அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

KIFF நடத்திய "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை"


குவைத்:குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF) ஒரு மாத காலம் நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (13/04/2012) ஜம்மியத்துல் இஸ்லாஹி ரவ்தா ஆடிட்டோரியத்தில் வைத்து கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.சரியாக மாலை 6:45 மணிக்கு சகோதரர் அப்துல் பாரி அவர்கள் திருமறை குர்ஆன் வசனங்கள் ஓத
சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.நிகழ்ச்சி முழுவதையும் சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களே தொகுத்து வழங்கினார்கள்.  



பின்னர் KIFF-ன் தலைவர் அப்துல் சலாம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் இந்நிகழ்ச்சிக்கான முக்கியத்துவத்தையும் தேவையையும் எடுத்து கூறினார். அதன் பிறகு ஜம்மியத்துல் இஸ்லாஹி தலைவர் டாக்டர்.சுலைமான் ஷெட்தி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.இஸ்லாத்தில் உள்ள உணவு முறைகளை பற்றி விரிவாக கூறிய அவர், இதற்கு ஏற்பாடு செய்த KIFF-க்கு பாராட்டுக்களை தெரவித்தார்.


அதன் பிறகு "இஸ்லாமும் ஆரோக்கியமும்" என்ற தலைப்பில் டாக்டர்.அப்துல் ரகுமான் (ஜஹ்ரா அரசு மருத்துவமனை)அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்."நீங்கள் அல்லாஹ்வை நினைவு கொண்டால் உங்களுடைய மனது எந்தவித குழப்பமும் இன்றி சாந்தமாக இருக்கும்,அது உங்களுடைய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்,இதை மனதில் உறுதியாக ஏற்றுக்கொண்டு நபிமார்களும்,ஷஹாபாக்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு அளித்த முக்கியத்துவத்தை பற்றி விரிவாக கூறினார்.மேலும் அன்றாட வாழ்க்கையில் நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும்,அதன் நன்மை தீமைகள் பற்றியும் அழகுற எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்து "இதயநோய்கள்" என்ற தலைப்பில் டாக்டர்.தாமஸ் ஐசக் (அல்-ஷபா மருத்துவமனை) அவர்கள் உரையாற்றினார்.இதயம் எவ்வாறெல்லாம் நம்முடைய நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்படுகின்றது, அதை எப்படியெல்லாம் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று இதயம் சம்பந்தமான ஒரு தெளிவான விளக்கங்களை கூறினார்.

மேலும் திரு.ஹஷன் யூசுப் (தலைவர்,கர்நாடகா முஸ்லிம் வெல்பேர்), திரு.பஷீர் (தலைவர்,KKMA(D.K) விங்) போன்றோகள் இந்நிகச்சிக்கான தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பேண வேண்டிய உடற்பயிர்ச்சிகளை (ஆசனங்களை) KIFF-ன் தன்னார்வ தொண்டர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

இறுதியாக சகோதரர்.சிராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.இதில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.KIFF-ன் தன்னார்வ தொண்டர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்