SDPI கட்சியின் பூரண மதுவிலக்கிற்கான போராட்டம் அக்டோபர் 2ந்தேதி முதல் அக்டோபர் 17 வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. மதுவினால் ஏற்படும் தீங்குகளை மக்களுக்கு எடுத்துக்கூற சுவர் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் ஆகியவற்றை செய்தனர். அரசு மதுக் கடைகளை இழுத்து மூடவேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் 17ந்தேதி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் SDPI கோவை மாவட்டத் தலைவர் எ.முஸ்தபா அவர்களின் தலைமையில் நடந்தது.
இதில் SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் அவர்களும், மாமன்ற உறுப்பினர் முஹம்மது சலீம் அவர்களும், கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர். எராளமான பெண்களும் குழந்தைகளுடன் வந்து மதுவுக்கு எதிரான தங்கள் ஆதரவை பதிவு செய்தனர். 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக