மணிப்பூர் மாநிலத்தில் சோரா, போபெடேக் மற்றும் கீரக் போன்ற பகுதிகளில் கல்வியில் பொருளாதாரத்தில் மிகவும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் தங்குதடையில்லாமல் அடிப்படை கல்வியை தொடர தேவையான உபகரணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
"ஸ்கூல் சலோ" என்ற பாப்புலர் ஃபிரண்டின் தேசிய அளவிலான கல்வி மேம்பட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக மணிப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் சமூக சேவகர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பாப்புலர் ஃபிரண்டின் சீரிய முயற்சிகளுக்கு என்றும் அதரவாக இருப்பதாக உறுதியளித்துள்ளனர் . மே 12 அன்று தூபால் மாவட்டத்திலுள்ள சோரா எனுமிடத்திலும், மே 14 அன்று கீரக் மற்றும் மே 15 அன்று போபெடேக் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாணவர் விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவில் ஏராளமான பொதுமக்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
வாபாகி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாசூர் ரஹீம், ராஜ்மோல் சிங்க், பிரேந்திரா சிங்க், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜமாலுதீன், மௌலவி அப்துல் மஜீத் முப்தி அர்ஷத் காசிமி, மாநில தலைவர் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, போபெடேக் மாமாங் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் குலா சிங்க் போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய திட்டங்களை பாப்புலர் ஃபிரண்ட் கல்வியாண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தி வருகிறது. பாப்புலர் ஃபிரண்ட் கவனம் செலுத்தும் மிக முக்கிய பகுதியில் ஒன்று கல்வி வளர்ச்சி. மிகப்பெரிய முதலீட்டுடன் கல்வி நிருவனங்களை தொடங்குவதைவிட தற்போது இருக்கக்கூடிய வசதிகளைக்கொண்டு முறையாக கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி கொடுத்து ஊக்குவிப்பது, பெற்றோர்களையும் சமூகத்தில் பெரியவர்களையும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆர்வமூட்டுதல், பொருளாதாரரீதியாகவும் கல்விரீதியாகவும் உதவி செய்வது, மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவி செய்து ஆதரிப்பது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
குறிப்பாக கீழ்கண்ட ஐந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்கூல் சலோ, சர்வசிக்க்ஷா கிராம் - முழு கல்வியறிவு பெற்ற கிராமத்திட்டம், கல்வி வழிகாட்டுதல்கள், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தல்.
ஸ்கூல் சலோ மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஸ்கூல் சலோ என்ற தேசிய அளவிலான பிரச்சாரம் மேற்கொள்கிறது. இரண்டுமாத பிரச்சாரம் காலம் கோடை விடுமுறை பள்ளிகள் திறக்கப்படும் காலத்தைப் பொறுத்து அந்தந்த மாநிலத்திற்கு தகுந்தாற்போல் இருக்கும். இந்த ஸ்கூல் சலோ அல்லது பள்ளிக்கூடம் செல்வோம் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கீழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படும். அடிப்படைக் கல்வி பெறாத பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கிராமங்களில் நட்த்தப்படும். குறிப்பாக பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்படும். பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களை பற்றி உள்ளூர் கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து படிப்பை தொடர ஆவன செய்யப்படும்.
வீடுவீடாகவும் பொது நிகழ்ச்சிகளின் மூலமும் பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் விளக்கப்படும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொருளாதார ரீதியில் வசதிபடைத்த செல்வந்தர்கள் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அணுகி அவர்களின் மூலமாக தேவையுள்ள மாணக்கர்களின் சீருடை, நோட்டு புத்தகங்கள் போன்ற கல்வி உபகரணங்கள் விநியோகிக்கப்படும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வும், இந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறிய புத்தகங்கள் விநியோகிக்கப்படும். மாணவர்கள் பேரணி, தெருவோர விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவை நடத்தப்படும். பாப்புலர் ஃபிரண்டின் கீழ்தட்டு மக்களிடையேயான இந்த சிறிய முயற்சிகளுக்கு கைமேல் பலனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக