வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
அசாமில் கடந்த மூன்று மாதங்களாக சுமார் 18 லட்சம் குழந்தைகள் உணவு,
தண்ணீர், மருத்துவ உதவி, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து
வருவதாக சர்வதேச அளவில் செயல்படும் அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
லன்டனில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, அசாமில் வெள்ளத்தால் 4.89 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் பெருமளவு பாதிப்பு எனபது குழந்தைகளுக்கு மட்டுமே.
லன்டனில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, அசாமில் வெள்ளத்தால் 4.89 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் பெருமளவு பாதிப்பு எனபது குழந்தைகளுக்கு மட்டுமே.
உலகின் எந்த பகுதியிலும் இயற்கையால் பாதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு இழப்பானாலும் அதில் பாதிக்கப்படுவது குழந்தைகளாகவே இருப்பதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 1.8 மில்லியன் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இடமாற்றம், உணவு பற்றாக்குறை மற்றும் சுத்தமான நீர் என பல துன்பங்களையும் சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல், இயல்பான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் ஆழ்ந்த மன அழுத்தத்தால அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அமைப்பு நெருக்கடியில் இருக்கும் அசாம் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர், உணவு, விளையாட்டு மற்றும் படிக்கும் இடங்களுக்கு ஏற்ற இடத்தையும் அமைத்து கொடுத்து, அவர்க்ளின் பெற்றோருக்கு நிதி உதவிகளையும் செய்து வருகிறது.
இதே அமைப்பை சேர்ந்த 95 வயதான சமூக ஆர்வலர் தார்பாயால் தங்குமிடம் அமைத்து, சுகாதார கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் உதவிகளையும் வழங்கி பாரபெட்டா, நல்பாரி, மற்றும் மொரிகொன் ஆகிய தெற்கு அசாம் பகுதிகளில் வசிக்கும் 35,000 குழந்தைகளை கொண்ட 10,200 கூடார மக்களுக்கு உதவி வருகிறார்.
ஆனால் அரசின் மூலம் இவர்கள் ஒதுக்கப்பட்டனர் பின்னர் அவர்களின் பிரச்சனைகள் குறித்து கவனம் கொள்ள மத்திய மாநில அரசுகள் தயாராக இல்லை என மக்கள் குற்றம் சாட்டுயுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக