அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், மே 02, 2012

தாமதிக்கப்பட்ட நீதி-அழிக்கப்பட்ட நீதி

2002-குஜராத் இனப்படுகொலையின் ஆவணங்களை அழித்ததன் மூலம் மோடி, இந்திய ஜனநாயகத்தை குழி தோன்றி புதைத்து விட்டார். இவருக்கு யார் பதிலளிக்கப் போகிறார்கள்?

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். நரேந்திர மோடியின் குஜராத்தில் நீதி தாமதிக்கப்படவில்லை மாறாக மறுக்கப்படுகின்றது; இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கின்றது. உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அரசின் உதவியுடன் நடத்தப்பட்ட இனப்படுகொலை நடந்து ஒரு தசாப்தம் (10 ஆண்டுகள்) ஆகும் பட்சத்தில் நீதியை கேலி செய்யும் செயல்கள் நிறுத்தப்படவில்லை.

2002 இனப்படுகொலை பற்றிய எத்தனை அரசு கமிசன்கள் (ஆணை குழுக்கள்) தங்களது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இப்பரிந்துரைகளோ யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. இவை எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே வெளிச்சம். இந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்கள், இந்திய தேசத்தின் நீதியின் இருப்பிடமான குஜராத் மற்றும் மஹாராஸ்டிரா நீதிமன்றங்களின் கதவுகளை தொடர்ந்து தட்டிய வண்ணம் உள்ளனர்.

நீதிமன்றங்களின் ஒப்பாரிவைக்கும் சுவர்களை தங்கள் மண்டையால் முட்டுகின்றார்கள். இன்னும் இந்திய திரு நாட்டின் நீதிமன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கை போகவில்லை. இன்று இல்லை என்றால் நாளை.. நாளை இல்லை என்றால் மறுநாள்… எப்படியேனும் ஒரு நாள் நீதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள் இவர்கள்.

2009-ஆம் ஆண்டு கோடை காலத்தில் குஜராத்திற்கு சென்ற பொழுது எல்லோரிடமும் அடித்தொண்டையில் இருந்து வரும் விசயங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்தியாவின் மிகவும் உந்துதலுடன் இயங்கிக் கொண்டிருந்த குஜராத் முஸ்லிம் சமூகம், 2002 இனப்படுகொலைக்குப் பின்பு, தங்களை தங்களது கூட்டிற்குள் உள் இழுத்து கொண்டுள்ளார்கள். நத்தையைப் போல! தங்களது சொந்த நாட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்கள்! ஒரு தசாப்தம் முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வுகளின் கனவுகளும் புலம்பல்களும் இன்னும் அவர்களைத் தாக்குகின்றன.

முஸ்லிம் சமூகம் இன்னும் அச்சத்தால் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களோ, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களோ இத்தனை வழக்குகளையும் பதியவில்லை, மாறாக சுயநலமற்ற சமூக ஆர்வலர்களான கம்யூனிஸம் காம்பாட் பத்திரைக்கையின் ஆசிரியரான டீஸ்டா செடல்வாட், ஜன் சங்கர்ஸ் மோர்சாவின் முகுல் சின்ஹா போன்றவர்களால் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை எனது பயணத்தின் பொழுது இவர்ளையெல்லாம் நேர்முகம் செய்வதற்கு வாய்ப்பு கிட்டியது.

முஸ்லிம் சமூகத்தின் மீது மோடியும் அவரது அரசு உயர் அதிகாரிகளும் கட்டவிழ்த்து விட்ட கொடூரங்களும், முஸ்லிம்களை கூட்டுக்கொலை, கற்பழிப்புகள் செய்ய மோடியும் அவரது உயர் அதிகாரிகளும் வழங்கிய உத்தரவுகள் பற்றிய வாக்கு மூலங்கள் பாதிக்கப் பட்டவர்களின் வாய் வழியே வரவில்லை மாறாக உயர் போலீஸ் அதிகாரிகளான ஆர்.பி. ஸ்ரீகுமார், ராகுல் ஷர்மா மற்றும் சஞ்சீவ் பட் போன்ற அதிகாரிகள், 2002 ஆம் ஆண்டு நடந்த கொடூரங்களின் பின்னனிகளை அதிகார மட்டத்திற்குள் நடந்த உரையாடல்களை நமக்கு அள்ளித்தருகிறார்கள்.

