அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், மே 28, 2012

சிரியாவில் இடம்பெறும் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன - ஐ.நா.

சிரியாவில் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 
ஹொம்ஸ் நகரில் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உள்ளிட்ட 90 பேர் கொல்லப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்  பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நாவின் பணியாளர்கள் இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர்.

இதேவேளை வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டியது சர்வதேசத்தின் பொறுப்பு என்று பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் அவசர கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளதுடன், ஆயுததாரிகளின் தாக்குதலே உயிரிழப்புக்களுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்