ளது.

3. கோவை புதூரில் திருமண உதவியாக ரூபாய் 8000/- மதிப்புள்ள‌ உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

4. சாய்பாபா காலணியில் ரூபாய் 5000/- திருமண உதவி செய்யப்பட்டது.

5. ஷாஜஹான் என்பவருக்கு புத்தக கடை வைக்க கடனாக ரூபாய் 30,000 வழங்கப்பட்டது.

6. அல் அமீன் என்பவருக்கு ஆட்டோ வாங்க ரூபாய் 20,000/-  கடனுதவி செய்யப்பட்டது.

7. கல்வி உதவித் தொகையாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

நெல்லை:

1. செங்கோட்டையில் திருமண உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

2. தென்காசியில் திருமண உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது.

மதுரை:

1. மதுரையில் எம்.எஸ்சி படிப்பிற்காக  ஒரு சகோதரிக்கு ரூபாய் 8000/- உதவித்தொகை வழங்கப்பட்டது.

2. மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

திருச்சி:

1. திருச்சி மாவட்டம் புத்தாநத்த்தில் மிகவும் வறுமை நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு பொருளாதார உதவியாக ரூபாய் 14000/- வழங்கப்பட்டது.

2. சிறுகனூர் கிராமத்தில் கல்வி உதவித்தொகை ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

1. நாகையில் முஹம்மது நாகூர் என்பவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

2. மருத்துவ உதவியாக காதர் என்பவருக்கு ரூபாய் 4000/- வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:

1. தூத்துக்குடி சிவகளையில் அஸ்கர் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500/- வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

1. பழனி பெரியகுளத்தை சேர்ந்த ஹஸன் முஹம்மது என்பவருக்கு திருமண உதவித் தொகையாக ரூபாய் 5662/- வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

2. கீரணூரில் ஒரு சகோதரியின் திருமணத்திற்கு ரூபாய் 13600/- வழங்கப்பட்டது.

3. ஆதரவற்ற பெண் ஒருவருக்கு மாதமாதம் ரூபாய் 150/- வழங்கப்பட்டு வருகிறது.

4. திண்டுக்கலில் தையல் பயிற்சி நிலையம் துவங்குவதற்கு முதல் கட்டமாக ரூபாய் 3000/- வசூல் செய்யப்பட்டது.


பல்வேறு சிகிச்சைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் மார்ச் மாதத்தில் மட்டும் 65 யூனிட் இரத்த தானம் செய்துள்ளார்கள்.

ஆந்திராவில் வகுப்புவாத வன்முறை! நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

ஆந்திர மாநிலம் சங்கரரெட்டி என்னும் இடத்தில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் 1.32 கோடி மதிப்பிலான பொருட்கள் எரித்து தீக்கரையாக்கப்பட்டன. சங்கரரெட்டி பகுதி பா.ஜ.க தலைவரான பவான் குமார் தனது ஃபேஸ் புக் தளத்தில் முஸ்லிம்களின் புனித இல்லமான காபாவை இழிவுபடுத்தும் விதத்தில் புகைப்படம் வைத்திருந்ததால் இவ்வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் சமூக மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளனர். வன்முறை நடைபெற்ற இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டபோது முஸ்லிம்களின் 58 கடைகள்,  34 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. வன்முறை தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தும் இதுவரை ஒருவர் கூட கைதுசெய்யப்படவில்லை.

பழைய பேருந்து நிலையம் அருகே வன்முறையில் ஈடுபட்டுபட்டவர்கள் அங்கிருந்த  கடைகள், ஹோட்டல்கள் என முஸ்லிம்களின் வியாபார‌ ஸ்தலங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்கள் அப்பகுதிக்கு செல்ல முற்பட்டபோது அரசு கல்லூரி அருகே இருதரப்பினருக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றள்ளது.

அச்சமயத்தில் அங்கிருந்த காவல்துறையினர் முஸ்லிம் இளைஞர்களை தடுத்து நிறுத்தியதோடு வன்முறையாளர்களை தப்பிக்கவிட்டனர்.

மறுநாள் காலையில் முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றினைந்து காவல்துறையினரை எதிர்த்து புகார் அளித்தனர். காவல்துறையினர் வன்முறையாளர்களை கண்டுகொள்ளாது தப்பிக்க விட்டதன் விளைவாகத்தான் அதிகள் அளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக கூறினர்.

மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், எஸ்.பி விக்டர் ஜான், டி.எஸ்.பி. சஞ்சேய் ஆகியோ வன்முறை நிகழ்ந்த இடத்திற்கு வந்த போது அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் கண்டனக்கோஷங்களை எழுப்பினர். வன்முறையாளர்களை தப்பவைத்துவிட்டு கோடிக்கணக்கான பொருட்கள் சேதப்படுத்தப்பட்ட பின்னர் காவல்துறை அதிகாரிகள் வந்து பார்ப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். இந்தவன்முறை ஏற்பட்டதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏவே முழு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் சேதப்படுத்தப்பட்ட சொத்து மதிப்பின் விவரங்களை அரசுக்கு சமர்பித்து அது தொடர்பாக அரசாங்கத்தில் சிபாரிசு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்பி வன்முறையில் ஈடுபடவேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

முன்னால் எம்.பி லால் ஜான் பாஷா தலைமையில் சிலர் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பவர்களிடம் விசாரணையை மேற்கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து காவல்துறையினர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஆந்திரா பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது பா.ஜ.க தலைவரின் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதற்காகவே இவ்வாறான புகைப்படங்களை பா.ஜ.க தலைவர் தனது ஃபேஸ்புக் தளத்தில் உபயோகப்படுத்தியுள்ளார். பா.ஜ.க தலைவரின் இச்செயலை கண்டித்தும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைதியாக ஊர்வலம் நடத்த முயன்ற முஸ்லிம் இளைஞர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார்.

மதச்சார்பற்ற கட்சிகளும் காவல்துறையினரும் இந்த வன்முறை சம்பவத்தில் பாகுபாட்டுடன் நடந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளர். இவ்வன்முறையில் முஸ்லிம்கள் மீதே குறிவைத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. நோமானியா மஸ்ஜித் மீது நடைபெற்ற கல்வீச்சும், முஸ்லிம்களின் கடைகள் சேதப்படுத்தப்பட்டதை பார்க்கும்போது இது நன்றாக புலப்படுகிறது. முஸ்லிம்கள் மீது மட்டும் காட்டும் பாகுபாட்டை நிறுத்திவிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்