இதனால் தான் என்னவோ கொடூரமான அந்த நாட்களில் நடந்த கற்பழிப்புகளுக்கும், சித்ரவதைகளுக்கும், கொலைகளுக்கும் எப்படியும் நீதி கிடைக்கும் அல்லது நீதி கிடைக்க வைக்க யாராவது போராடுவார்கள் என்று இருந்து விட்டார்கள், பாதிக்கப்பட்ட மக்களும் குடும்பத்தினரும் அவர்கள் அமைதியாகவும், பொருமையாகவும் நீதி கிடைக்கும் என்று தாமதித்தவர்கள், தாமதித்து காத்துக் கிடக்கின்றார்கள்.

ஆனால் இப்பொழுது நீதிக்கான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு விட்டது. மிகவும் சிறப்பான குஜராத் அரசு(?) அத்தனை பதிவுகளையும் வாக்கு மூலங்களையும் அழித்து விட்டிருக்கிறது, அல்லது அழித்து விட்டதாக நமக்குச் சொல்லப்படுகிறது. குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.பி. வகீல் கடந்த வாரம் நானாவதி ஆணைக்குழுவிடம் கூறுகையில்.

2002ல் பதிவு செய்யப்பட்ட பதிவுகள் தொலைபேசி உரையாடல்கள் அவற்றின் லாக் புத்தகங்கள், காவல்துறை வாகன லாக் புத்தகங்கள், அதிகாரிகளின் பயன டைரிக் குறிப்புகள் எல்லாம் 2007 ஆம் ஆண்டு “நியம நடைமுறை” என்ற அடிப்படையில் அழிக்கப்பட்டுவிட்டன. எதார்தத்தில் ‘தேவையற்ற கோப்புகள்’ ஐந்து வருடத்திற்கு பிறகு அழிக்கப்படுவது ‘நியம நடைமுறை’ என்று கூறினார்.

தற்செயாலாக அந்த தேவையற்ற கோப்புகள் தான் நீதியை வழங்க, மேலும் மோடி மற்றும் அவரது ஆட்களின் எதிர்காலமே இந்த கோப்புகளின் கையில் தான் இருந்தது. ‘தேவையற்ற கோப்புகள்’ என்ற அழிக்கப்பட்ட சாட்சியங்கள், தடயங்கள், வாக்குமூலங்கள் 2002-ஆம் ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்ட இனப்படுகொலைக்கான ஒட்டு மொத்த ஆதாரங்களாகவும், நீதிபதி நானாவதி கமிஷனின் வழக்கு விசாரனையின் இருதயமாகவும், அக்ஷ்யா மேத்தா நீதிமன்ற கமிஷனின் வழக்கு விசாரனையின் உயிரோட்டமாக இருக்கும் பட்சத்தில் எப்படி அழிக்க இயலும் அந்த கோப்புகளை?

இவைகள் அனைத்தும் மோடி கடந்த 3 வருடங்களாக எப்படி ஆட்சி செய்கிறார் என்பதைக் காட்டுகின்றது. மோடி மற்றும் அவரது குற்றங்களை எதிப்பவர்கள் மீது எப்படி மோடி சேற்றை வாரி வீசுகிறார் என்பதையும் அவர்களை மோடி இல்லாமல் ஆக்குகிறார் என்பதையும் இவைகள் நிரூபிக்கின்றன. ஆனால் இதைப்பற்றி ஒருவரும் வாய் கூடத் திறப்பது இல்லை.

கூட்டிக்கழித்துப் பார்த்தால், மோடியின் குற்றங்களின் பதிவுகளை அழிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைத் தேடித்தரப் போராடுபவர்களை “கேலிக் குரியவர்களாக” ஆக்குவதோடு மட்டுமல்லாமல் இந்திய ஜனநாயகத்தின் சித்தாந்தத்தையும் நீதிக்கு முன் அனைவரும் சமம் என்ற தாரக மந்திரத்தையும் ஏளனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் மோடி.

சட்டத்தின் ஆட்சியைக் கேளிக்கூத்தாக மட்டும் மோடி மாற்றவில்லை; மேலும் நமது தேசியத்தின் சமய சார்பற்ற ஜனநாயக அமைப்புகளையும் அவற்றின் சமூகத்தின் எல்லாதரப்பு மக்களுக்கு நீதி வழங்க முயற்சி செய்யும் சக்திக்கும் மிகவும் கேவலத்தை உண்டாக்கியிருக்கிறார் மோடி.

இந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களை கற்பழித்த, கொலை செய்த, அட்டூழியங்களை அவிழ்த்துவிட்டு, அதனைச் செய்ததையும் பகிரங்கமாக ஒத்துக் கொண்ட பாஸிசவாதிகள் தண்டிக்கப்படுவார்கள. நமக்கு நீதி வழங்கப்படும் அன்று அமைதியாக இருந்த இவர்கள் அரசு அமைப்புகளில் ஒன்றை அடுத்து மற்றொன்று தோல்வியடைந்து வருவதை மிகவும் அமைதியாக கண்டு வருகிறார்கள். இந்த அட்டூழியம் செய்பவர்களின் வாக்கு மூலங்கல் ஒளிப்பதிவுகளில் தெளிவாகப் பதிவாகியிருந்தும் நீதி தோற்றுவருகிறது.

தற்பொழுது நடந்து வரும் நிகழ்வுகள் (அரசு கோப்புகள் அழிக்கப்பட்ட விசயம்) ஏற்கனவே மிகவும் நொந்து நூலாகிப் போன முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் என்ன உணர்வுகளை உருவாக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை.

உலகிலேயே மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம், இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் சூழலில், தான் வாழும் நாடு மற்றும் அதன் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று நினைக்கவே உள்ளம் நடுங்குகிறது. அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் அரசியல் கட்சிகள் மீதும் அரசியல் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர்.

மோடியின் அரசியல் கட்சியான பி.ஜே.பி யுடன் மிகவும் மோசமான உறவினைக் கொண்டுள்ளது பற்றி விளக்கவே வேண்டியது இல்லை. அதே போல் சோனியா காந்தியின் காங்கிரஸாலும் முஸ்லிம்களுக்கு மிகவும் குறைந்த அளவே உதவி கிடைத்துள்ளது. காங்கிரஸோ பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவுவதால் இந்து வாக்கு வங்கிகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்? நீதியை தேடி எங்கு செல்வார்கள்? எந்த எதிப்பார்ப்பும், நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு? இந்தியாவின், மிகவும் அதிர்ச்சிக்குள்ளான பொது மக்களிடம் இருந்து இந்தக் கேள்விகள் உண்டாகின்றன ? அமைதியும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சமூகம் தான் இந்தியாவை இந்தியாவாக வைத்திருக்கின்றன. இவை தான் கொதிக்கும் உலை போன்ற நம் தேசத்தின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும்.

நரேந்திர மோடியின் குஜராத் அரசு நீதியையும், சட்டத்தையும் கற்பழித்து வருகின்றன இதற்கு எதிராக நம் இந்திய தேசம் வெகுண்டு எழ வேண்டும். குஜராத் 2002 கயவர்களுக்கு ஏதாவது ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்றால் அது நம் தேசத்தின் ஜனநாயகம் தான். இந்தியாவிற்காக பேசுவது மோடியின் குஜராத் அரசு அல்ல. மாறாக காந்தியின் குஜராத் இந்தியாவை முன்னிலை படுத்த வேண்டும்.

முஸ்லிம்களை கூண்டோடு கூட்டாக அழித்த பயங்கரவாதிகள் தண்டிக்கப்படாமல் விட்டு விட்டதாக யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம் அது மிகப் பெரும் தவறு. நிச்சயமாக நீதி அவர்களை காவு கொல்லும். இப்பொழுது இல்லையென்றால் பிற்பாடு. அவர்களுக்கான கூலி காத்துக் கிடக்கின்றது. இவ்வுலகில் இல்லை என்றால் மறுவுலகில். நீ ஒடும் வரை ஒடூ (மோடியே! ஒடும் வரை ஒடூ) உனது விதி உன்னை வந்து அடையும்.

இப்படியும் ஒரு கவிஞர் எச்சரிக்கிறார்:

“ஜோ சுப் ரஹேகி ஜடான் -இ-கன்ஜர்
லஹூ புகாரீகா ஆஸ்தீன் கா”

“குத்துவாள் அமைதியாக இருந்தாலும், உன்னுடைய சட்டையில் பட்ட இரத்தம் உண்மையை வெளிப்படுத்தும்”.

அய்ஜாஜ் ஜாகா செய்யது/அரபு நியூஸ்
தமிழில் : இஸ்மாயில்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்