வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக பல்வேறு சமூக பணிகளை பல ஆண்டுகளாக செய்துவரும் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தை உடல் நலம் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்தது.
சவூதி அரேபியா மட்டுமல்லாது அனைத்து வளைகுடா நாடுகளிலும் உடற்பயிற்சி முகாம்கள், ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கங்...கள், மருத்துவ முகாம்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 27 அன்று இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் தம்மாம் தமிழ் பெண்கள் பிரிவு சார்பாக பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் அல்கோபர் ரஃபா மருத்துவமனை அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சரியாக மாலை 6.45 மணிக்கு சகோதரி ரஷிதா அஹமது மீரான் திருமறையை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகோதரி தாபிலா சாதிக்மீரான் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் குறித்த அறிமுகத்தையும் அது தற்போது ஆற்றிவரும் பணிகளையும் விரிவாக விளக்கினார்.
பின்னர் உரையாற்றிய சகோதரி இஸ்மாயில் திப்புசுல்தான் இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறினார்.
பின்னர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தம்மாம் மெடிக்கல் டிஸ்பன்சரி மகப்பேறு நிபுணர் டாக்டர் சாந்தி அவர்கள் “புற்று நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தவிர்க்கும் வழிமுறைகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பரவலாக பெண்களுக்கு ஏற்படும் மார்பகம் மற்றும் கர்ப்பபை புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களை மிகவும் எளிமையாக விளக்கினார். மேலும் புற்று நோயை எவ்வாறு கண்டறியலாம் என்ற செயல்முறை விளக்கத்தையும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளையும் வரைபடம் மூலமாக விளக்கியது சிறப்பாக இருந்தது.
அதன் பின்னர் புற்று நோய் மட்டுமல்லாமல் பொதுவாக கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எளிமையாக பதிலளித்தார். பின்னர் சிறப்பு விருந்தினர் டாக்டர் சாந்திக்கு சகோதரி சஹாரா சலாம் கான் நினைவு பரிசினை வழங்கினார்.
சகோதரி ஷமா அப்சர் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் இறுதியாக சகோதரி ரஜினா முஹம்மது பைசல் நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக