அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், அக்டோபர் 22, 2012

"நீதிக்கான முழக்கம்" கோவை மண்டல மாநாடு

குறிவைக்கப்படும் முஸ்லிம்கள், நீதிக்கான முழக்கம் கோவை மண்டல மாநாடு நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 15 நாட்களில் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் மாநாடு நேற்று கலை 10:30 மணியளவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் கோடியேற்றி வைக்க இனிதே துவங்கியது.

சனி, அக்டோபர் 20, 2012

பிடிக்காதவர்களை ஒடுக்கத்தான் ரெளடிகள் பட்டியலா? நீதிபதி ஆவேசம்

காவல் துறை நினைத்தால், ஒருவரை எப்படி வேண்டுமானாலும் பழிவாங் கலாம் என்பதற்கு ஒரு உதாரணம் வேடியப்பன் வழக்கு.  

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வேடியப்பன். அரூர் அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் சேவைக்கு 2,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக அவரிடம் சிலர் புகார் சொன்னதை வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை அரூர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாகப் பேச அவரை வரச்சொல்ல... அந்த சந்திப்பில் மோதல் நடந்துள்ளது.

வியாழன், அக்டோபர் 18, 2012

SDPI கட்சியின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம்

SDPI கட்சியின் பூரண மதுவிலக்கிற்கான போராட்டம் அக்டோபர் 2ந்தேதி முதல் அக்டோபர் 17 வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. மதுவினால் ஏற்படும் தீங்குகளை மக்களுக்கு எடுத்துக்கூற சுவர் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் ஆகியவற்றை செய்தனர். அரசு மதுக் கடைகளை இழுத்து மூடவேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் 17ந்தேதி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் SDPI கோவை மாவட்டத் தலைவர் எ.முஸ்தபா அவர்களின் தலைமையில் நடந்தது.

புதன், அக்டோபர் 17, 2012

குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குழு மக்களை அவர்களின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக சந்திக்கும். ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, மணிப்பூர், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலயாளம் ஆகிய மொழிகளில் சுவரொட்டிகளும் பிற பிரச்சார சாதனங்களும் விநியோகம் செய்யப்படும். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழுக்கள் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் பத்து இலட்சம் நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாய், அக்டோபர் 16, 2012

கல்விக்கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்  கோவையில் உயர்கல்விக்கான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி 14 ம் தேதி மாலை 5 மணியளவில் உக்கடம் அருகிலுள்ள CGMA ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் A.S. இஸ்மாயில் அவர்கள் தலைமையில் 24 லட்சம் ரூபாய்க்கான கடன் உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அவர்களது  பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டார்கள்.

வியாழன், அக்டோபர் 11, 2012

கர்நாடக பாஜகவில் பிளவு: எடியூரப்பா புதிய கட்சி தொடங்க திட்டம்

கோஷ்டிப் பூசலுக்கு பெயர் போன கட்சி காங்கிரஸ் என்று அவ்வப்பொழுது செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மத்தியில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் பாஜகவும் அதற்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை என்பதை பல்வேறு நிகழ்வுகள் மூலம் நிரூபித்து வருகிறது. உதாரணத்திற்கு, பாஜக தலைவர் நிதின் கட்கரிக்கு எதிராக கோபிநாத் முண்டேவையும், குஜராத்தில் மோடிக்கு எதிராக கேசுபாய் படேலையும், ராஜஸ்தானில் எதிர்கட்சித் தலைவர் வசுந்தரா ராஜேவிற்கு எதிராக முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியாவையும் குறிப்பிடலாம். அந்த வரிசையில் கர்நாடக பாஜகவிற்கு இடையூறாக இருந்த எடியூரப்பாவும் சேர்ந்துள்ளார். கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா பாரதீய ஜனதா கட்சியில் இருந்து டிசம்பர் மாதம் வெளியேறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அசாமில் 18 லட்சம் குழந்தைகள் உணவில்லாமல் தவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த மூன்று மாதங்களாக சுமார் 18 லட்சம் குழந்தைகள் உணவு, தண்ணீர், மருத்துவ உதவி, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக சர்வதேச அளவில் செயல்படும் அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

லன்டனில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, அசாமில் வெள்ளத்தால் 4.89 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் பெருமளவு பாதிப்பு எனபது குழந்தைகளுக்கு மட்டுமே.

புதன், அக்டோபர் 10, 2012

ஹரியானா மாநில தொடர் கற்பழிப்புகள்: கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு சோனியா உத்தரவு

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஹரியானா மாநிலத்தில் இந்த ஒரு மாதத்தில் நடந்த 12 கற்பழிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கற்பழிக்கப்பட்ட தலித் பெண் தீக்குளித்தது மற்றொரு மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்தது என பல சம்பவங்கள் ஹரியானாவில் அரங்கேறியுள்ளது.

பீகாரில் தலித் பெண் எரித்துக்கொலை: உயர் ஜாதியினரின் அட்டூழியம் அதிகரிப்பு (வீடியோ இணைப்பு)

பீகார் மாநிலத்தில் கயா என்ற பகுதியைச்சேர்ந்த புதுக்வா தேவி 35 என்ற தலித் பெண்ணை உயர் ஜாதிப்பிரிவினர் எரித்து கொலை செய்துள்ளனர்.

இந்தியாவின் வடமாநிலங்களில் தலித் (தாழ்த்தப்பட்டவர்கள்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்


மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.

மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.

செவ்வாய், அக்டோபர் 02, 2012

பாரதியார் பற்றியான ஆய்வு

 

bharathi4.jpg அப்படியென்ன பொல்லாத பாரதியின் காலம்..?
-வே. மதிமாறன்
 முன்னுரை

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக் கண்டத்தில் இருந்தபோது, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதில் முக்கியமான இரண்டு,
1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது.
2. இந்த இந்தியச் சமூகம், நிலப்பிரபுத்துத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாறும் முயற்சியில் இறங்கியது. ஏறக்குறைய மாறியது.
இதில் மிகக் குறிப்பாக இந்தியாவின் நகரங்கள், செழிப்பான பகுதிகள் முதலாளித்துவ முகம் பெறலாயின. இந்த நகரங்களிலும், செழிப்பான பகுதிகளிலும் வாழ்ந்த - இந்திய மன்னர்கள், செல்வந்தர்கள், பார்ப்பனர்கள் இவர்களுக்கு நிலப்பிரபுத்துவ தோல் உறிந்து, முதலாளித்துவ தோல் வளர ஆரம்பித்தது.
மன்னர்களும், செல்வந்தர்களும் கள்ளுப் பானையிலிருந்து - விஸ்கி பாட்டிலுக்கு மாறினார்கள். முதலாளித்துவ `சொகுசு` தன் மீது படரும் வரை பொறுமையாக அமைதி காத்தார்கள்.
ஆனால், பார்ப்பனர்கள் முதலாளித்துவம் தம்மை வந்து அடையும்வரை காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை அல்லது பொறுமையாக இருந்தால், ‘வேலைக்காகாது’ என்ற காரணத்தால், முதலாளித்துவத்தை தன் இரண்டு கைகளையும் நீட்டி அன்போடு, `வருக, வருக` என்று வரவேற்றபடி, அதிவேக வாகனத்தில் ஏறி, முதலாளித்துவத்திடம் முதலில் சென்றடைந்தார்கள்.
மன்னர்களிடம் இருந்த தனது மரியாதைக்குரிய புரோக்கர் பணியை அல்லது ஆலோசனை வழங்கும் பணியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தானாகவே `பணி மாற்றம்` செய்து கொண்டார்கள்.

திங்கள், அக்டோபர் 01, 2012

1870 பணியிடங்கள் நிரப்ப 9.8 லட்சம் பேர் எழுதிய வி.ஏ.ஓ தேர்வில் 20 சதவீதம் பேர் ஆப்செண்ட்

தமிழகம் முழுவதும் விஏஓ தேர்வை 9.8 லட்சம் பேர் எழுதினர். குளறுபடிகள் நடக்காமல் தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1,870 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த ஜூலை 9ம் தேதி வெளியிட்டது. அதன்படி, விஏஓ பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு, பிற்பகல் 1 மணி வரை நடந்தது.

அரசு பயங்கரவாதத்தை கண்டித்த உச்ச நீதி மன்றம்

உச்ச நீதி மன்றம் 
"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில் குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது.  குஜராத்துக்கு மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு, காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும் சேர்த்தே பொருந்தும்!

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்