அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஞாயிறு, மே 27, 2012

சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 90 பேர் பலி

சிரியாவில் இராணுவத் தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் மட்டும் 90 பேர் பலியாகி உள்ளனர், இதற்கிடையே ரஷ்யாவின் ஆயுத கப்பல் சிரியாவுக்கு விரைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இராணுவத்தின் ஒடுக்குதல் நடவடிக்கை மற்றும் வன்முறை சம்பவங்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளன. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர்.
கோபி அனான் 
இதனால் ஐ.நா.சபை மற்றும் அரபு நாடுகளின் சிறப்பு பிரதிநிதியான கோபி அனான் 6-அம்ச சமரச திட்டத்தை உருவாக்கினார். அதன்படி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும் வன்முறை சம்பவங்கள் நீடிக்கிறது. இதில் தினமும் ஏராளமானோர் உயிர் இழக்கிறார்கள்.


எனவே மீண்டும் சமாதான முயற்சியில் ஈடுபட ஐ.நா. சிறப்பு தூதர் கோபி அனான் சிரியா செல்ல இருக்கிறார்.


இந்நிலையில் அங்கு 2-வது பெரிய நகரமான ஹோம்ஸ் நகர வீதிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ராணுவ டாங்கிகள் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சில இடங்களில் கல்வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன.
பஷார் அல் அசாத், சிரியா ஜனாதிபதி
இத்துடன் ஹூலா என்ற இடத்தில் இராணுவத்தினர் பீரங்கியால் சுட்டதில் 13 குழந்தைகள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


துருக்கி எல்லை அருகே இராணுவ ஹெலிகாப்டர் குண்டு வீசியதில் 20 பேர் பலியானார்கள். கான்செப்பா என்ற இடத்தில் நடைபெற்ற மோதலில் 4 போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலியானதாக சிரியா அரசாங்கம் கூறியது. மொத்தத்தில் அங்கு நடைபெற்ற ஒரே நாள் வன்முறையில் 90 பேர் பலியாகி இருக்கிறார்கள்.


இந்நிலையில் சிரியா ஜனாதிபதி ஆசாத்துக்கு ரஷ்யா, சீனா நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. சிரியாவுக்கு ரஷ்யா பெரும் அளவில் ஆயுதம் வழங்கி வருகிறது.


தற்போது ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்ய சரக்கு கப்பல் ஒன்று சிரியாவுக்கு செல்கிறது. அது இன்னும் ஓரிரு நாட்களில் சிரியா துறைமுகத்தை சென்றடையும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்