|
இப்ராஹீம் பாதுசா, அன்சாரி, ராஜா உசேன் |
முஸ்லீம்களின் இட ஒதுக்கீடுக்காக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சை ஆகிய இடங்களில் ஏப்ரல் 22 அன்று நடத்த தீர்மானித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட விளக்கப் பொதுக் கூட்டங்களும், தெரு முனைப் பிரசாரங்களும், வாகனப் பேரணிகளும் நடந்து வருகின்றன.
நேற்று 19/4/2012 அன்று கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் அன்சாரி அவர்களின் தலைமையில் நடந்தது. இச்சந்திப்பின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம் பாதுசா அவர்களும், மாவட்டத் தலைவர் கே.ராஜா உசேன் அவர்களும் உடனிருந்தனர். பிரபல பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|
மாலை மலரில் பிரசுரமான செய்தி |
|
தமிழ் முரசில் பிரசுரமான செய்தி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக