இலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்த
வெள்ளிக்கிழமை நண்பகலில் புத்த பிட்சுகளால சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இனவெறி தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகளால் பள்ளிவாசலை நோக்கி பேரணியாக
வந்து, பின்னர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் நின்றிருந்த காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் புத்த பிட்சுகளை தாக்குதல் நடத்த விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த இனவெறி தாக்குதலால் வழக்கமாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் பிரசங்கமும், தொழுகையும் நடைபெறவில்லை. அதற்கான தயாரிப்பில் முஸ்லிம்கள் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதுதான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த விட்டு வேடிக்கை பார்த்த இலங்கை ராஜபக்ஷே அரசின் இனவெறியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக