அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, மே 18, 2012

இஸ்லாமிய உலகம்: 2011

2010 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் 23 வருடங்கள் துனீசியாவின்  ஜனாதிபதியாக இருந்த ஸைன் அல் ஆப்தின் பின் அலி 2011 ஜனவரி மாதம் 14 ஆம் தேதி  ஆட்சி கவிழ்க்கப்பட்டார்.

எகிப்தில் 2011 ஜனவரி மாதம் 25 தேதி ஆரம்பமான மக்கள் புரட்சியினால் 2011 பிப்ரவரி  11 ஆம் தேதி, 30 வருடங்கள் எகிப்தின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹூஸ்னி முபராக் ஆட்சி கவிழ்க்கப்பட்டார். 2011 ஜனவரி மாதம் 25 தேதி எகிப்தில் ஆரம்பமான மக்கள் புரட்சி இதுவரை தொடர்கின்றது.

டுனீசியாவில் தோன்றிய புரட்சிகள் ஏனைய அரபு நாடுகளையும் சென்று அடைந்தன. இவ்வகையில் 2011 பிப்ரவரி  15 ஆம் தேதி  லிபியாவில்  ஆரம்பமானது. தொடர்ச்சியாக நடைபெற்ற இப்புரட்சியினால்  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயுதமேந்தி அரசாங்கப் படைகளுடன் போரிட்டனர். இவர்களுக்கு உதவியாக நேட்டோ படை லிபியாவின் அரச இலக்குகள் மீது வான் தாக்குதல்களை தொடர்ந்தன. ஏறத்தாள 8 மாதங்கள் நீடித்த இப்புரட்சியானால் லிபியாவை 42வருடங்களாக ஆட்சிசெய்தவரான கர்னல் முஅம்மர் கடாபி 2011 அக்டோபர்  20ஆம் தேதி  புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். பின்னர் 2011 அக்டோபர் 23ஆம் தேதி லிபியா சுதந்திர நாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.

யமனை 33வருடங்களாக ஆட்சி செய்து வரும் யமன் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிகிக்கு எதிரான மக்கள் புரட்சி 2011 பிப்ரவரி 3ஆம் தேதி ஆரம்பமானதுடன் தற்போதும் அது தொடர்கின்றது.

பஹ்ரைனில் 2011 பெப்ரவரி 14ஆம் தேதி  மக்கள் எழுச்சி ஆரம்பமானதுடன் இதுவரை அது தொடர்கின்றது.

சிரியாவில் ஜனாதிபதி பஸர் அஸாதுக்கு எதிராக 2011 மார்ச் 15ஆம் தேதி மக்கள் எழுச்சி ஆரம்பமானதுடன், தற்போதும் அது தொடர்கின்றது.

2011 ஏப்ரல் 11ஆம் தேதி  பிரான்ஸ் புர்கா தடைச்சட்டத்தை அமுல்படுத்தியது.

அல் குவைதா அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான ஒஸாமா பின்லேடன் 2011 மே 2 ஆம் தேதி  அமெரிக்க இராணுவத்தால் பாகிஸ்தானின் அப்தாபாத் நகரில் வைத்துசுட்டுக் கொல்லப்பட்டார்.

பலஸ்தீனின் காஸா நகரையும் எகிப்தையும் இணைக்கும் ரபா எல்லை நான்கு வருடங்களின் பின்னர் 2011 மே 28 ஆம் தேதி  அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

துருக்கியில் 2011 ஜூன் 12 ஆம் தேதி 17வது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ரசீப் தையிப் எர்டோகனின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி அமோக வெற்றி பெற்றதுடன், எர்டோகன் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக தெரிவானார்.

தென் சூடான் எனும் கிறிஸ்தவ நாடு 2011 ஜூலை 10ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

2011 ஜூலை 23ஆம் தேதி  பெல்ஜியம் புர்கா தடைச்சட்டத்தை அமுல்படுத்தியது.

2011 செப்டம்பர் 9 ஆம் தேதி எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பலஸ்தீன் நிரந்தர உறுப்பு  நாடாக்குவதற்கான பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையில் 2001 செப்டம்பர் 23ஆம் தேதி பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸால் முன்வைக்கப்பட்டது.

கலாநிதி தாஹிர் அல் காதிரி தலைமையிலான உலக அமைதி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான லண்டன் பிரகடனம் 2011 செப்டம்பர் 24ஆம் தேதி  அங்கீகரிக்கப்பட்டது.

2011 அக்டோபர் 7ஆம் தேதி  சமாதானத்துக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் யெமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான் விருதுபெற்றார்.

2011 அக்டோபர் 8 ஆம் தேதி ஹமாஸிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கைதிகள் பரிமாறப்பட்டது. 25வயதுடைய இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவருக்காக 1000 பலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

2011 அக்டோபர் 23ஆம் தேதி  துருக்கியின் கிழக்குப்பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வினால் 600 பேர் கொல்லப்பட்டனர்.

மக்கள் புரட்சியின் பின்னர் டியூனிசயாவில் 2011 ஒக்டோபரில் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அந்நாட்டின் அந்நஹ்தா இஸ்லாமிய கட்சி வெற்றிபெற்றது.

2011 அக்டோபர் 31ஆம் தேதி  உலக ஜனத்தொகை 7 பில்லியனை எட்டியது.

2011 நவம்பர் 1 ஆம் தேதி பலஸ்தீன் யுனேஸ்கோ அமைப்பில் அங்கத்துவ நாடாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

2011 நவம்பர் 27ஆம் தேதி  அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலால் 24 பாகிஸ்தான் இராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.

2011 டிசம்பர் 18ஆம் தேதி  அமெரிக்கப்படைகள் ஈராக்கிலிருந்து முற்றாக வாபஸ் பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்