அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், மே 28, 2012

SDPI-ன் தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள்

SDPI-ன் தஞ்சை மாவட்ட பொதுக்குழு 27-05-12 அன்று கும்பகோணம் A.M.மஹாலில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச்செயலாளர் K.S.இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் தஞ்சை மாவட்ட தொகுதி, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதன்படி 


  • மாவட்டத்தலைவர் -இப்ராஹிம் (கும்பகோணம்)

சிரியாவில் இடம்பெறும் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன - ஐ.நா.

சிரியாவில் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 
ஹொம்ஸ் நகரில் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உள்ளிட்ட 90 பேர் கொல்லப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்  பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நாவின் பணியாளர்கள் இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர்.

ஞாயிறு, மே 27, 2012

"சமூகம் ஒரு பார்வை" கருத்தரங்கம்


Live Video app for Facebook by Ustream

சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 90 பேர் பலி

சிரியாவில் இராணுவத் தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் மட்டும் 90 பேர் பலியாகி உள்ளனர், இதற்கிடையே ரஷ்யாவின் ஆயுத கப்பல் சிரியாவுக்கு விரைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இராணுவத்தின் ஒடுக்குதல் நடவடிக்கை மற்றும் வன்முறை சம்பவங்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளன. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர்.

சனி, மே 26, 2012

கூடங்குளம் வழக்குகளை திரும்பப் பெற மே 25ல் SDPI சென்னையில் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர்.


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அணு உலையை மூடிவரும் நிலையில், உலகம் அணு உலையின் ஆபத்துக்களை கண்டு வரும் இத்தருணத்தில் மக்களின் அச்சம் இயற்கையானதே!


பொதுமக்கள் மாத்திரமின்றி நாடு முழுவதும் முன்னாள் நீதிபதிகள், உயர் பதவி வகித்த அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தளபதிகள், விஞ்ஞானிகள், சமூக, அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அணு உலைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் அணி திரண்டு வருவது போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்த்துகிறது.

பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசை கண்டித்து ஜூன் 1 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் SDPI ஆர்ப்பாட்டம்

KKSM தெஹ்லான் பாகவி
மத்திய அரசு பெட்ரோல் விலையை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.7 .50 உயர்த்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் விழிபிதிங்கி நிற்கும் பொது மக்களை, இது மேலும் வாட்டி வதைக்கும். மத்திய அரசு எவ்வித சால்ஜாப்புகளையும் சொல்லி கொண்டு இருக்காமல் விலை உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் 

மத்திய அரசு தனக்கு இதில் சம்பந்தம் இல்லை, எண்ணெய் நிறுவனங்கள்தான் விலை உயர்வை அறிவித்து இருக்கின்றன என கூறுவது பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டும் கதையாகும். மத்திய அரசு விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிருவனங்களிடமிருந்து தனது கட்டுப்பாட்டில் திரும்ப கொண்டு வர வேண்டும்.

பழங்குடியின பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் :SDPI

B.அப்துல் ஹமீது
SDPI யின் மாநில பொதுச் செயலாளர் B.ஹப்துல் ஹமீது இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-
பழங்குடியின பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் :
கடந்த 22ம் தேதி திருகோவிலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு திருட்டு வழக்கின் விசாரணைக்காக டி.மண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை அழைத்துச் சென்ற காவல் துறையினர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்த காவல் துறையினர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கர்நாடகத்தில் மற்றுமொரு இந்துத்துவ சோதனை கூடம் : SDPI எதிர்ப்பு

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை குஜராத்தில் பாஜக ஆட்சியின்கீழ் சோதனைக்கூடத்தில் கொன்று குவித்து விட்டு பாவக்கறையை போக்க முஸ்லிம்களை ஒருசில பதவிகளில் அமர்த்தியும் தொப்பி அணிந்த ஒருசிலருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அழகு பார்த்து அதே சோதனையை மீண்டும் கர்நாடகத்திலும் நடத்தபட உள்ளது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் பகல்கொட்டா மாவட்டத்திலுள்ள தவலேஷ்வர என்ற ஊரிலுள்ள வக்ப் வாரியத்திற்கு சொந்தமான பள்ளிவாசல், உர்து பள்ளிக்கூடம் மற்றும் அடக்கஸ் ஸ்தலத்தை இடித்து தள்ளி ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் சங்க மதபிரிவினைவாத கூட்டம் கங்கணம் கட்டி வருகிறது.

வெள்ளி, மே 25, 2012

"சமூகம் ஒரு பார்வை" கருத்தரங்கம்


அனைவரும் வருக! வருக! வருக!

இடம்: லயன்ஸ் கிளப் மண்டபம், சிவானந்தா காலனி, கோவை.
நாள் : 27-05-2012 ஞாயிறு 
நேரம் : மாலை 5.30 மணி.

வியாழன், மே 24, 2012

நமது மீடியாக்களின் நிலைமை இன்று எப்படி இருக்கிறது நீதிபதி மார்கண்டேய கட்ஜு விளக்கம் !!!

ஊடகங்களை விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார் உண்மை வார்த்தைகள் மூலம்..! நீதிபதி மார்கண்டேய கட்ஜு. நமது மீடியா மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை செய்கிறது. பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது. மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. 
முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.

பெப்சி – கோக் குளிர்பானம் இந்தியனை அடிமையாக்கியது எப்படி?

இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் பெப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது. 

`BOVONTO' குடித்திருக்கிறீர்களா?

 தென்மாவட்டத்தைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்க தோன்றக்கூடிய ருசி கொண்டது.


pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்குவது `BOVONTO'வை கண்டு தான். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாகிறது என்ற பயம். இதனால் பல கடைகளில் பொவெண்டோவை விற்க கூடாது என்று வியாபாரிகளுக்கு... கட்டுப்பாடு போடுகிறார்கள்.


உங்களில் பலர் பூச்சி மருந்தான பெப்ஸி கோக் குடிக்க கூடும். அதற்கு மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.. அப்புறம் பெப்ஸி, கோக் பூச்சி மருந்துகளை வாங்கவே மாட்டீர்கள்.. :)


Dont drink Pepsi and coca cola..

Drink only `BOVONTO'See more

திங்கள், மே 21, 2012

மணிப்பூர் ஸ்கூல் சலோ சேவைகள்

மணிப்பூர் மாநிலத்தில் சோரா, போபெடேக் மற்றும் கீரக் போன்ற பகுதிகளில் கல்வியில் பொருளாதாரத்தில் மிகவும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் தங்குதடையில்லாமல் அடிப்படை கல்வியை தொடர தேவையான உபகரணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 

"ஸ்கூல் சலோ" என்ற பாப்புலர் ஃபிரண்டின் தேசிய அளவிலான கல்வி மேம்பட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக மணிப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் சமூக சேவகர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பாப்புலர் ஃபிரண்டின் சீரிய முயற்சிகளுக்கு என்றும் அதரவாக இருப்பதாக உறுதியளித்துள்ளனர் . மே 12 அன்று தூபால் மாவட்டத்திலுள்ள சோரா எனுமிடத்திலும், மே 14 அன்று கீரக் மற்றும் மே 15 அன்று போபெடேக் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாணவர் விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவில் ஏராளமான பொதுமக்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சமூகத்தை சக்திபடுத்த கைகோர்ப்போம்! பாப்புலர் ஃப்ரண்ட் பிரச்சாரம்

மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் உரையாற்றுகிறார்
இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அவல நிலையை மக்களுக்கு விளக்கி சமூகத்தை வலிமைப்படுத்த முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கல்வி, பொருளாதாரம், அரசியல், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலிருந்தும் ஓரங்கப்பட்டு அன்றாட வாழ்விற்காக பல முஸ்லிம்கள் அல்லல்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக வட இந்தியாவை உற்று நோக்கும் போது முஸ்லிம்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.

சனி, மே 19, 2012

அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவிவரும் மதம் எது?

அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவிவரும் மதம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? அது கிறிஸ்தவ மதமல்ல. 2012ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி வெளியிடப்பட்ட, ஐக்கிய அமெரிக்க மதரீதியான ஜனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் மிகவேகமாக பரவிவரும் மதமாக இஸ்லாம் விளங்குகின்றது. 
ஐக்கிய அமெரிக்க மதரீதியான ஜனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள், அமெரிக்க மத அமைப்புக்களின் புள்ளி விபரங்களுக்கான சங்கத்தினால் தொகுக்கப்பட்டுள்ளது.   இவ் அமைப்பினால் 2000-2010 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின்

வெள்ளி, மே 18, 2012

இஸ்லாமிய உலகம்: 2011

2010 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் 23 வருடங்கள் துனீசியாவின்  ஜனாதிபதியாக இருந்த ஸைன் அல் ஆப்தின் பின் அலி 2011 ஜனவரி மாதம் 14 ஆம் தேதி  ஆட்சி கவிழ்க்கப்பட்டார்.

எகிப்தில் 2011 ஜனவரி மாதம் 25 தேதி ஆரம்பமான மக்கள் புரட்சியினால் 2011 பிப்ரவரி  11 ஆம் தேதி, 30 வருடங்கள் எகிப்தின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹூஸ்னி முபராக் ஆட்சி கவிழ்க்கப்பட்டார். 2011 ஜனவரி மாதம் 25 தேதி எகிப்தில் ஆரம்பமான மக்கள் புரட்சி இதுவரை தொடர்கின்றது.

டுனீசியாவில் தோன்றிய புரட்சிகள் ஏனைய அரபு நாடுகளையும் சென்று அடைந்தன. இவ்வகையில் 2011 பிப்ரவரி  15 ஆம் தேதி  லிபியாவில்  ஆரம்பமானது. தொடர்ச்சியாக நடைபெற்ற இப்புரட்சியினால்  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயுதமேந்தி அரசாங்கப் படைகளுடன் போரிட்டனர். இவர்களுக்கு உதவியாக நேட்டோ படை லிபியாவின் அரச இலக்குகள் மீது வான் தாக்குதல்களை தொடர்ந்தன. ஏறத்தாள 8 மாதங்கள் நீடித்த இப்புரட்சியானால் லிபியாவை 42வருடங்களாக ஆட்சிசெய்தவரான கர்னல் முஅம்மர் கடாபி 2011 அக்டோபர்  20ஆம் தேதி  புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். பின்னர் 2011 அக்டோபர் 23ஆம் தேதி லிபியா சுதந்திர நாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.

உலகின் மிகப்பெரிய புத்தகம்: கின்னஸ் சாதனை

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப்பற்றிக்கூறும் புத்தகம், உலகின் மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப்பாரமான புத்தகமாக இது காணப்படுவதுடன், இப்புத்தகத்தை உருவாக்குவதற்கு 11மில்லியன் திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது. உலகில் அதிகளவு செலவில் உருவாக்கப்பட்ட புத்தமாகவும், நபி (ஸல்) அவர்களின் வாழ்வைப்பற்றிக் கூறும் புத்தகமாகவும் இப்புத்தகம் விளங்குகின்றது. துபாயின் பிரதி ஆட்சியாளாரும்,

வியாழன், மே 17, 2012

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் புகார்

K M சரீப் 
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய பதிமூன்று பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் புகார் செய்தது என்பதை பாப்புலர் ஃபிரண்டின் தேசிய பொது செயலாளர் இன்று பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பின்பும் அவதூறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் தான் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக ஒழுங்கு முறை ஆணையத்தை பாப்புலர் ஃபிரண்ட் அணுக நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.

புதன், மே 16, 2012

அடுத்த குஜராத்தாக மாற இருக்கும் கர்நாடகா மாநிலத்தை எப்படி காக்கப் போகிறோம்?

தினமும் ஒரு திடுக்கிடும் ஆதாரம், அவ்வப்போது ஒரு போலீஸ் அதிகாரியின் வாக்குமூலம். என்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் ஆதாரங்கள் குவிந்து கிடந்தும் நீதி என்பது, முஸ்லீம்களுக்கும், ஒடுக்கப்பட்டவர் களுக்கும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

நீதி தேடி காத்துக்கிடக்கு
ம் அம்மக்களுக்கு ஏமாற்றமும், தடுமாற்றமும் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. பொது வாழ்க்கையில் இருந்து ஒதுக்குதல், அடிமைத்தனம், வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பட்டினி பஞ்சம், ஒதுக்குப்புங்களில் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை என பாதிக்கப்பட்ட இவர்களின் இன்னல்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். குஜராத் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு இன்று பத்தாண்டுகள் கழிந்து விட்ட நிலையில், மேலும் ஒரு குஜராத்

விஞ்ஞானி படுகொலையுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

மஜீத் ஜமாலி பாசி 
ஈரானிய விஞ்ஞானியொருவரை இரு வருடங்களுக்கு முன் கொன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மஜித் ஜமாலி பாஷி (24 வயது) என்ற இந்த நபர் 2010 ஆம் ஆண்டு ஈரானிய தலைநகர் தெஹ்ரானிலுள்ள பேராசிரியர் மசூத் அலி மொஹமடியின் வீட்டிற்கு வெளியே குண்டொன்றை வெடிக்க வைத்து அவரைக் கொன்றதா...கக் குற்றம் சாட்டப்படுகிறது.

அத்துடன் மஜித் ஜமாலி பஷி இஸ்ரேலிய புலனாய்வு முகவர் நிலையமான மொஸாத்துக்காக உளவு பார்த்ததாகவும் பேராசிரியர் மசூத் அலி மொஹூடியைக் கொல்வதற்காக 120,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தைப் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடர்பில் இஸ்ரேல் எதுவித விமர்சனத்தையும் வெளியிடவில்லை.

தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் மசூத் ஈரானில் கடந்த சில வருடங்களில் கொல்லப்பட்ட உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகளில் ஒருவராக விளங்குகிறார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் தனது அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஈரான் தனது அணுசக்தி நிகழ்ச்சித்திட்டத்தைப் பயன்படுத்தி அணு ஆயுதத்தை தயாரிக்க முயற்சிப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் சந்தேகம் கொண்டுள்ளன.

ஆனால் தனது அணுசக்தி நிகழ்ச்சித்திட்டம் அமைதி வழியில் அமைந்த பொது மக்களுக்கான சக்திப் பிறப்பாக்கத் தேவைகளை நிறைவேற்றுவதை நோக்காகக் கொண்டது என ஈரான் வலியுறுத்தி வருகிறது.

புதன், மே 09, 2012

இரகசியமாக விடுவிக்கப்படும் தலிபான் போராளிகள்

ஆப்கானிஸ்தானிலுள்ள இராணுவ சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலிபான் போராளிகளை அமேரிக்கப்படையினர் இரகசியமாக விடுவித்து வருவதாகவும் இதனால் நடைபெற்றுவரும்  அமைதிப்பேச்சு வார்த்தை முடிவுக்கு வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வாசிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தலிபான்களை எதிர்த்து போராடுவதற்காக  பல்லாயிரக் கணக்கான  நேட்டோ படையினர் முகாமிட்டுள்ளனர். ஆப்கான் அரசிடம் பொறுப்புக்களை முழுமையாக  ஒப்படைத்து செல்வதற்காகவே

முஸ்லிம் வாக்குவங்கியை ஒழிக்கவேண்டும்! – தொகாடியா

வெறியைத் தூண்டும் தொகாடியா 
இந்தியாவில் முஸ்லிம் வாக்குவங்கியை ஒழித்து ஹிந்து வாக்கு வங்கிகளை உருவாக்கவேண்டும் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச பொதுச்செயலாளரான பிரவீன் தொகாடியா மிரட்டல் விடுத்துள்ளார்.


ஹிந்து பாதுகாப்பு சமிதியின் ஏற்பாட்டில் கேரள மாநிலம் காஸர்கோட்டில் நடந்த ஹிந்து சக்தி சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தொகாடியா உரை நிகழ்த்தினார்.

தொகாடியா தனது உரையில் கூறியது: ‘ஹிந்துக்கள் உள்ளிட்டோர் அளிக்கும்

திங்கள், மே 07, 2012

இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் (IFF) நடத்திய பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக பல்வேறு சமூக பணிகளை பல ஆண்டுகளாக செய்துவரும் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தை உடல் நலம் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்தது.
சவூதி அரேபியா மட்டுமல்லாது அனைத்து வளைகுடா நாடுகளிலும் உடற்பயிற்சி முகாம்கள், ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கங்...கள், மருத்துவ முகாம்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 27 அன்று இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் தம்மாம் தமிழ் பெண்கள் பிரிவு சார்பாக

சனி, மே 05, 2012

முத்துப்பேட்டை கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கருத்தரங்கம்

முத்துப்பேட்டை, மே 05 : கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய நவீன உலகில் மாணவர்களின் கடமைகளும், எதிர் கொள்ள வேண்டிய சவால்களும் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக N.உமர் பாரூக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் A. தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு CFI -யின் தமிழ் மாநில தலைவர். வழக்கறிஞர் Z .முஹம்மது தம்பி அவர்கள் நவீன உலகில் மாணவர்களின் கடமைகள் மற்றும் தேசிய நலனில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து PFI திருச்சி மாவட்ட தலைவர் A.அமீர் பாஷா அவர்கள் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பின்னர் வழக்கறிஞர் முஹம்மது பைசல் சட்ட கல்வியின் முக்கியத் துவத்தை பற்றி சிறப்பாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் செல்வரத்தினம் அவர்கள் முன்னிலை வகித்தார். 
மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியாக J.அப்துல் ரசாக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வெள்ளி, மே 04, 2012

மாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்!

திப்பு சுல்தான் 
இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள்.

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”

எதிரிகளுடன் தீரமுடன் போரிட்டு குண்டு காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடந்த திப்புவிடம் அவரது பணியாள்,

வியாழன், மே 03, 2012

நாளிதழ் செய்திகள்

உயிருக்குப் போராடும் உண்ணாவிரதப் போராளிகள்

மதுரை : மதுரையில் கோவில் மற்றும் ஆடிட்டோரியம் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் இருந்த டிபன் பாக்ஸில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அச்சைக்கிள் முழுமையாய் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

புதன், மே 02, 2012

NEWS TODAY

 
WÖɪ ÙLÖÛX YZeÛL ÙNÁÛ] IÚLÖŸyz¥ C£‹‰ r¢• ÚLÖŸy|ehUÖ¼½ r¢• ÚLÖŸy
| ‡T‡L· A‡Wz E†RW°. 

U‰ÛW›¥ ÛNef¸¥ ÛYeLTy| C£‹R "ÛP•TÖ•'' h| ÙYz†R‰. WÖUŸ ÚLÖ«¨eh A£f¥ N‡LÖWŸL· ŒL²†‡V C‹R h| ÙYzTÖ¥ U‰ÛW›¥ TR¼\• ŒX°f\‰.


சிப்பாய்கள் விசாரணை: "இராணுவம் முடிவு தெரிவிக்க வேண்டும்"  

இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் சாமானியர்களைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிப்பாய்களை இராணுவ நீதிமன்றத்தின் மூலம் விசாரிப்பதா அல்லது சிவில் நீதிமன்றங்கள் மூலம் விசாரிப்பதா என்பதை இந்திய இராணுவம் முடிவுசெய்ய வேண்டுமென்று இந்திய உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

தாமதிக்கப்பட்ட நீதி-அழிக்கப்பட்ட நீதி

2002-குஜராத் இனப்படுகொலையின் ஆவணங்களை அழித்ததன் மூலம் மோடி, இந்திய ஜனநாயகத்தை குழி தோன்றி புதைத்து விட்டார். இவருக்கு யார் பதிலளிக்கப் போகிறார்கள்?

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். நரேந்திர மோடியின் குஜராத்தில் நீதி தாமதிக்கப்படவில்லை மாறாக மறுக்கப்படுகின்றது; இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கின்றது. உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அரசின் உதவியுடன் நடத்தப்பட்ட இனப்படுகொலை நடந்து ஒரு தசாப்தம் (10 ஆண்டுகள்) ஆகும் பட்சத்தில் நீதியை கேலி செய்யும் செயல்கள் நிறுத்தப்படவில்லை.

2002 இனப்படுகொலை பற்றிய எத்தனை அரசு கமிசன்கள் (ஆணை குழுக்கள்) தங்களது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இப்பரிந்துரைகளோ யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. இவை எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே வெளிச்சம். இந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்கள், இந்திய தேசத்தின் நீதியின் இருப்பிடமான

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மேற்படிப்பு வழிகாட்டி முகாம்


29.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை கம்பம் மு.மு.பட்டி ரோட்டில் உள்ள கோகுலம் மஹாலில் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு கேம்ப்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத் தலைவர் தமீமுல் அன்சாரி, அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கம்பம் நகரத் தலைவர் ஜனாப் சிக்கந்தர் ஜெய்லானி மற்றும் குதுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது தம்பி அவர்கள்

செவ்வாய், மே 01, 2012

பயங்கரவாத இஸ்ரேலோடு ராஜீய உறவுகளை துண்டிக்க வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி பேரணி

இஸ்ரேலுக்கு எதிராக "மூவ்மென்ட்ஸ் ஃபார் சிவில் ரைட்ஸ்"
சார்பாக நடத்தப்பட்ட பாராளுமன்றம் நோக்கி பேரணி 
உலகில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் பலஸ்தீனில் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. பலஸ்தீனில் பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்து வருவதோடு பாலஸ்தீனியர்களை அவர்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி சிறைவைத்துள்ளது.
 
தன்னை சுற்றி உள்ள நாடுகளை அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டியும் வருகிறது. இஸ்ரேலிய உளவு அமைப்பு இந்தியாவில் ஊடுறுவி ஹிந்துத்துவா சக்திகளுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட இஸ்ரேலுடனான எல்லா உறவையும் மத்திய அரசு கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட பல இயக்கங்கள் ஒன்றிணைந்து

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்