B.அப்துல் ஹமீது |
பழங்குடியின பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் :
கடந்த 22ம் தேதி திருகோவிலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு திருட்டு வழக்கின் விசாரணைக்காக டி.மண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை அழைத்துச் சென்ற காவல் துறையினர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்த காவல் துறையினர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்போது அவர்கள்
தவறு செய்திருப்பதால்தான் ஐந்து காவல் துறையினர் தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இன்னும் அவர்கள் கைது
செய்யப்படாமலிருப்பது சரியல்ல. தவறு செய்த காவல் துறையினர் கைது
செய்யப்படுவதோடு அவர்கள் துறை ரீதியாக நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட
வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு இழப்பீட்டை ரூ 10 லட்சமாக
உயர்த்தி வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என SDPI தமிழ் நாடு மாநில
பொதுச்செயலாளர் B.அப்துல் ஹமீது அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக