பீகார் மாநிலத்தில் கயா என்ற பகுதியைச்சேர்ந்த புதுக்வா தேவி 35 என்ற தலித் பெண்ணை உயர் ஜாதிப்பிரிவினர் எரித்து கொலை செய்துள்ளனர்.
இந்தியாவின் வடமாநிலங்களில் தலித் (தாழ்த்தப்பட்டவர்கள்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் பீகாரின் கயா பகுதியில் புதுக்வா தேவி தன் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இவருக்கு மத்திய அரசின் "இந்திரா அவாஸ் யோஜனா" திட்டத்தின் கீழ் வீடு
பெற்றுத் தருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த உயர் ஜாதியைச் சேர்ந்த,
அரசியல் செல்வாக்குடைய காவிகள் சிலர் வாக்குறுதி அளித்தனர்.
இந்தக் காரணத்தைக் கூறி அடிக்கடி அவரிடமிருந்து பணம் பெற்று வந்த
இவர்கள், சமீபத்தில் பணம் கேட்ட போது புதுக்வா தேவி தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் புதுக்வா தேவியை தாக்கியதோடு அவர் மீது
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயமடைந்த, தேவி கடந்த ஞாயிறன்று
இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் ஒருவரை கைது செய்து மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக