முத்துப்பேட்டை, மே 05 : கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய நவீன
உலகில் மாணவர்களின் கடமைகளும், எதிர் கொள்ள வேண்டிய சவால்களும் என்ற
தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் இன்று
காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக N.உமர் பாரூக் அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்த இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் A. தமீம் அன்சாரி
அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இதில் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொண்டு CFI -யின் தமிழ் மாநில தலைவர். வழக்கறிஞர்
Z .முஹம்மது தம்பி அவர்கள் நவீன உலகில் மாணவர்களின் கடமைகள் மற்றும் தேசிய
நலனில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து PFI திருச்சி மாவட்ட தலைவர் A.அமீர் பாஷா அவர்கள்
மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ற தலைப்பில்
உரையாற்றினார்.பின்னர் வழக்கறிஞர் முஹம்மது பைசல் சட்ட கல்வியின்
முக்கியத் துவத்தை பற்றி சிறப்பாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு
வழக்கறிஞர் செல்வரத்தினம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும்
இந்நிகழ்ச்சியின் இறுதியாக J.அப்துல் ரசாக் அவர்கள் நன்றியுரை
நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக