அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், மே 16, 2012

விஞ்ஞானி படுகொலையுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

மஜீத் ஜமாலி பாசி 
ஈரானிய விஞ்ஞானியொருவரை இரு வருடங்களுக்கு முன் கொன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மஜித் ஜமாலி பாஷி (24 வயது) என்ற இந்த நபர் 2010 ஆம் ஆண்டு ஈரானிய தலைநகர் தெஹ்ரானிலுள்ள பேராசிரியர் மசூத் அலி மொஹமடியின் வீட்டிற்கு வெளியே குண்டொன்றை வெடிக்க வைத்து அவரைக் கொன்றதா...கக் குற்றம் சாட்டப்படுகிறது.

அத்துடன் மஜித் ஜமாலி பஷி இஸ்ரேலிய புலனாய்வு முகவர் நிலையமான மொஸாத்துக்காக உளவு பார்த்ததாகவும் பேராசிரியர் மசூத் அலி மொஹூடியைக் கொல்வதற்காக 120,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தைப் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடர்பில் இஸ்ரேல் எதுவித விமர்சனத்தையும் வெளியிடவில்லை.

தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் மசூத் ஈரானில் கடந்த சில வருடங்களில் கொல்லப்பட்ட உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகளில் ஒருவராக விளங்குகிறார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் தனது அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஈரான் தனது அணுசக்தி நிகழ்ச்சித்திட்டத்தைப் பயன்படுத்தி அணு ஆயுதத்தை தயாரிக்க முயற்சிப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் சந்தேகம் கொண்டுள்ளன.

ஆனால் தனது அணுசக்தி நிகழ்ச்சித்திட்டம் அமைதி வழியில் அமைந்த பொது மக்களுக்கான சக்திப் பிறப்பாக்கத் தேவைகளை நிறைவேற்றுவதை நோக்காகக் கொண்டது என ஈரான் வலியுறுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்