அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், மே 16, 2012

அடுத்த குஜராத்தாக மாற இருக்கும் கர்நாடகா மாநிலத்தை எப்படி காக்கப் போகிறோம்?

தினமும் ஒரு திடுக்கிடும் ஆதாரம், அவ்வப்போது ஒரு போலீஸ் அதிகாரியின் வாக்குமூலம். என்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் ஆதாரங்கள் குவிந்து கிடந்தும் நீதி என்பது, முஸ்லீம்களுக்கும், ஒடுக்கப்பட்டவர் களுக்கும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

நீதி தேடி காத்துக்கிடக்கு
ம் அம்மக்களுக்கு ஏமாற்றமும், தடுமாற்றமும் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. பொது வாழ்க்கையில் இருந்து ஒதுக்குதல், அடிமைத்தனம், வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பட்டினி பஞ்சம், ஒதுக்குப்புங்களில் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை என பாதிக்கப்பட்ட இவர்களின் இன்னல்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். குஜராத் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு இன்று பத்தாண்டுகள் கழிந்து விட்ட நிலையில், மேலும் ஒரு குஜராத் போன்ற நிலைமையை நம் இந்தியா தாங்குமா? இந்த ஒடுக்கப்பட்ட சமூகம் தாங்குமா? அப்படி நிகழுமானால் அதன் விளைவு கற்பனை கூட பண்ண இயலாது.

சமீபகாலமாக தென் இந்திய மாநிலமான கர்நாடகத்தில் சங்கபரிவாரங்களி
ன் நடவடிக்கை அதிகரித்து வருவதை சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். 2013யில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கும் கர்நாடக பி.ஜே.பி. தடுமாறுகிறது. அதன் கடைசி ஆண்டாக இந்த ஆண்டு இருப்பதனாலேயே கர்நாடக மாநிலம் சங்க்பரிவார கோரத்தாண்டவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது...

முதலில் மூட்டை நிறைய ஊழலில் சிக்கித்தவித்த கர்நாடக பி.ஜே.பி இப்போது பாலியல் வழக்குகளிலும் சிக்கித் தவிக்கின்றனர். இதனை முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம்
நிருபர்கள் கேட்டதற்கு, நீங்களெல்லாம் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில்லையா என்ற பதிலே வந்தது. இதனையெல்லாம் மூட்டைப் பையில் மறைக்க ஆர்.எஸ். எஸ்ஸின் நிகழ்ச்சியான ஹிந்து சக்தி சங்கமாவை மாநிலம் முழுதும் நடத்திக்  கொண்டிருக்கிறது. இதில் இந்நாள் முதல்வரான சதானந்த  கவுடா ஆர். எஸ். எஸ்.இன் பிரத்யோக உடையில் இந்துத்துவ சக்திகளோடு கைகோர்த்து நின்றார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் நேர்முகாக இனவாத கும்பலுடன் கைகோர்ப்பது இதுவே முதல்முறை.

பி.ஜே.பி. யின் மூத்த தலைவர்களான எடியூரப்பா, சதானந்த கவுடாவுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஆர். எஸ். எஸ். அமைப்பின் மூத்த தலைவர் பிரபாகர் பட் ஜனவரியில் ஒரு பொதுக்கூட்டத்தி
ல் பேசும்போது முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை  களையுங்கள் என்று மத வெறியுடன் பேசியுள்ளார். ஆனால் காவல்துறையோ அங்கு எதுவுமே நடக்காதது போல கண்டும் காணமல் நின்றது. முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க கிருஸ்துவர்கள் பலதடவை காவல் துறை படியை ஏறியதன் விளைவாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை கைது செய்யவில்லை. அதன் பிறகு  சில நாட்களிலேயே  முஸ்லிம் கமிட்டி தலைவர் மகம்மத் மசூத் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் புனையப்பட்டது. அவர் செய்த குற்றம் என்னவென்றால் பிராபகர் பட்  கூறிய வார்த்தையை கண்டிக்க பத்திரிக்கையாளர்களை கூட்டியது தான். பிராபகர்  பட் பேசியது தொடர்பான செய்திகள் கரவலி அலே என்ற பத்திரிக்கையில் மட்டுமே வந்தது. இதன் மூலம் சங்க்பரிவார சூழ்ச்சிகளை மீடியாக்கள் திட்டமிட்டு மறைக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

கரவலி அலே என்ற பத்திரிக்கை, சிறுபான்மை சமூகத்தின் மீது கட்டவிழ்க்கப்பட
  அநீதிகளை அப்பத்திரிக்கையின் மூலம் ஆவணமாக்கியுள்ளது. அதன் காரணமாக அதன் எடிட்டர் சீதாராமன் 2009 இல் கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் பஜ்ராங்க்தல் தலைவர் ஒருவரை அவமானப்படுத்தியது தானாம். கடந்த சில மாதங்களாக கரவலி அலே பத்திரிக்கை செய்திகளை பார்த்தால் தினமும் ஏதாவது மசூதி இடிக்கப்பட்டது, தேவாலயங்கள் இடிக்கப்பட்டது, இசுலாமியப் பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டார்கள், கிருத்தவர்கள் தாக்கப்பட்டார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற செய்திகள் கட்டாயம் இடம் பெற்று வருகிறது. இந்துத்துவ வெறியர்கள் தாக்குதல்கள் நடத்தும் சமயத்தில் முதலில் பயன்படுத்தும் சொற்கள், முதலில் இசுலாமியர்கள், பிறகு கிருத்துவர்கள் என்பதே என்று சீத்தாராமன் சொல்லுகிறார். லவ் ஜிகாத், பசுவதை, தீவிரவாதம் போன்ற விஷயங்களில் காவல்துறை இந்துக்களுக்கு எதிராக நடந்து வருகிறது. முஸ்லிம்கள் எங்களை பகைத்துக் கொண்டால் பழைய கால பாடங்களை தருவோம் என்று ஹிந்து ஜாக்ரான் வேதிகா தலைவர் சத்யஜித் கரத்கள் பேசியுள்ளார். 2009ஆம் ஆண்டும், அதனை தொடர்ந்து நடந்த கலவரத்திற்கு பிறகு மங்களூர், சூரட்கர், பட்கள், உள்ளல் போன்ற அமைதியான பகுதிகள் இப்போது பதட்டமான பகுதிகளாகி உள்ளன. ஸ்ரீராம் சேனா, ஹிந்து ஜாக்ரான் வேதிகா, சனாதன் சன்ஸ்தா, பஜ்ராங்க்தன் ஆகிய ஹிந்து அமைப்புகள் இனவெறியை தூண்டி விடுகின்றன. செட்டி, பிலாவா, மொகாவீரா, பந்தாறு, பல்லவா, மாதிகா, நாடாவா, காவீரா, பல்வேறு சமூகங்கள் வாழும் பகுதிகளில் ஹிந்து அமைப்புக்கள் மதக்கலவரத்தை தூண்ட போராடி வருகின்றன...

சங்கபரிவாரங்களி
ன் கோரத்தண்டவங்கள் : 2008

ஆகஸ்ட் 9 யில் விவசாயி சத்தானத பூசாரி இந்துத்துவ  வெறியர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.


செப்டம்பர் 7 யில் வீடிலாவில் ரூபஸ்ரீ மற்றும் விகார் அஹ்மத் கண்மூடித்தனாக படுகொலை செய்யப்பட்டனர்.
அதே நாளன்று சமூக ஆர்வலர் தீபா மற்றும் அவரது நண்பர் அப்துல் விஹாத் மங்களூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டு தாக்கப்பட்டனர்.

15 டிசம்பர் இல் பட்களை சேர்ந்த முஸ்லிம்கள் 24 இளைஞர்கள்  இந்துத்துவ வெறியர்களால் தாக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் உயிரிழந்தார்.

சங்கபரிவாரங்களி
ன் கோரத்தண்டவங்கள் : 2009

ஜனவரி 24யில் மங்களூரில் முஸ்லிம் இளைஞர்களுடன் ஹிந்து இளம்பெண்கள் காணப்பட்டதால் அவர்களும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

16 ஆகஸ்ட் இல்  பந்த்வால் என்ற இடத்தில் தாருஸ்சலாம்  மதரசா ஒன்றில் பன்றியின் இறைச்சி வீசப்பட்டது.

3 நவம்பர் உப்பின்காடி அரசுக்கல்லூரியி
ல் இந்து முஸ்லிம் மாணவர்களுக்கு இடையில் மோதல் வெடித்தது.

19 நவம்பர் ஹிந்து பெண்களுக்கு காதல் கடிதம் எழுதியதாக கூறி இரண்டு முஸ்லிம் வாலிபர்கள் தாக்கப்பட்டனர்.


சங்கபரிவாரங்களி
ன் கோரத்தண்டவங்கள் : 2010

25 ஜனவரி உத்தர கன்னட என்ற இடத்தில் இரண்டு தேவாலயங்கள் சூறையாடப்பட்டன.
அங்கிருந்த மேரியின் சிலைகள் உடைக்கப்பட்டன.

சங்கபரிவாரங்களி
ன் கோரத்தண்டவங்கள் : 2011

25 ஜனவரி பஜ்ராங்க்தல் உறுப்பினர் கிஷோர் என்பவரை துணை இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஷெட்டி தாக்கியதை தொடர்ந்து ஷெட்டி தற்காலிக  பணிநீக்கம் செய்யப்
படுகிறார்.

1 பிப்ரவரி அன்று புத்தூர் எ.எஸ்.பி. அமித் சிங்க் பந்த்வால் நகர வளர்ச்சி குழுமத்தலைவர் கோவித் பிரபுவை அவமதித்ததாக  கூறி இடமாற்றம் செய்யப்
படுகிறார். அவரை பணிநீக்கம் செய்ய பி.ஜே.பி எம்.பி. நவீன் குமார் மற்றும் எம்.எல்.எ மல்லிகா பிரசாத் அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்டு தாக்குகின்றனர்.

16 மார்ச் கார் மெக்கானிக் பக்ருதீன் இந்து பெண்ணை காதலித்ததால் கொலை செய்யப்பட்டார்.
அடுத்து உள்ளல் என்ற இடத்தில் மைமூன என்ற பெண் தனது தந்தை முகம்மத் அலி மற்றும் மகன் ஜாவித் அலியின் கைதை கண்டித்து சிபிஐ  விசாரணை கோருகிறார். ஆனால் ஆர்.எஸ். எஸ்ஸின் கட்டளைக்கு இணங்க இவர்கள் மீது தீவிரவாத வழக்கு பதியப்பட்டது.

30 ஜூலை தன்னை கட்டாயப்படுத்தி
பஜ்ராங்க்தல் உறுப்பினராக சேர்த்ததாக மன்கூலரை சேர்ந்த புஷ்ரா புகார் கொடுக்கிறார்.

22 ஆகஸ்ட் சுல்லியாவில் முஸ்லிம் பெண்களை கேலி செய்த இந்துத்துவ வெறியர்களை தட்டிக்கேட்ட முகம்மத் ரியாஸ் என்ற வாலிபர் தாக்கப்பட்டார்.


28 டிசம்பர் 20பேர் கொண்ட இந்துத்துவ கும்பல் மதமாற்றம் நடப்பதாக கூறி மங்களூரில் உள்ள ஹெப்ரோன் என்ற தேவாலயத்தை சூறையாடினர்.

ரூபினா (22) என்பவர் பிறப்பால் பிராமின சமூகத்தை சேர்ந்தவர். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்தினால் இன்று அவள் தன்  சொந்த மாநிலத்திலேயே தன்  பிஞ்சு குழைந்தைகளுடன் ஒரு அகதியைப்போல் வாழ்கிறாள். கல்யாணம் ஆனா புதிதிலேயே அவள் கணவர் மீது தீவிரவாதி வழக்கு தொடரப்பட்டது.

ஆதாரம்: விடியல் மாத இதழ்
இப்படி அடுத்தடுத்து இசுலாமியர்கள் மீது வன்முறைகளும், பொய் வழக்குகளும் திணிக்கப்படுகின்றன. ஆட்சி பறிபோய்விடக்கூடாது  என்ற ஒரே காரணத்திற்க்காக இந்து உணர்வை தூண்டிவிட்டு ஓட்டுகளாக மாற்றத் துடித்து, சிறுபான்மை சமூகத்தை ஒடுக்க நினைக்கின்றனர். அடுத்த குஜராத்தாக மாற இருக்கும் கர்நாடகா மாநிலத்தை எப்படி காக்கப் போகிறோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்