பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை குஜராத்தில் பாஜக ஆட்சியின்கீழ்
சோதனைக்கூடத்தில் கொன்று குவித்து விட்டு பாவக்கறையை போக்க முஸ்லிம்களை
ஒருசில பதவிகளில் அமர்த்தியும் தொப்பி அணிந்த ஒருசிலருடன் போட்டோவுக்கு
போஸ் கொடுத்து அழகு பார்த்து அதே சோதனையை மீண்டும் கர்நாடகத்திலும்
நடத்தபட உள்ளது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் பகல்கொட்டா மாவட்டத்திலுள்ள தவலேஷ்வர என்ற ஊரிலுள்ள வக்ப் வாரியத்திற்கு சொந்தமான பள்ளிவாசல், உர்து பள்ளிக்கூடம் மற்றும் அடக்கஸ் ஸ்தலத்தை இடித்து தள்ளி ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் சங்க மதபிரிவினைவாத கூட்டம் கங்கணம் கட்டி வருகிறது.
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் பகல்கொட்டா மாவட்டத்திலுள்ள தவலேஷ்வர என்ற ஊரிலுள்ள வக்ப் வாரியத்திற்கு சொந்தமான பள்ளிவாசல், உர்து பள்ளிக்கூடம் மற்றும் அடக்கஸ் ஸ்தலத்தை இடித்து தள்ளி ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் சங்க மதபிரிவினைவாத கூட்டம் கங்கணம் கட்டி வருகிறது.
அதிர்ச்சியடைந்த
முஸ்லிம்கள் வக்ப் செயயப்பட்ட பொது சொத்துக்களை பாதுகாக்கவும் இந்தியாவின்
மதசார்பின்மையை பாதுகாக்கவும் வேண்டி பள்ளிவாசல் ஆக்கிரமிப்பிற்கு
எதிர்ப்பு தெரிவிக்கவே சங்க பரிவார கும்பல், முஸ்லிம்கள் மீது அவதூறு
பிரசாரத்தை தொடங்கி, ஆண்டாண்டுகாலம் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும்
சமூகங்களிடையே மதபிரிவினைவாத உணர்வுகளை தூண்டி வருகிறது. பள்ளிவாசல்
இடத்தில் தான் சாலை அமைக்கவேண்டும் என்றும் அதற்கு முஸ்லிம்கள்
சம்மதிக்காவிட்டால் அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது
விற்கக்கூடாது என்ற மதவாத பிரசாரமும் செய்ய தொடங்கியுள்ளது.
சங்கபரிவாரத்தின் இந்த சமூக பகிஷ்கார பிரிவினைவாத பிரசாரத்தை எதிர்த்து
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா தலைமையில் சிந்தகியில் உள்ள
திப்பு சுல்தான் சதுக்கத்தில் இருந்து தொடங்கிய மக்கள் பேரணி மாநில
கவர்னருக்கு புகார் கடிதம் தாஷில்தார் வாயிலாக சமர்பிக்கப்பட்டது. மாவட்ட
தலைவர் அப்துல் ஹமீது அவாதி மற்றும் மாவட்ட கமிட்டி உறுப்பினர் மொய்னுதீன்
ஆகியோர் போராட்டத்தை வழிநடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக