குறிவைக்கப்படும் முஸ்லிம்கள், நீதிக்கான முழக்கம் கோவை மண்டல மாநாடு நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 15 நாட்களில் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் மாநாடு நேற்று கலை 10:30 மணியளவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் கோடியேற்றி வைக்க இனிதே துவங்கியது.
அதன்பிறகு 11 மணியளவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் காலித் முஹம்மது அவர்கள் புகைப்படக் கண்காட்சியை துவங்கி வைத்தார். முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் துவங்கி இஸ்லாம் அரபு தீபகற்பத்தை கடந்து மற்ற நாடுகளிலும் காலூன்றியதை விளக்கும் புகைப்படங்களும், குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன. பிறகு இஸ்லாம் இந்தியாவில் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பவங்களின் குறிப்புகளும், பண்டைய இந்திய முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த செழுமையான வாழ்க்கை முறையும் விளக்கப்பட்டிருந்தன. உரிமைக்கான குரல் கொடுத்தாலே முஸ்லிம்களை சிறையில் தள்ளும் காலகட்டத்தில் முஸ்லிம்களின் உயிராக, ஆன்மாவாக மாறிப்போயிருக்கும் பாப்புலர் பிரண்ட்டின் வருகைக்குப் பிறகு முஸ்லிம்களுக்காக செய்த களப்பணிகளின் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. மொத்தத்தில் முஸ்லிம்களின் வரலாற்றை தத்ரூபமாக விளக்கப்பட்டிருந்தது.
காலை சுமார் 10 மணிவரை மழைச்சாரல் வந்துகொண்டிருக்க, பகதூர்ஷா திடல் - மைதானத்தை பாப்புலர் ஃபிரண்ட் செயல் வீரர்கள் செப்பனிட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் கடுமையான உழைப்பைக்கண்ட தாய்மார்களும், பெரியோர்களும், குறிப்பாக பாப்புலர் ஃபிரண்ட் செயல்வீரர்களும் மாநாடு சிறப்பாக நடக்க துஆ செய்துகொண்டே இருந்தனர். அல்லாஹ்வின் மாபெரும் அருளால் அதன் பிறகு மழை பெய்யவில்லை.
மாலை 5 மணியளவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்டத் தலைவர் கே.ராஜா ஹுசைன் அவர்கள் வரவேற்புரையாற்ற மாநாடு பொதுக் கூட்டம் துவங்கியது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத்தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து ஆல்-இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மகபூப் அன்சாரி பைஜி அவர்கள் உரையாற்றினார்.
பிறகு தேசியத் தலைவர் E.M.அப்துல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். கோவை கேரளத்திற்கு அருகில் இருப்பதால் மொழிபெயர்ப்பு தேவையில்லை என்ற காரணத்தினால் மலையாளத்திலேயே பேசுகிறேன் என்று பேசத் துவங்கினார். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்கின்றனர். மக்கள் வளம் நிறைந்த பாப்புலர் ஃபிரண்ட்டிற்கு நிதி திரட்டுவது ஒன்றும் சிரமமான பணியல்ல. அஸ்ஸாம் நிவாரண நிதிக்காக கடந்த நோன்புப் பெருநாள் அன்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் சுமார் 30 நிமிடங்களுக்குள் தமிழகத்தில் ரூபாய் 42 லட்சத்தையும், கேரளத்தில் ரூபாய் 62 லட்சத்தையும் திரட்டி அனுப்பி வைத்தனர். இந்தியா முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா செய்து வரும் மக்கள் நலப் பணிகளை பட்டியலிட்டார். அதனால் தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஒவ்வொரு வீட்டிலுள்ள அடுக்களை வரை சென்றுள்ளது. அதற்கு இங்கு ஆண்களை விட அதிகமாகக் கூடியிருக்கும் பெண்களே சாட்சி என்று உரைத்தார். மலேகானில் குண்டு வைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று தெரிந்த பிறகும் அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை விடுதலை செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக சுமத்தப்படும் அவதூறுகளை சுட்டிக்காட்டி மறுத்தார். இந்திய அரசியல் சாசனத்தின் நெறிமுறைகளுக்கு மாறுசெய்யாமல் செயல்பட்டுவரும் பாங்கை அழகுற விளக்கினார்.
அதைதொடர்ந்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) மாநிலத் துணைத் தலைவர் கானா.குறிஞ்சி அவர்கள் உரையாற்றினார். அவர் தனது பேச்சில் தெஹல்கா பத்திரிக்கையாளர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆதாரங்களை திரட்டி சமர்ப்பிததாலும், டீஸ்டா செடல்வாட் போன்ற மனித உரிமை ஆர்வலர்களின் பெரும் முயற்சியாலும் நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் 92 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதே போன்ற படுகொலைகள் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு மும்பையில் நடந்தது. ஆனால் இன்று வரை ஒருவர் கூட தண்டிக்கப்படாமல் இருக்கும் மோசமான நிலையை சுட்டிக்காட்டினார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சிலை வைப்பதாக இருந்தால், முதல் சிலை திப்பு சுல்தானுக்கு வைக்க வேண்டும் என்ற ராஜாஜி அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டினார். இந்தியாவை பாசிசத்திலிருந்து மீட்க முஸ்லிம்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து போராடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து உரையாற்றிய SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் அவர்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் நலப் பணிகளுக்கு SDPI என்றும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். கடந்த 17ஆந்தேதியன்று மதுபானத்திற்கு எதிராக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற அன்று இந்த திடலை வந்து பார்த்த போது 21ஆந்தேதிக்குள் எப்படி இவ்வளவு பணிகளையும் முடிப்பார்கள் என்று எனக்குள் ஒரு ஐயம் ஏற்பட்டது. இன்று இங்கு வந்து பார்த்த பிறகு மலைத்துப் போனேன். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் ஏற்றுக் கொண்ட எந்தப் பணியானாலும் சிரமம் பாராது உழைப்பார்கள் என்பதற்கு இது போதுமான அத்தாட்சியாகும் என்று சுட்டிக் காட்டினார்.
பிறகு பாப்புலர் ஃபிரண்ட்டின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில், பாப்புலர் ஃபிரண்ட் முஸ்லிம்களுக்கு செய்துவரும் அறப்பணிகளை விவரித்தார். இந்திய முஸ்லிம்களின் ஆன்மாவாக பாப்புலர் ஃபிரண்ட் உருவாகி இருப்பதை சுட்டிக்காட்டினார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஹிந்துத்துவ (காவி, பாஸிச) சிந்தனை கொண்ட சில உளவுத் துறையினர் பாப்புலர் ஃபிரண்ட்டிற்கு எதிராக அவதூறுகளை கட்டவிழ்த்துக் கொண்டே இருப்பதை சுட்டிக் காட்டினார். பாப்புலர் ஃபிரண்ட் டெல்லியில் நடத்திய சமூக நீதி மாநாட்டின் போது தேசியத் தலைவர் அவர்கள், இது போன்றதொரு மாநாட்டை டெல்லியில் நாம் கூட்டுவோம் என்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? என்று கேட்டதையும், அதற்கு இல்லை என்று தான் பதிலளித்ததையும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். இது போன்ற முன்னேற்றங்களை உலவுத் துறையிலுள்ள ஹிந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள் என்றும் கூறினார்.
பிறகு மாநாட்டின் தீர்மானங்களை வடக்கு மாவட்டத் தலைவர் முஹம்மது ரசூல் அவர்கள் வாசிக்க, சேலம் மாவட்ட தலைவர் முஹம்மது பயாஸ் நன்றியுரை கூற மக்கள் வெள்ளம் மாநாட்டுச் செய்திகளை சுமந்தவர்களாக எட்டுத் திக்கும் களைந்து சென்றனர்.
இம்மாநாடு தமிழக பாப்புலர் ஃபிரண்ட்டின் பிறப்பிடமான கோவை மாநகரத்திற்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மாநாடு நடந்த இதே போத்தனூர் சாலையில் சகோதர இயக்கங்களால் பல மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அம்மாநாடுகளில் கூடிய கூட்டங்களை விட பாப்புலர் ஃபிரண்ட் மாநாட்டின் கூட்டம் மிகைத்தே இருந்ததை சகோதர இயக்கத்தவர்களாலேயே சுட்டிக்காட்டப்பட்டது. எல்லாப் புகழும் அகில உலகையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே உரித்தானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக