அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, மே 26, 2012

பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசை கண்டித்து ஜூன் 1 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் SDPI ஆர்ப்பாட்டம்

KKSM தெஹ்லான் பாகவி
மத்திய அரசு பெட்ரோல் விலையை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.7 .50 உயர்த்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் விழிபிதிங்கி நிற்கும் பொது மக்களை, இது மேலும் வாட்டி வதைக்கும். மத்திய அரசு எவ்வித சால்ஜாப்புகளையும் சொல்லி கொண்டு இருக்காமல் விலை உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் 

மத்திய அரசு தனக்கு இதில் சம்பந்தம் இல்லை, எண்ணெய் நிறுவனங்கள்தான் விலை உயர்வை அறிவித்து இருக்கின்றன என கூறுவது பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டும் கதையாகும். மத்திய அரசு விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிருவனங்களிடமிருந்து தனது கட்டுப்பாட்டில் திரும்ப கொண்டு வர வேண்டும்.



மத்திய அரசை கண்டித்தும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூன் 1 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் SDPI சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று K.K.S.M .தெஹ்லான் பாகவி, மாநில தலைவர், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்